புதன், 29 ஏப்ரல், 2026

வடமாநிலம் எங்கும் கலப்படம் நீக்கமற நிறைந்திருக்கிறது

 தீக்கதிர் : தாராளமாகப் புழங்கும் கலப்படப் பொருட்கள்
புதுதில்லி 
கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் இந்தியாவின் பல் வேறு மாநிலங்களில் கலப் படப் பொருட்கள் தொடர்பான நட வடிக்கைகளில் பெரும் அளவி லான போலி உணவு, மருந்து மற்றும் அன்றாடப் பொருட்கள் கைப்பற்றப் பட்டுள்ளன.
தலைநகர் தில்லியில் போலி சென்சோடைன் பற்பசை தயாரித்த ஆலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு மூடப்பட்டது.
நடவடிக்கையில் 1,800 போலி பற்பசை டியூப்கள், 10,000க்கும் மேற்பட்ட காலி டியூப்கள், 130 கிலோ கலப்பட மூலப்பொருட்கள் என பெரும் அள விலான பொருட்கள் கைப்பற்றப் பட்டன.


அதே நகரில் மற்றொரு நடவ டிக்கையில் செரிமான மருந்தான ஈனோவின் ஒரு லட்சம் போலி பாக்கெட்டுகளும், 50,000 போலி நெஸ்கஃபே காபி பாக்கெட்டுகளும் கைப்பற்றப்பட்டன.
இது தொடர் பாக நான்கு பேர் கைது செய்யப் பட்டனர்.
உணவு, மருந்து கலப்படம் 
அயோத்தியாவில் 500 பெட்டி கள் அளவிலான போலி ஃபார்ச்சூன் சமையல் எண்ணெய் கைப்பற்றப் பட்டது.ஹரியானாவில் சர்க்கரை நோய்க்கு பயன்படுத்தப்படும் மவுன்ஜாரா ஊசி மற்றும் போலி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன.
விசாரணையில், இதற்கான மூலப்பொருட்கள் சீன இணைய வணிக நிறுவனமான அலிபாபா மூலம் கொள்முதல் செய்யப்பட்ட தாகத் தெரியவந்துள்ளது.
மீரட்டில் 2,800 கிலோ போலி வெண்ணெய் கண்டுபிடிக்கப்பட் டது. பால் பயன்படுத்தாமல் ரசா யனங்கள் மட்டுமே கொண்டு தயா ரிக்கப்பட்ட இந்த வெண்ணெய், தில்லியிலுள்ள பல கடைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
போலி நெய்; செயற்கை மாம்பழம் 
சூரத்தில் 2,029 கிலோ போலி நெய் கண்டுபிடிக்கப்பட்டது.சுமார் 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான இந்தக் கலப்பட நெய் ஆலை கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வந்துள்ளது என்பது அதிர்ச்சி தரும் தகவலாகும் .ஹைதராபாத்தில் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட 200 கிலோ மாம்பழங்கள் கைப்பற்றப்பட்டன.
பற்பசை முதல் இன்சுலின் ஊசி வரை, வெண்ணெய் முதல் மாம்ப ழம் வரை இத்தகைய கலப் படங்கள் மக்களின் உடல் நலத்தை மட்டுமல்ல, உயிரையும் பணயம் வைக்கின்றன.
ஆனால் கண்டுபிடிக்கப்படுவது இந்த சமூக விரோத வலையின் சிறு பகுதியே என்பதே கசப்பான உண்மை.
அரசு தீவிரமான, தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இந்தத் தொழிலை அடியோடு ஒழிப்பது சாத்தியமில்லை.
எனவே அரசு கலப்படப் பொருட்களை தயாரிப்ப வர்களை தீவிரமாக கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.
நன்றி : தீக்கதிர் 29 /04 /26.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக