சனி, 13 செப்டம்பர், 2025

ஜனாதிபதி மகிந்தா ராஜபக்ச நாட்டில் பயங்கரவாதத்தை ஒடுக்கியதற்காக தண்டிக்கப்பட்டாரா

 ஜாப்னா முசுலிம் : நான் உயிருடன் இருக்கும் வரை...? மகிந்த வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, விஜேராமவில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறிய பின்னர், அந்த சம்பவம் குறித்து தனது பேஸ்புக் கணக்கில் பதிவொன்றை இட்டுள்ளார். 
அந்தப் பதிவில், ஜனாதிபதிகளுக்கான உரித்துரிமைகளை நீக்கும் சட்டமூலம் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டதன் மூலம் நடைமுறைக்கு வந்த புதிய சட்ட நிலைமைக்கு மதிப்பளித்து, தான் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறியதாகக் குறிப்பிட்டுள்ளார். 
முன்னாள் ஜனாதிபதி தனது பேஸ்புக் கணக்கில் இட்டுள்ள பதிவு பின்வருமாறு, 
"ஜனாதிபதிகளுக்கான உரித்துரிமை நீக்க சட்டமூலம் கடந்த 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் மூலம் நடைமுறைக்கு வந்த புதிய சட்ட நிலைமையை மதித்து, எனக்கு சட்டப்பூர்வமாக ஒதுக்கப்பட்ட விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து நான் நேற்றைய தினம் (11) வெளியேறினேன். 

அமெரிக்க Charlie Kirk கொலை! பாசிசம் அச்சம் தர கூடியது

May be an image of 1 person and text that says 'CHARLIE KIRK TODAY'

 சுமதி விஜயகுமார் :  Charlie Kirk . அமெரிக்காவில் மிக பிரபலம். 
இந்தியாவில் துருவ் ரதீ எப்படி உபி தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினரோ அப்படி, 2024 அமெரிக்கா தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். 
துருவ் பாசிசத்திற்கு எதிராக குரல் கொடுப்பவர். 
Kirk பாசிசத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தவர். 
ட்ரும்பிற்கு நெருங்கியவர். 
கடந்த புதன் அன்று ஒரு பல்கலைக்கழகத்தில் உரையாற்றிவிட்டு மாணவர்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்கையில், கழுத்தில் சுடப்பட்டு இறந்தார்.

இலங்கையில் பாரதிய ஜனதா கட்சி வரவேண்டும்! மறவன்புலவு சச்சிதானந்தம்

இலங்கையில் சைவத்தை மீட்டெடுக்க பாரதிய ஜனதா கட்சி வரவேண்டும்! மறவன்புலவு சச்சிதானந்தம்   "பூனைக்குட்டி வெளியே வந்தது"

இலங்கையின் இறக்குமதி கொள்கைதான் மிகப்பெரிய ஊழல்! அள்ளிக்கோ அள்ளிக்கோ அள்ளிக்கோ

  ராதா மனோகர் :  212,302 Sri Lankan migrant workers brought $5.11 billion in the first eight months of 2025!
2025 முதல் எட்டு மாதங்களில் 212,302 புலம் பெயர் இலங்கையர்கள் குறிப்பாக மத்திய கிழக்கு பணியாளர்கள் 5.11 பில்லியன் அமெரிக்க டாலர்களைக் இலங்கைக்கு கொண்டு வந்துள்ளனர்!
இதைவிட புலம் பெயர் இலங்கை மக்கள் நாட்டுக்கு வந்து போய்க்கொண்டு இறைக்கும் அந்நிய செலாவணியின் கணக்கு இதைவிட பல மடங்கு இருக்க கூடும். 
இப்படி பெரும் தொகையாக  வரும் அந்நிய செலாவணியை அரசு எப்படி செலவு செய்கிறது?
 சொகுசு வாகனங்கள் போன்ற வெறும் ஆடம்பர  பொருட்களின் இறக்குமதிக்கு  பெருவாரியாக வழங்குகிறார்கள் 
மறுபுறத்தில் உள்ளூரில் உற்பத்தி செய்யக்கூடிய கோழி முட்டை கருவாடு உப்பு போன்ற பொருட்களையு இறக்குமதி செய்வதிலும் வீண் விரயமாக்குகிறார்கள்!
இறக்குமதியாளர்களும் உள்ளூர் உற்பத்தியை பாதிக்க கூடிய அளவு வகை தொகை இல்லாமல் இறக்குமதி செய்து கொள்ளை இலாபம் ஈட்டுகிறார்கள்

வெள்ளி, 12 செப்டம்பர், 2025

7 முறை அபார்ஷன்.. சீமான் மீது விஜயலட்சுமி தொடுத்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றம் விசாரணை.. ஒரே பரபரப்பு

 tamil.oneindia.com - Hemavandhana : சென்னை: நடிகை விஜயலட்சுமி கூறிய புகாருக்கு எதிராக, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்த வழக்கானது, இன்று உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.. மேல்முறையீடு மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என்ற விஜயலட்சுமி  கோரிக்கையை ஏற்று உச்சநீதிமன்றம் இன்றைய தினம் இந்த விசாரணையை நடத்த உள்ளது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி, உடலுறவு வைத்துக் கொண்டதாகவும், பிறகு தன்னுடைய கர்ப்பத்தை 7 முறை கலைத்து ஏமாற்றியதாக பிரபல நடிகை விஜயலட்சுமி , சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவம் தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
நடிகை விஜயலட்சுமி தந்த புகார்

சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மன்றம் போட்டி? - மநீம கட்சியினருடன் கமல் ஆலோசனை

 Hindu Tamil: சென்னை: சட்​டப்​பேரவைத் தேர்​தலில் போட்​டி​யிடு​வது தொடர்​பாக கமல்​ஹாசன் தலை​மை​யில் மநீம கட்​சி​யினர் செப்​.18-ம் தேதி முதல் ஆலோசனை நடத்​துகின்​றனர்.
கடந்த 2024 மக்​களவை தேர்​தலில் இண்​டியா கூட்​ட​ணி​யில் மநீம இடம்​பெற்​றது. 
அப்​போது, அக்​கட்​சிக்கு மாநிலங்​களவை எம்​.பி. பதவி வழங்​கு​வ​தாக திமுக தெரி​வித்​தது. 
அந்தத் தேர்​தலில், திமுக உள்​ளிட்ட கூட்​டணி கட்சி வேட்​பாளர்​களுக்கு ஆதர​வாக தமிழகம் முழு​வதும் கமல்​ஹாசன் சூறாவளி பிரச்​சா​ரம் செய்​தார். 
இது வேட்​பாளர்​களின் வெற்​றிக்கு மேலும் பலம் கூட்​டியது.

வியாழன், 11 செப்டம்பர், 2025

அன்புமணி நீக்கம் ராமதாஸ் அதிரடி! மகள் ஶ்ரீ காந்தி உட்பட பாமக நிர்வாக குழு உறுப்பினர்கள் 15 பேரும் எதிர்ப்பு!

 மின்னம்பலம் -vanangamudi  : பாமகவில் இருந்து அன்புமணியை நீக்கிய டாக்டர் ராமதாஸ் முடிவுக்கு அவரது மகள் ஶ்ரீ காந்தியை உள்ளடக்கிய நிர்வாகக் குழுவினர் ஒப்புதல் தெரிவித்து கையெழுத்திடவில்லை என்பதால் அன்புமணியை ராமதாஸ் நீக்கி அறிவிப்பு வெளியிட்டது சரியா?    என்கிற சலசலப்பு எழுந்துள்ளது.
பாமகவின் செயல் தலைவர் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து அன்புமணியை நீக்குவதாக அக்கட்சியின் நிறுவனர் தலைவரான டாக்டர் ராமதாஸ் இன்று (செப்டம்பர் 11) அறிவித்தார். 

பருத்தித்துறை துறைமுக கட்டுமானப்பணி சீனாவை முந்திய இந்தியா

 hindutamil.in : இந்திய அரசின் உதவியுடன் யாழ்ப்பாணத்தில் உள்ள பருத்தித்துறை துறைமுகத்தை மேம்படுத்த இலங்கை ஒப்புதல். இந்திய துணை தூதர் சாய்முரளி மற்றும் யாழ்ப்பாணம் வட மாகாண ஆளுநர் வேதநாயகன்.
ராமேசுவரம்: இலங்​கை​யில் உள்ள பருத்​தித்​துறை மீன்​பிடி துறை​முகத்தை இந்​திய அரசு உதவி​யுடன் மேம்​படுத்த அந்​நாட்டு அரசு ஒப்​புதல் அளித்​துள்​ளது. 
யாழ்ப்​பாணத்​தில் உள்ள பருத்​தித்​துறை மீன்​பிடித் துறை​முகம், இலங்​கை​யின் பிபகு​தி​களை இணைக்​கும் முக்​கிய இடமாக உள்​ளது. 
இந்​தி​யா​வுக்கு மிக அரு​கில், ராமேசுவரம் மற்​றும் வேதா​ரண்​யத்​திலிருந்து 40 கடல் மைல் தொலை​வில் உள்ளது.

ஹமாஸ் தலைவர்களை கத்தாரிலே குறிவைத்த இஸ்ரேல் – அடுத்து என்ன? முழு விபரம்

BBC Tamil ;  ஹமாஸ் தலைவர்களை நம்பிய கத்தாரிலே குறிவைத்த இஸ்ரேல் – அடுத்து என்ன? 
கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன்பு தோஹாவில் ஹமாஸ் தலைவரும் பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை வகித்தவருமான கலீல் அல்-ஹயா-வை நான் நேர்காணல் எடுத்தேன். செவ்வாய்கிழமை மதியம் இஸ்ரேல் தாக்குதல் நடத்திய கட்டடத்திலிருந்து, வெகு தொலைவில் இல்லாத ஒரு வீட்டில் நான் அவரை சந்தித்தேன்.
காஸாவில் போர் தொடங்கியதிலிருந்து ஹமாஸ் தரப்பில் பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை வகித்தவர் அல்-ஹயா. கத்தார் மற்றும் எகிப்திய மத்தியஸ்தர்கள் மூலம் இஸ்ரேலியர்கள் மற்றும் அமெரிக்கர்களுக்கு செய்திகளை அனுப்புவதிலும் பெறுவதிலும் அல்-ஹயா முக்கிய பங்கு வகித்தார்.

புதன், 10 செப்டம்பர், 2025

அதிரும் பிரான்ஸ் - மால்களில் பணம் கொடுக்காமல் பொருட்களை அள்ளிக்கொண்டு போகும் போராட்டம்

May be an image of 3 people, crowd and text that says 'LADEPECHE.fr fr GENERATIONS generation-s.ft all Appel au blocage le 10 septembre Qui est à l'origine du mouvement? L'UNI T, SALAIRES, T,SALAIRES,PENSCON PENSION こー ERLIP'

 சிவா சின்னப்பொடி : பிரான்ஸை உலுக்கும் "இலவச தள்ளுவண்டி " போராட்டம் ! கதிகலங்கி நிற்கும் பல்பொருள் அங்காடிகள் !
 பணம் தேவையில்லை, பொருட்களை அள்ளிக்கொண்டு செல்லுங்கள்! என்பதுதான் பிரான்ஸை இன்று அதிர வைத்திருக்கும் "இலவச தள்ளுவண்டி " போராட்டம்! நாடு தழுவிய மக்கள் எழுச்சியால் பெரும் நிறுவனங்கள் பீதியில் உறைந்துள்ளன.
நாடு தழுவிய "அனைத்தையும் முடக்குவோம்" என்ற மாபெரும் மக்கள் போராட்டம் இன்று வெடித்துள்ளது. ஆனால், வழக்கமான சாலை மறியல், வேலைநிறுத்தங்களைத் தாண்டி, ஒட்டுமொத்த பிரான்சின் கவனத்தையும் ஈர்த்துள்ளது ஒரு நூதனப் போராட்டம். அதன் பெயர்: " இலவச தள்ளுவண்டி போராட்டம் " (Opération Chariot Gratuit).

அதிமுகவை ஒண்றிணைக்க அமித் ஷா கடும் முயற்சி! செங்கோட்டையன் அமித்தையும் நிர்மலாவையும் சந்தித்தார்

 Hindu Tamil : அமித் ஷா, நிர்மலா சீதாராமனுடன் செங்கோட்டையன் சந்திப்பு: பாஜகவின் அணுகுமுறை மாற்றத்தால் அதிமுக கூட்டணியில் சலசலப்பு
கோவையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.
கோவை: டெல்​லி​யில் மத்​திய அமைச்​சர்​கள் அமித் ஷா, நிர்​மலா சீதா​ராமன் உள்​ளிட்​டோரை அதி​முக முன்​னாள் அமைச்​சர் செங்​கோட்​டையன் சந்தித்​துப் பேசி​யது அதி​முக கூட்டணியில் சலசலப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது. அதி​முக​வில் இருந்து பிரிந்து சென்றவர்​களை இணைக்​கும் முயற்​சியை 10 நாட்​களில் தொடங்க வேண்​டும் என்று அக்​கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் பழனிசாமிக்​கு, முன்​னாள் அமைச்​சர் கே.ஏ.செங்​கோட்​டையன் கெடு விதித்​தார்.

மாற்றுத்திறனாளி மீது திமுக பிரமுகர்கள் சரமாரி தாக்குதல்; சேலம் போலீசார் அலட்சியம்!

நக்கீரன் : சேலம் அருகே, காது கேட்க இயலாத மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி கூலித்தொழிலாளியை, திமுக பிரமுகர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள குருக்குப்பட்டியைச் சேர்ந்தவர் எல்லப்பன் (50). கட்டடத் தொழிலாளியான இவர், வாய் பேச இயலாத மற்றும் கேது கேட்காத மாற்றுத்திறனாளி ஆவார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.  

நேபாளத்தில் முன்னாள் பிரதமரின் மனைவி உயிருடன் எரித்துக் கொலை !

 தினமணி :நேபாளத்தில் சமூக ஊடகத் தடைக்கு எதிராக வெடித்த போராட்டம், பெரும் வன்முறை மற்றும் அரசியல் குழப்பங்களுக்கு வழிவகுத்துள்ளது.
இந்த வன்முறைச் சம்பவங்களில், முன்னாள் பிரதமர் ஜாலா நாத் கனலின் மனைவி போராட்டக்காரர்களால் உயிருடன் எரித்துக் கொலைசெய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னாள் பிரதமர் ஜாலா நாத் கனலின் இல்லத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். அப்போது வீட்டிற்குள் இருந்த அவரது மனைவி ராபி லக்ஷ்மி சித்ரகர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

செவ்வாய், 9 செப்டம்பர், 2025

கொழும்பில் இருந்து சென்ற தமிழ் இளைஞனை கொடூரமாக தாக்கிய மக்கள் – சடலமாக மீட்பு

May be an image of 2 people and text that says '<BN BATTI BATTINAATHAM NAATHAM 09.09.2025 www.battina தவறான புரிதலால் மக்களால் தாக்கப்பட்ட தமிழ் இளைஞன் மனமுடைந்து தற்கொலை 0777705362/ 706605362 www.battinaatham.net info.battinaatham.net'

 Mathdusha : கொழும்பிலிருந்து வெலிமடை செல்லும் பேருந்தில் பயணித்த இளைஞன் தவறான இடத்தில் இறங்கியதால் கிராம மக்கள், திருடன் என்று நினைத்து அடித்து, அதை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர்.
இதனால் மனமுடைந்த நபர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக  பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ரொச்சில்ட்  தோட்டத்தில் வசிக்கும் 34 வயதுடைய திருமணமாகாத ராமச்சந்திரன் புவனேஸ்வரன் முரளி என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
விடுமுறை கிடைத்தவுடன் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களை சந்திக்க  வீட்டிற்கு வருவதை குறித்த இளைஞன் வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்த நிலையில் கடந்த, 6 ஆம் திகதி இரவு கொழும்பிலிருந்து வந்த அவர் பேருந்தில் தூங்கிய நிலையில் இறங்க வேண்டிய இடத்தில் இருந்து வெகுதூரம் சென்றிருந்தார்.

நுவரெலியா செல்லும் வழியில் ரம்பொடையில் வைத்து பேருந்தில் இருந்து இறங்கியுள்ளார். ​​அதிகாலை 2 மணி என்பதால் வீட்டிற்கு செல்ல பேருந்து இல்லாமையினால் அந்தப் பகுதியிலுள்ள தனது தாயின் சகோதரியின் வீட்டிற்கு செல்ல முயற்சித்துள்ளார்.

அன்புமணி : இலங்கைத் தமிழர்களுக்கு எதிரானது மத்திய அரசின் நிலைப்பாடு!

 hindutamil.in : சென்னை: இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாக்களை மறுக்கக் கூடாது என்றும், குடியுரிமை வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் தேவை என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 
மேலும், “இலங்கைத் தமிழ் அகதிகள் இந்தியக் குடியுரிமை பெறுவதற்கு முட்டுக்கட்டை போடும் மத்திய அரசின் இந்த நிலைப்பாடு, ஈழத் தமிழர் நலன்களுக்கு எதிரானது ஆகும்” என்றும் அவர் சாடியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “இலங்கையில் போர் முடிந்த பிறகும் கூட 2015ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி வரை இந்தியாவுக்கு வந்த இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்களாக கருதப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் போதிலும் கூட, அதைப் பயன்படுத்திக் கொண்டு அவர்கள் நீண்ட கால விசாவுக்கு விண்ணப்பிக்க முடியாது என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

ஏர்போர்ட் மூர்த்தி ஐசியுவில் அனுமதி!

 மின்னம்பலம் - Kavi :  விசிக புகார்… இரவில் ஏர்போர்ட் மூர்த்தி கைது : ஐசியுவில் அனுமதி!
இரவோடு இரவாக கைது செய்யப்பட்ட ஏர்போர்ட் மூர்த்தி உடல் நலக் குறைவு காரணமாக ஐ.சி.யு.வில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள டிஜிபி அலுவலகத்துக்கு வெளியே நின்றிருந்த  புரட்சி தமிழகம் கட்சி தலைவரான ஏர்போர்ட் மூர்த்தி மீது விசிகவைச் சேர்ந்த சிலர் தாக்குதல் நடத்தினர்.
சிறிது நேரத்தில் சுதாரித்துக் கொண்ட ஏர்போர்ட் மூர்த்தி பதில் தாக்குதல் நடத்தினார். போலீசாரின் கண்முன்னே இந்த சம்பவங்கள் நடந்தன. இதுதொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலானது.

திங்கள், 8 செப்டம்பர், 2025

சசிகலா செல்லாத 450 கோடி கொடுத்து சர்க்கரை ஆலையை வாங்கினார்! சி பி ஐ செய்தி

 மின்னம்பலம் = Pandeeswari Gurusamy  :  : பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது காஞ்சிபுரத்தில் ரூ.450 கோடி மதிப்பிலான சர்க்கரை ஆலை வாங்கிய விவகாரத்தில் சசிகலா மீது பினாமி தடை சட்டத்தின் கீழ் சிபிஐ வழக்கு பதிவு செய்து உள்ளது.
நாட்டில் புழக்கத்தில் உள்ள கருப்பு பணத்தை நீக்கும் நடவடிக்கை என்று கூறி மோடி அரசு நவம்பர் 8, 2016ல் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அமல்படுத்தியது. 
அப்போது கருப்பு பணம் வைத்திருந்தவர்கள் போலியான நிறுவனங்களை தொடங்கி பணத்தை மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

ஞாயிறு, 7 செப்டம்பர், 2025

அவுஸ்திரேலியாவில் நடிகை நவ்வியா நாயருக்கு 1.14 இலட்சம் தண்டம்! வெறும் மல்லிகை பூவால் வந்த வினை

Navya Nair fined for carrying jasmine flowers

 மின்னம்பலம் -பந்தீஸ்வரி குருசாமி :ஆஸ்திரேலியாவில் வெறும் அரை முழம் மல்லிகை பூ வைத்து சென்றதற்காக நடிகை நவ்யா நாயருக்கு ரூ.1.14 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகை நவ்யா நாயர் ஆஸ்திரேலியாவில் விக்டோரியா மலையாளிகள் சங்கத்தினர் நடத்திய ஓணம் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள சென்றார்.

கூட்டணி கட்சிகளுக்கான இடங்கள் ஒதுக்கீட்டில் திமுக புது ‘பார்முலா’ - கறார் காட்ட தயாராகிறாரா ஸ்டாலின்?

 hindutamil.in  : சென்னை: சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் கூட்​ட​ணிக் கட்​சிகளான காங்​கிரஸ், விசிக உள்​ளிட்ட கட்​சிகளுக்கு ஒதுக்​கப்​படும் இடங்​கள் குறித்து திமுக மேலிடம் தீவிர ஆலோ​சனை​யில் ஈடு​பட்டு வரு​வ​தாக கூறப்​படு​கிறது.
தற்​போதைய நில​வரப்​படி 2026 சட்​டப்​பே​வைத் தேர்​தலில் அதி​முக, திமுக, நாம் தமிழர், தவெக என 4 முனைப்​போட்டி ஏற்​படும் சூழல் நில​வு​கிறது. 
ஆளும் கட்​சி​யான திமுக கூட்​ட​ணி​யில் காங்​கிரஸ், மதி​முக, விசிக, கம்​யூனிஸ்ட் கட்​சிகள், கொமதேக, மக்​கள் நீதி மய்​யம், இந்​திய யூனியன் முஸ்​லீம் லீக், தமிழக வாழ்​வுரிமைக் கட்​சி, மனித நேய மக்​கள் கட்​சி, மக்​கள் விடு​தலைக் கட்​சி, ஆதித் தமிழர் பேரவை உள்​ளிட்ட கட்​சிகள் இடம்​பெற்​றுள்​ளன. 

இலங்கை - 15 பயணிகளை பலிவாங்கிய பேருந்து விபத்து: ஓட்டுனரின் இரத்த மாதிரிகள் மருத்துவ ஆய்வுக்கு பகுப்பாய்வுக்கு

ஹிருனியுஸ் : இலங்கை ராவண எல்ல வனப்பகுதியில் சுமார் ஆயிரம் அடி பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளான பேருந்தின் சாரதியினுடைய இரத்த மாதிரிகள் நாளை (7) மேலதிக பரிசோதனைக்காக அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பப்படும் என எல்ல காவல்துறையினர் தெரிவித்தனர்.
தங்காலை நகரசபையின் ஊழியர்கள் குழுவொன்று நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்று மீண்டும் தங்காலைக்கு தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் திரும்பிக் கொண்டிருந்த பேருந்தொன்று, கடந்த 4 ஆம் திகதி இரவு எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் 15 ஆவது மைல்கல் பகுதியில் சொகுசு வாகனமொன்றுடன் மோதி பின்னர் வீதியின் அருகே இருந்த தடுப்புச் சுவரில் மோதி ராவண எல்ல பள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் 15 பேர் பலியானதுடன், 18 பேர் காயமடைந்தனர்.

ஜெர்மனியைத் தொடர்ந்து இங்கிலாந்திலும் குவியும் முதலீடு… ஸ்டாலின் பெருமிதம்!

 மின்னம்பலம் - christopher : ஜெர்மனி, இங்கிலாந்து பயணத்தின் மூலம் இதுவரை ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 6) தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு ஒருவார கால பயணம் மேற்கொண்டுள்ளார்.
முதலில் ஜெர்மனி சென்ற அவர், அங்கு 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு, ரூ.7020 கோடி முதலீட்டை ஈர்த்துள்ளார். அதன்மூலம் 15320 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.