மின்னம்பலம் - Kavi : ரவுடி நாகேந்திரன் மரணமடையவில்லை… பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அவரை தமிழக காவல்துறை தப்பவைத்துவிட்டது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024 ஜூலை மாதம் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஏ1 ஆக சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை கைதியான ரவுடி நாகேந்திரன் உடல் நலக் குறைவு காரணமாக கடந்த அக்டோபர் 9ஆம் தேதி மரணமடைந்தார்.
அவரது உடல் ஸ்டான்லி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்து.
சனி, 8 நவம்பர், 2025
“ரவுடி நாகேந்திரன் இறக்கவில்லை” : நீதிமன்றத்தில் ஆம்ஸ்ட்ராங் சகோதரர் பகீர் குற்றச்சாட்டு!
பர்தா அதுவும் முழு முகத்தை மூடுற பர்தா இஸ்லாமிய உடை இல்லை.
Ponni Brinda : இதை எத்தனை தடவை சொல்றது அப்படின்னு தெரியல.
ஆனா இஸ்லாமியர்களே இது புரியாம இருக்கிறது ஆச்சரியமா இருக்கு.
பர்தா அதுவும் முழு முகத்தை மூடுற பர்தா இஸ்லாமிய உடை இல்லை.
அது இஸ்லாம் தொடங்குவதற்கு முன்னாடியே அங்க அரபு நாட்டில் இருந்த ஒரு ஆடை..
அந்த நாட்டுல இருந்த பணக்கார பெண்கள் புனிதமானவர்கள் அப்படின்னு காமிக்கிறதுக்காக இந்த மாதிரி திரைக்குப் பின்னால இருப்பாங்க.
ஏழை பெண்கள் இந்த உடையை போட மாட்டாங்க.
(வட இந்திய இந்துக்களிலும் இந்த பழக்கம் இருந்தது).
முகத்தை மறைக்கிற மாதிரி ஆடை போடணும்னு எங்கும் குர்ஆனில் கூட சொல்லலை.
இந்திய இஸ்லாமியர்கள் இந்த உடையை போட்டதும் இல்லை.
தமிழ்நாட்டுல இஸ்லாம் வந்தது எட்டாம் நூற்றாண்டு.
அன்னைக்கில இருந்து 1980 வரைக்கும் இஸ்லாமிய பெண்கள் இந்த பர்தாவை பெருசா போட்டதில்லை.
வெள்ளி, 7 நவம்பர், 2025
இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை கொடுக்க வந்த சுப்பிரமணியம் சாமி . தடுத்த சந்திரஹாசன்
![]() |
| Subramaniam Swamy |
![]() |
| Sjv.Chandrahasan |
![]() |
ராதா மனோகர் திரு சுப்பிரமணியம் சாமி அவர்கள் 10 November 1990 – 21 June 1991 காலப்பகுதியில் இந்திய சட்ட அமைச்சராக பணியாற்றினார்!
இந்தியாவில் தங்கி இருந்த இலங்கை தமிழர்களை பொறுத்தவரை இது ஒரு முக்கியமான காலக்கட்டம்,
(மேலே குறிப்பிட்ட காலப்பகுதியைவிட மேலும் சில மாதங்கள் திரு சுப்பிரமணியம் சாமி அவர்கள் காபந்து அரசிலும் care taker government அதே பதவியில் இருந்தார்)
அப்போதுதான் திரு சுப்பிரமணியம் சாமி அவர்கள் அன்றைய காலக்கட்டங்களில் இந்தியாவில் தங்கி இருந்த சுமார் ஒரு இலட்சத்திற்கு அதிகமான இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை கொடுக்க முன்வந்தார்.
அவர்களுக்கு குடியுரிமை கொடுப்பதில் தங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று திரு.எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் மகன் திரு எஸ் சி சந்திரகாசனிடம் தெரிவித்தார்.
அதற்கு திரு எஸ் சி சந்திரஹாசன் அவர்களுக்கு குடியுரிமை தேவை இல்லை என்றும் அவர்களுக்கு ஊரில் சொந்த வீடு நிலம் சொத்துக்கள் எல்லாம் உண்டென்றும் அவர்கள் பிரச்சனை தீர்ந்ததும் ஊருக்கு திரும்பி செல்லவே வ்ளரும்புகிறார்கள் என்றும் கூறினார்.
தமிழகத்தில் தங்கி இருந்த இலங்கை தமிழர்கள் சார்பில் பேச இவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது?
கனடாவில் இலங்கை குடும்பமே கொலை குற்றத்தை ஒப்புக்கொண்ட இளைஞர்- ஆயுள் தண்டனை
![]() |
நித்தியானந்தன் உங்கள் தோழன் : கனடாவின் ஒட்டாவாவில் கடந்த வருடம் இலங்கை குடும்பத்தை கத்தியால் குத்தி கொலை செய்த 20 வயது இளைஞன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
அத்துடன், தனுஷ்க விக்ரமசிங்க என்பவரை தாக்க முயற்சித்தமை தொடர்பான குற்றச்சாட்டையும் சந்தேகநபர் ஒப்புக் கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னதாக இலங்கையைச் சேர்ந்த குடும்பம் ஒன்றின் தாய், 04 பிள்ளைகள் மற்றும் அவர்களின் நண்பர் உள்ளிட்ட 06 பேர் கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 06 ஆம் திகதி குத்தி கொலை செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், ஒட்டாவா நீதிமன்றத்தில் குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு, நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, தம்மீது சுமத்தப்பட்ட 06 குற்றச்சாட்டுக்களில், 04 குற்றச்சாட்டுக்களை இலங்கையரான சந்தேக நபர் டி சொய்சா ஏற்றுக் கொண்டுள்ளார்.
சூடான்: உள்நாட்டு போரில் லட்சக்கணக்கில் செத்து மடியும் உயிர்கள்-ஆப்பிரிக்காவின் கண்ணீர்க் கதை!
மின்னம்பலம் - Mathi : ஆப்பிரிக்கக் கண்டத்தின் வடகிழக்கில் அமைந்திருக்கும் சூடான், இன்று உலக வரைபடத்தில் ஒரு துயரச் சின்னமாய் நிற்கிறது.
எகிப்து, லிபியா, சாட், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, தென் சூடான், எத்தியோப்பியா, எரித்திரியா மற்றும் செங்கடல் எனப் பல நாடுகளுடன் எல்லைகளைப் பகிர்ந்துகொள்ளும் இந்த தேசம், நைல் நதியால் இரு பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, வரலாற்றின் நீண்டகால மோதல்களால் செதுக்கப்பட்டுள்ளது. கார்ட்டூம் நகரைத் தலைநகராகக் கொண்ட சூடான், ‘கறுப்பர்களின் நிலம்’ எனப் பொருள்படும் அரபுப் பெயரிலிருந்து உருவானது. ஆனால், அதன் நிலப்பரப்பில் இன்று கண்ணீர் மட்டுமே ஓடுகிறது.
மதமும் கலாச்சாரமும்: ஒரு மோதல் வரலாறு
வியாழன், 6 நவம்பர், 2025
தமிழக அரசின் முடிவே அவலங்களுக்கு காரணம்” - தூய்மைப் பணி பிரச்சினையில் சு.வெங்கடேசன் எம்.பி
Hindu Tamil : மதுரை: ”தூய்மைப் பணியை தனியாருக்கு கொடுக்கக் கூடிய தமிழக அரசின் முடிவே அனைத்து அவலங்களுக்கும் அடிப்படை காரணம்” என்று சு.வெங்கடேசன் எம்.பி தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், “தூய்மைப் பணியை தனியாருக்கு கொடுக்க கூடிய தமிழக அரசின் முடிவு, அனைத்து அவலங்களுக்கும் அடிப்படை காரணம். தனியாருக்கு கொடுக்கும் முடிவை கைவிட வேண்டும். நகரங்களின் தூய்மையையும், வசிக்கும் மக்களின் சுகாதாரத்தையும் பாழாக்கும். கூடுதலான பிரச்சினை என்றால், மதுரை மாநகராட்சியில் தூய்மைப் பணி ஒரு தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் கொடுக்கப்படுகிறது.
ஸ்டாலினை கொலை செய்வது அல்லது நிரந்தரமாக முடக்குவது இதுதான் ஜெயலலிதாவின் திட்டம்.
![]() |
Arul Ezhilan : அந்த இரவில் மேயர் ஸ்டாலினை வேட்டையாடுவதுதான் ஜெயலலிதாவின் நோக்கம்!
முரசொலி மாறன் முன்னால் நின்று ரிக்கார்டரை நோண்டிக் கொண்டிருக்கும் ஆள் நான் தான்.
கலைஞர் கைது என்றால் எனக்கு பேஜர் காலம்தான் நினைவுக்கு வரும்.
விகடனில் சேர்ந்த புதிது, நள்ளிரவில் அசோகன் சார் என்னை அழைத்து ”கலைஞரை கைது செய்துட்டாங்க நீங்களும் போய் கவர் பண்ணிட்டு வாங்க” என்று அனுப்பினார்.
அது பேஜர் காலம் விகடன் அலுவலகத்தில் எனக்கொரு பேஜர் கொடுத்திருந்தார்கள்.
நான் அதை நான் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு கலைஞரை கைது செய்து கொண்டு சென்ற இடமெல்லாம் அலைந்தேன். அரசினர் தோட்டத்துக்குள் CBCID அலுவலகம்
புதன், 5 நவம்பர், 2025
சொஹ்ரான் மம்தானி நியூயார்க் மேயர் தேர்தலில் வெற்றி! முதல் இஸ்லாமியர்!
மின்னம்பலம் Kavi : உலகையே திரும்பிப் பார்க்க வைத்த நியூயார்க் நகர மேயர் தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சோஹ்ரான் மம்தானி அமோக வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளார்.
34 வயதே ஆன இளம் முற்போக்கு சிந்தனையாளரான இவர், நியூயார்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர், இளம் வயது மேயர், மற்றும் முதல் தெற்காசிய வம்சாவளி மேயர் என்ற பெருமைகளை ஒரே நேரத்தில் தட்டிச் சென்றுள்ளார்.
நவம்பர் 4, 2025 அன்று நடைபெற்ற இந்த தேர்தல், அமெரிக்க அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.
செவ்வாய், 4 நவம்பர், 2025
ஒரு கொலை ? ஒரு தற்கொலை? ஒரு தமிழ் எம்பி? என்னதான் நடக்கிறது?
பொன்முடிக்கு மீண்டும் பொறுப்பு : மு.பெ.சாமிநாதனும் துணை பொதுச்செயலாளராக நியமனம்!
மின்னம்பலம் - Kavi : திமுகவில் 5 துணை பொதுச்செயலாளர்கள் இருக்கும் நிலையில் இந்த எண்ணிக்கை 7ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் கட்சியில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இந்த சூழலில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, அமைச்சர் மு. பெ.சாமிநாதன் ஆகியோர் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று (நவம்பர் 4) வெளியிட்டுள்ள அறிவிப்பில்
திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக பணியாற்றி வந்த மு.பெ.சாமிநாதன் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதால் அவருக்கு பதிலாக பத்மநாபன் திருப்பூர் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளராகவும்,
கோவை மாணவியை சீரழித்த குற்றவாளிகளை சுட்டு பிடித்த காவல்துறை
Vasu Sumathi : அண்ணா பல்கலைக்கழக வழக்கில் குற்றவாளி 12 மணிநேரத்தில் கண்டுபிடித்து கைது. 5 மாதத்தில் வழக்கு முடிந்து, 30 ஆண்டுகள் சிறை தண்டனை நிறைவேற்றல்.
கோவை சம்பவத்தில், ஒரு மணி நேரத்தில் 50 போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
இரவு முழுக்க 100 போலீசார் தேடுதல் வேட்டை. 30 மணிநேரத்தில் குற்றவாளிகள் சுட்டு பிடிப்பு.
கூடிய விரைவில் அவர்களுக்கு மிகவும் கடுமையான தண்டனை வழங்கப்படும்.
விரைந்து செயல்பட்ட தமிழ்நாடு அரசுக்கும் தமிழக காவல்துறைக்கும் பாராட்டுக்கள்!
திங்கள், 3 நவம்பர், 2025
335 கிலோ போதைப் பொருள் பறிமுதல்; 6 பேர் கைது: இலங்கை கடற்படை விசாரணை - இந்தியப் பெருங்கடலில்
![]() |
hindutamil.in :ராமேசுவரம்: இந்தியப் பெருங்கடலில் ஆழ்கடல் மீன்பிடி படகு மூலம் கடத்தப்பட்ட 335 கிலோ போதைப் பொருட்களை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து அந்நாட்டைச் சேர்ந்த சேர்ந்த 6 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இலங்கை கடற்படை செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொடர்ந்து சர்வதேச கடற்பகுதியில் போதைப்பொருட்களை ஏற்றிச் செல்லும் படகுகள் மற்றும் கப்பல்கள் பற்றி தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
உலக கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணி!
tamil.mykhel.com Javid Ahamed : மும்பை: இந்திய மகளிர் அணி, ஐசிசி உலக கோப்பையை முதல் முறையாக வென்று சாதனை படைத்துள்ளது இத்தனை ஆண்டுகளாக கடுமையாக போராடியும் தற்போது தான் இந்த கனவு இந்திய மகளிர் கிரிக்கெட்டுக்கு நிறைவேறி இருக்கிறது. இதற்கு வீராங்கனைகளின் திறமை முதன்மையான காரணமாக இருந்தாலும், இந்த கனவை கட்டி பாதுகாத்தது யார் என்பதை தற்போது பார்க்கலாம்.
ஒரு அணியில் திறமையான வீராங்கனைகள் இருந்தால் மட்டும் கோப்பையை வென்று விட முடியாது. அதற்கு மேல் பல விஷயங்கள் இருக்கின்றது. குறிப்பாக ஒரு அணி என்றால் ஒற்றுமை இருக்க வேண்டும். இந்த ஒற்றுமை இல்லாமல் இந்திய மகளிர் அணி பல உலக கோப்பையை இழந்திருக்கிறது.
மூவேந்தர்களையும் கலங்கடித்த புரட்சியாளர்கள் களப்பிரர்கள்- ஆட்சி செய்த (கி.பி.250-கி.பி 600) 350 ஆண்டுகள்
![]() |
![]() |
Vimalaadhithan Mani : பிராமணீயத்துக்கு பலமான சாவு மணி அடித்த களப்பிர மன்னர்கள் வரலாறு பற்றிய ஆழ்ந்த வாசிப்பில் நான் அறிந்து கொண்ட வரலாற்று உண்மைகளே இந்த பதிவு .
களப்பிரர்கள் தமிழகத்தை ஏறக்குறைய கி.பி. 300 - கி.பி. 600 காலப்பகுதியில் ஆண்டுள்ளார்கள். தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களையும் கலங்கடித்த புரட்சியாளர்கள் இந்த களப்பிரர்கள்.
இவர்கள் ஆட்சி செய்த (கி.பி.250-கி.பி 600) 350 ஆண்டுகள் மட்டுமே
தமிழகம் பிராமணீயத்திலிருந்து விடுபட்ட காலகட்டம். பிராமணீயத்தை அடக்கி ஒடுக்கி உட்கார வைத்த ஒரே காரணத்திற்காகவே தமிழகத்தை ஆண்ட களப்பிரர்களின் ஆட்சி பிராமணீய அடிவருடிகளான
வரலாற்று ஆய்வாளர்களால் தமிழகத்தின் இருண்ட காலமாக வருணிக்கப்படுகிறது.
ஞாயிறு, 2 நவம்பர், 2025
திமுக அயலக அணி சார்பு (NRTIA) பஹ்ரைன் விழாவில் நடந்தது என்ன?
Vimalaadhithan Mani : மிகவும் வருத்தத்திற்குரிய திமுகவில் நிலவும் உள்கட்சி அரசியல்.
சமீபத்தில் திமுக அயலக அணி சார்பில் (NRTIA) பஹ்ரைனில் நடந்த விழாவில் குறிப்பிட்ட சில திமுக அபிமானிகள் மட்டுமே அழைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் என்னை போன்ற உடன்பிறப்புகளுக்கு விழாவில் கலந்துகொள்ள அழைப்பு இல்லை.
ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் Most Privileged உடன்பிறப்புகள் மட்டும் அழைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இத்தனைக்கும் PEN நிறுவனம் "திராவிடத்தால் நான்" என்ற தலைப்பில் நான் பேசிய ஒரு நிமிட வீடியோவை மாநிலங்களவை உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் மூலம் வெளியிட்டு இருக்கிறது.
சமீபத்தில் முரசொலியில் கூட எங்கள் குடும்பம் திமுக குடும்பம் என்ற செய்தி வெளியாகி இருந்தது.
சோவியத்தின் ஸ்டோர் ரூம் - டெத் ஆப் ஸ்டாலின் சினிமா விமர்சனம்
![]() |
ராதா மனோகர் : சோவியத் ஸ்டோர் ரூம்!
பிரான்ஸ் பிரிட்டன் ஹாலந்து கூட்டு தயாரிப்பான டெத் ஆப் ஸ்டாலின் திரைப்படம் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்புதான் வெளியானது.
லா மோர்த் து ஸ்டாலின் la mort de staline என்ற பிரெஞ்சு வரலாற்று நாவல் அடிப்படையில் இந்த படம் உருவாகி இருக்கிறது.
சோவியத் அதிபர் ஸ்டாலினின் Joseph Stalin மறைவும் அதற்கு பின்பு எப்படி குருஷேவ் Nikita Khrushchev பதவிக்கு வந்தார்.
அதுவும் சர்வ வல்லமை பொருந்திய இரகசிய படை தலைவன் பெரியா NKVD head Lavrentiy Beria ஒரு புறம்
![]() |
ஸ்டாலினுக்கு எல்லா விதத்திலும் இரண்டாவது இடத்தில் இருந்த மலங்கோவ் Deputy Chairman Georgy Malenkov போன்றவர்களையும் மெதுவாக ஒதுக்கி தள்ளிவிட்டு மேலே வருவது என்பது திகைப்பையும் திகிலையும் ஊட்டும் சம்பவமாகும்.
ரேசர் பிளேட்டின் மீது நடப்பது போன்ற சாகசம் அது.
கொஞ்சம் தவறினாலும் தலை போய்விடும்.
சென்னையில் ஒரு லட்சம் தெருநாய்களுக்கு தடுப்பூசி
கலைஞர் செய்திகள் - Praveen : இதன்படி நாய் பிடிக்கும் பணியாளர்கள் வலைகளை கொண்டு நாய்களை பிடித்த பின்னர் கால்நடை மருத்துவரால் அவற்றிற்கு வெறிநாய்க்கடிநோய் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கம் மருந்து செலுத்தப்படும்.
பின்னர் அந்த நாய்களுக்கு வண்ண சாயம் (Vegetable dye) தெளித்து அடையாளப்படுத்தி அவை மீண்டும் அதே இடத்திலேயே விடுவிக்கப்படுகின்றன.
0இந்த சிறப்பு முகாம்களின் வாயிலாக இதுவரை திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, இராயபுரம், திரு. வி.க நகர், தேனாம்பேட்டை, ஆலந்தூர், அடையாறு மற்றும் பெருங்குடி ஆகிய 10 மண்டலங்களில் இப்பணி நிறைவு பெற்றுள்ளது.
இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்த 6 தமிழர்கள்.. சொத்து மதிப்பு என்ன?
![]() |
ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்த இந்தியவர்களில் 6ம் இடத்தில் கே.பி ராமசாமி உள்ளார். கே.பி.ஆர் நிறுவனத்தின் நிறுவனரான இவரின் மொத்த சொத்து மதிப்பு 3.3 பில்லியன் டாலராகும். டாப் 100 பட்டியலில் 97வது இடத்தில் உள்ளார்.
இந்த பட்டியலில் 5ம் இடத்தில் தொழிலதிபர் மல்லிகா ஸ்ரீனிவாசன் உள்ளார். TAFE நிறுவனத்தின் நிறுவனரான இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 3.35 பில்லியன் டாலராகும். டாப் 100 பட்டியலில் 96வது இடத்தில் உள்ளார்.










