சனி, 2 ஆகஸ்ட், 2025

மல்லை சத்யா உண்ணாவிரத போராட்டம்... ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்பு!

 மின்னம்பலம் - christopher  : நீதிக்கேட்டு மதிமுக துணை பொதுச்செயலாளரான மல்லை சத்யா தலைமையில் இன்று (ஆகஸ்ட் 2) நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
மதிமுக துணை பொதுச்செயலாளரான மல்லை சத்யாவுக்கும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது.
இந்த நிலையில் உட்கட்சி ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவால் கைவிடப்பட்டவர்களே வாருங்கள் என்ற தலைப்பில் நீதி கேட்டு உண்ணா நிலை அறப்போராட்டத்திற்கு மல்லை சத்யா அழைப்பு விடுத்திருந்தார்.

தேவகௌடாவின் பேரனுக்கு பாலியல் வன்கொடுமை வழக்கில் (பிரஜ்வல் ரேவண்ணா) ஆயுள் தண்டனை!

 மாலை மலர் : முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனான பிரஜ்வல் ரேவண்ணா 2019 ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார். 2024 ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் கர்நாடகாவில் பாஜகவுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்தது.
இதனையடுத்து பிரஜ்வல் ரேவண்ணா பாஜக கூட்டணியின் ஹாசன் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பிரஜ்வல் ரேவண்ணாவிற்காக பிரதமர் மோடி நேரில் வந்து பிரசாரம் மேற்கொண்டார்.

ரிதன்யா கணவரின் கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல.. தந்தை அளித்த மனுவில் பதறவைக்கும் தகவல்கள்!

 புதிய தலைமுறை   அண்மைக்காலங்களில் அதிர்வை ஏற்படுத்திய ஒரு மரணம் இளம்பெண் ரிதன்யாவின் இறப்பு. திருமணமாகி எழுபத்தி எட்டே நாட்களில் தற்கொலை முடிவை எடுத்த ரிதன்யா, தனது தந்தையிடம் தனது முடிவுக்காக மன்னிப்புகேட்டு அனுப்பிய ஆடியோ அனைவரின் மனதையும் உலுக்கியது.
இந்நிலையில்தான், ரிதன்யாவின் தந்தை தமிழகஅரசிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார். இந்த கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் ஒவ்வொன்றும் அதிர வைக்கின்றன. அவற்றை விரிவாக பார்க்கலாம்.
ரிதன்யாவின் இந்தக் குரல் இன்னும் காதுகளை விட்டு நீங்கவில்லை. இப்படியொரு முடிவை ஏன் ரிதன்யா எடுத்தார்? என்ற கேள்வி நீடிக்கும் நிலையில், தலைமைச்செயலகத்திற்குச் சென்று ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை கோரிக்கை மனு அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் அதிர வைக்கும் பல தகவல்களை கூறியுள்ளார்.

திரு நீலன் திருச்செல்வத்தின் கொலையும் - திருமதி புனிதம் திருச்செல்வமும் + திரு முருகேசு திருச்செல்வமும்

May be an illustration
Punitham Tlhiruchelvam 
May be an image of 3 people
Alfred duraiyappa Srimavo bandaranayaka 
May be an image of 2 people
திரு முருகேசு திருச்செல்வமம்  
திரு நீலன் திருச்செல்வம்!

ராதா மனோகர் : திருமதி புனிதம் திருச்செல்வமும்  + திரு முருகேசு திருச்செல்வமும்  
திரு நீலன் திருச்செல்வத்தின் கொலையும்!
இலங்கை தமிழர்களின் போராட்டம் என்பது இன அடக்கு முறையின் வெளிப்பாடு என்று பொதுப்புத்தியில் கருதப்படுகிறது.
ஆனால் உண்மை அதுவல்ல 
1970 வரை ஆட்சியில் இருக்கும் எந்த கட்சிக்கும் இலங்கை தமிழரசு கட்சியின்  சுமார் பதினைந்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் தேவை இருந்தது.
ஆனால் 1970 இல் பதவிக்கு வந்த ஸ்ரீ மாவோ அம்மையாரின் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு பதவிக்கு வந்தது . இதன் மூலம் தமிழரசு கட்சி போன்ற சிறுபான்மையினரின் கட்சிகளின் தேவை அவருக்கு இருக்கவில்லை.
அது மட்டுமல்ல அந்த தேர்தலில் தமிழரசு கட்சியின் தலைவர் பொது செயலாளர் உட்பட நான்கு தலைவர்கள் தோல்வி அடைந்தனர். 
தமிழ் காங்கிரஸ் கட்சியின் மூன்று முக்கிய தலைவர்களும் தோல்வி அடைந்தனர் 

வெள்ளி, 1 ஆகஸ்ட், 2025

பாஜகவுக்காக வாக்கு திருடும் தேர்தல் ஆணையம்.. 100% உறுதியான ஆதாரம் இருக்கு.. யாரையும் விடமாட்டோம் - ராகுல்

 மாலை மலர் : பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக தங்களிடம் 100 சதவீதம் தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதரவாக வாக்காளர் பட்டியலில் முறைகேடுகளைச் செய்கிறது என்றும் இது தொடர்பாக 'அணு குண்டு' போன்ற ஆதாரங்கள் இருப்பதாகவும், அவை வெளியானால் தேர்தல் ஆணையம் ஒளிந்துகொள்ள இடம் இருக்காது என்றும் தெரிவித்தார்.

புலிகளின் துணுக்காய் வதைமுகாமில் 4000 தமிழர்கள் படுகொலை? தப்பியவரின் வாக்குமூலம்

May be an image of 1 person

 Thangathurai Thayani :  புலிகளின் சித்திரவதை கூடமும் தப்பியவர் அனுபவமும்..
பகுதி 1......
இந்நூலானது பாசிசப் புலிகள் இருந்த காலத்தில் தப்பித்து வந்த நபரால் 1991 காலப்பகுதியில் வெளிவாரியாக வெளியிடப்பட்டது 
புலிகளும் அதை ஏற்றுக்கொள்ளும் நிலையில் மௌனமாக இருந்தார்கள் ஆனால் தேடித்தேடி இந்நூலை எரியூட்டினார்கள்...
1990 முதல் 2009 வரை புலிகள் (மிருகங்களின்) ஆட்சியில்……
நடந்த வன்கொடுமைகள்!
அந்தோணி
யூதர்களை கிற்லர் எப்படிக் கொடுமைப் படுத்தினார் என்பது உலகம் முழுவதும் அறியப்பட்டது. புகைப்படங்களாக, திரைப்படங்களாக உலகமக்கள் கண்டு மிரண்டனர். யூதர்கள் மீது இரக்கம் கொண்டனர். ஆனால் தமிழீழம் என்ற சொல்லின் பின்னால் மறைந்திருந்த மிருகங்களான மிருகம்கள் (புலிகள்) எங்கள் இனத்தவரை எப்படியெல்லாம் கொடுமைக்கு உள்ளாக்கினர் என்பது வெளியுலகுக்குத் தெரியாது. இந்த மிருகம்கள் எங்கள் இனத்தை நசுக்கி அதன் இரத்தத்தினை உறிஞ்சிய வரலாற்றினை எங்கள் மக்களுக்கு எடுத்துரைக்க மிருகம்களே வழி கோலியுள

வியாழன், 31 ஜூலை, 2025

ஓபிஎஸ் : 'தேர்தல் நெருங்கும் பொழுது எதுவும் நடக்கலாம்'-முதல்வரை சந்தித்த பின் ஓ பன்னீர்செல்வம் பேட்டி

 நக்கீரன் :  தமிழக முதல்வரை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் சந்தித்து நலம் விசாரித்த நிலையில் தற்போது ஓபிஎஸ் மு.க.ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அவரது ஆதரவாளர்களோடு இன்று (31.07.2025) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பண்ருட்டி ராமச்சந்திரன், 'தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு தனது உறவை முறித்துக் கொண்டுள்ளது. 

கனடா பிரிட்டன், பிரான்ஸ் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க தீர்மானம்!

 தினமலர் : ஒட்டாவா: வரும் செப்டம்பர் மாதம் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்போம் என கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். ஏற்கனவே, பாலஸ்தீனத்தை ஆதரிப்போம் என பிரிட்டன், பிரான்ஸ் தெரிவித்துள்ளன.
இஸ்ரேல்- ஹமாஸ் இடையே நீண்ட நாட்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளது.
இந்த சூழலில், வரும் செப்டம்பர் மாதம் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்போம் என கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். இது குறித்து மார்க் கார்னி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: மத்திய கிழக்கில் இஸ்ரேல் ஒரு சுதந்திர நாடாக இருப்பதை கனடா எப்போதும் உறுதியாக ஆதரிக்கும்.

புதன், 30 ஜூலை, 2025

மோடி!மீண்டும் மீண்டும் தமிழ்நாடு வருகை! கடலூர், திருவண்ணாமலையில் பயணம்!

 மின்னம்பலம் -Mathi : பிரதமர் நரேந்திர மோடி (PM Narendara Modi Tamil Nadu) ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மீண்டும் தமிழகம் வருகை தருகிறார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதனால் தமிழ்நாட்டுக்கு தொடர்ச்சியாக பயணங்களை மேற்கொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.
மாலத்தீவுகளுக்கு சென்ற பிரதமர் மோடி அங்கிருந்து நேராக ஜூலை 26-ந் தேதி தூத்துக்குடி வருகை தந்தார். அங்கு ரூ4,900 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
பின்னர் ஜூலை 27-ந் தேதி அரியலூர் கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்றார்.

சிறையிலிருந்து வந்த கணவன் வெறிச்செயல்; நண்பர்களுடன் சேர்ந்து மனைவி கூட்டுப்பலாத்காரம்: - குற்றவாளி குஜராத்தில் கைது

Surat gangrape

 dinakaran.com  - Suresh  :  சூரத்: குஜராத்தில் சமீபத்தில் சிறையிலிருந்து வெளியே வந்த கணவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து மனைவியை கொடூரமாகத் தாக்கி, கூட்டுப் பலாத்காரம் செய்து, தாபி ஆற்றில் வீசிக் கொல்ல முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
குஜராத் மாநிலம் சூரத் நகரை சேர்ந்த கணேஷ் ராஜ்புத் (35) என்பவர், குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

செவ்வாய், 29 ஜூலை, 2025

நெல்லை ஜாதி ஆணவக்கொலை வழக்கில் கைதான இளைஞர் வாக்குமூலம் : எச்சரித்தேன்… கேட்கவில்லை...’ :

 மின்னம்பலம் :நெல்லையில் ஐடி ஊழியர் கவின் குமார் ஜாதி ஆணவப் படுகொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள சுர்ஜித்தின் வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த சரவணன் – கிருஷ்ணகுமாரி தம்பதியின் மகளை ஐடி ஊழியர் கவின் குமார் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு பெண்ணின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று பாளையங்கோட்டை வந்த கவின்குமாரை தனியாக அழைத்து பேசிய அந்த பெண்ணின் சகோதரர் சுர்ஜித் தான் மறைந்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் கவின் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

திங்கள், 28 ஜூலை, 2025

தாய்லந்து கம்போடியாவில் தொடங்கிய Proxy war போர்

BBC Ta,o; :  தென்கிழக்கு ஆசிய நாடுகளான கம்போடியா- தாய்லாந்து போர் பதற்றமும் போர்ச் சூழலும் மீண்டும் ஒரு போருக்கான கதவைத் திறந்துள்ளதா என்ற கேள்வியை எல்லோர் மத்தியிலும் ஏற்படுத்தியுள்ளது.
Preah Vihear Temple
இப்போரின் அடிப்படை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ப்ரீவிஹனர் ஆலயம் தொடர்பில் எழுந்த நீண்ட கால முரண்பாட்டு பிரதிமை என்று அறியப்படுகிறது.
இரு நாடுகளும் 817 கி.மீ. எல்லையை பகிர்ந்து கொள்வதோடு இரு நாட்டின் பொருளாதாரமும் சுற்றுலாத் துறையில் அதிகம் தங்கியிருப்பதோடு இராணுவ ரீதியில் கம்போடியா பலவீனமான நிலையில் தாய்லாந்தோடு ஒப்பிடும்போது காணப்படுகிறது.

வெளிநாட்டு சிறைகளில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட இந்தியர்கள்: வெளியுறவு இணை மந்திரி/

மாலை மலர் : புதுடெல்லி பாராளுமன்ற மக்களவையில் நடந்த கேள்வி நேரத்தின்போது மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி கீர்த்தி வர்தன் சிங் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியுள்ளதாவது:
உலகம் முழுவதும் பல்வேறு நாட்டில் உள்ள சிறைகளில் 10,574 இந்தியர்கள் உள்ளனர். அதிகபட்சமாக ஐக்கிய அரபு அமீரக நாட்டில் 2,773 இந்தியர்கள் பல்வேறு குற்றச்சாட்டில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சவுதி அரேபியாவில் 2,379 பேர், நேபாளத்தில் 1,357 பேர், கத்தாரில் 795 பேர், மலேசியாவில் 380 பேர், குவைத்தில் 342 பேர், பிரிட்டனில் 323 பேர், பஹ்ரைனில் 261 பேர் மற்றும் பாகிஸ்தானில் 246 இந்தியர்களும் சிறைகளில் உள்ளனர்.

ஞாயிறு, 27 ஜூலை, 2025

வாஞ்சிநாதன் Vs ஜி.ஆர்.சுவாமிநாதன் விவகாரம் : அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும் ஆர்ப்பாட்டம்!

 மின்னம்பலம் : வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை (ஜூலை 28) அனைத்து நீதிமன்ற வளாகங்களின் வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு அறிவித்துள்ளது.
உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், சாதி மற்றும் மத பாகுபாட்டுடன் நடந்து கொள்வதாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு மதுரை வழக்கறிஞர் எஸ்.வாஞ்சிநாதன் புகார் அனுப்பி இருந்தார். 

முதல்வர் ஸ்டாலின் ருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்! |

 Hindu Tamilசென்னை: சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை மாலை வீடு திரும்பினார். 3 நாட்களுக்குப் பிறகு முதல்வர் வழக்கமான பணிகளை தொடரலாம் என அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இது குறித்து அப்போலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ’அப்போலோ மருத்துவமனையில் (கிரீம்ஸ் சாலை) மருத்துவர் செங்குட்டுவேலு தலைமையிலான மருத்துவ வல்லுநர் குழு அளித்த சிகிச்சை முடிந்து முழுமையாக குணமடைந்த முதல்வர் ஞாயிற்றுக்கிழமை மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். முதல்வர் ஸ்டாலின் நலமாக இருக்கிறார். 3 நாட்கள் இடைவெளிக்குப் பின் வழக்கமான பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடக துறை இன்று வெற்று கூச்சல், பரபரப்பு பொய்கள் நாடகத்தன்மை.. சிதைந்து வருகிறது.

May be a graphic of text

 Vasu Sumathi   :  எங்கும் பரபரப்பு - எதிலும் பரபரப்பு: தமிழ்நாட்டில் பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் ஏற்பட்ட நெருக்கடி... ஒரு அலசல். (கொஞ்சம் பெரிய பதிவுதான்)
தமிழ்நாட்டில் பத்திரிகை மற்றும் ஊடகத் துறை ஒரு சிக்கலான கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக காட்சி ஊடகங்களிலும், சுய-பிரகடனப்படுத்திக் கொள்ளும் யூடியூப்"பத்திரிகையாளர்கள்" மத்தியிலும் பரபரப்பு என்பது அன்றாட கதையாகிவிட்டது. ஒரு காலத்தில் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று போற்றப்பட்ட துறை இன்று வெற்று கூச்சல், மறைக்கப்பட்ட உண்மைகள் மற்றும் நாடகத்தன்மை மிக்க கதையாக்கத்தால் வேகமாக சிதைந்து வருகிறது.