திங்கள், 24 நவம்பர், 2025

இலங்கை கடுகண்ணாவ மண்சரிவில் 6 பேர் உயிரிழப்பு


 ஜாப்னா முஸ்லீம் : கொழும்பு - கண்டி பிரதான வீதியில் பஹல கடுகண்ணாவ பகுதியில் ஏற்பட்ட மண்மேடு மற்றும் கற்பாறை சரிவில் சிக்கி உயிரிழந்தவர் எண்ணிக்கை 6 ஆக உயர்வடைந்துள்ளது.
அனர்த்தத்தில் சிக்கியிருந்த நிலையில் காயமடைந்து மீட்கப்பட்ட 4 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 
குறித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவந்த தேடுதல் நடவடிக்கையும் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கண்டி வீதியிலுள்ள பஹல கடுகண்ணாவ மற்றும் மாவனெல்லவுக்கு இடையிலான பகுதியில் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார்.



மண்சரிவில் உயிரிழந்தவர்கள் விபரம்
கடுகண்ணாவ பிரதேசத்தில் சனிக்கிழமை 22ஆம் திகதி காலை மண்சரிவு மற்றும் பாறை ஒன்று வீடு மற்றும் உணவகம் மீது விழுந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளதாக கேகாலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர்கள்
சமரகோன் முதியன்சேலாகே, லஹிரு மதுசங்க சமரகோன் (வயது 31) வெலிகல்ல, மாவனெல்ல.
ராசலிங்கம் கருணாகரன் (வயது 66) பஹல, கடுகன்னாவ, ஹிங்குல. (கடை உரிமையாளரின் தந்தை)
கிசாலிங்கம் நிஷாந்தனி கருணாகரன், வயது 38, பஹல, கடுகன்னாவ, ஹிங்குல, (கடை உரிமையாளரின் மனைவி)
 லிண்டன் ஜனாக குமார ஜயசிங்க(வயது 66) கிரி​போலவத்த, கடுகண்ணாவ,
 ருவன் குமார அபேசிறி சமரநாயக்க (வயது 42) நியூ டவுன், எம்பிலிப்பிட்டிய
குணரத்ன முதியன்சலாகே, புலஸ்தி பண்டார (வயது 33) ஹீனரந்தெனிய, கம்பளை.
காயமடைந்தவர்கள் தற்போது மாவனல்லை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர்கள்

இறந்தவர்களுக்கு ரூ. 1 மில்லியனும், இறுதிச் சடங்கு செலவுகளுக்கு ரூ. 100,000 மும் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றும், மீதமுள்ள தொகை பின்னர் வழங்கப்படும் என்றும் கூறினார்.

காயமடைந்தவர்களுக்கும் அரசாங்கம் ஒரு திட்டத்தைத் தயாரிக்கும், மேலும் இந்தக் கட்டிடத்தின் கட்டுமானத்தின் சட்டபூர்வமான தன்மை குறித்து ஆராயும். தற்போது, ​​சம்பவம் நடந்த இடத்திலிருந்து இரண்டு குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளன. மேலும், அதே பகுதியில் பல ஆபத்தான பாறைகள் உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக