திங்கள், 24 நவம்பர், 2025

திமுகவிடம் காங்கிரஸ் 45 தொகுதி கேட்கிறது - டபிள் டிஜிட்டாவது கிடைக்குமா?

 மின்னம்பலம் : 45 சீட்.. காங்கிரஸ் ஐவர் குழு 'அதிரி புதிரி’.. திமுக ‘ஷார்ப்’ ரியாக்சன் என்ன? 
கூட்டணி விவகாரத்துல காங்கிரஸ் ரொம்ப வேகமா இருக்கேன்னு டெல்லி மேலிடத்துக்கு நெருக்கமான சீனியர்களிடம் நாம் பேசிய போது, “பீகார் தேர்தல் முடிஞ்ச கையோடு டெல்லியில 12 மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், பொறுப்பாளர்கள், சீனியர் லீடர்ஸை ராகுல் அழைச்சு பேசுனாரு.. SIR பத்தி பேசுறதுக்குன்னு சொன்னாலும் ஒவ்வொரு ஸ்டேட்டுலயும் எலக்‌ஷன் வரப் போறதால அதுபத்தியும் டிஸ்கஷன் போனது..
இந்த கூட்டத்துல, தமிழகத்துல காங்கிரஸ் வேற கூட்டணி ஆப்சனை எதுவும் பார்க்குதுன்னா சிலர் கேட்டுப் பார்த்தாங்க.. அதுக்கு கார்கேவும் ராகுலும், திமுக கூட்டணியைத் தவிர வேற சான்ஸே இல்லை.. ஆனா எத்தனை சீட், எந்த தொகுதிங்கிற விவகாரம் எல்லாத்தையும் நீங்களே பார்த்துக்கனும் என கட் அண்ட் ரைட்டா சொல்லிட்டாங்க..



இதுக்கு அப்புறம்தான் கிரிஷ் சோடங்கர், செல்வப் பெருந்தகை, சூரஜ் ஹெக்டே, நிவேதித் ஆல்வா, ராஜேஷ்குமார் இடம்பெற்ற குழுவோட அறிவிப்பும் வந்துச்சு..

இந்த குழுவோட அறிவிப்பு பிரஸ் ரிலீஸும் கூட, பொத்தாம் பொதுவாக ”கூட்டணி கட்சிகளுடன் கலந்துரையாட”ன்னு மட்டும் இருந்ததுல சலசலப்பும் வந்துச்சு..” என்றனர்.

”இந்த ஐவர் குழு, மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்கள், மாஜி எம்.எல்.ஏ, எம்.பிக்கள், வார் ரூம் தலைவர்கள்னு அனைத்து தரப்போடவும் ஆலோசிச்சது.

இதுக்கு பிறகு ஐவர் குழுவுல சில முடிவுகளை எடுத்திருக்காங்க.. திமுகவுடன் சீக்கிரமா தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்திடனும்; இந்த முறை அதிகமான தொகுதிகளை திமுகவிடம் கேட்டு வாங்கனும்னு முடிவு செஞ்சாங்க.. தமிழ்நாட்டுல பாஜகவைவிட காங்கிரஸ் பெரிய கட்சி.. கிராம லெவலம் கமிட்டி, பூத் கமிட்டிக்ன்னு எல்லா தொகுதியிலும் போட்டிருக்கிறோம்.. 2016 எலக்‌ஷனுல 41 தொகுதிகளில் போட்டியிட்டோம்.. போன தேர்தலில் திமுக அதிக இடங்களில் ஜெயிக்கனும்னு கேட்டுகிட்டதால நாம 25 சீட்டை ஏத்துகிட்டோம்.. இந்த முறை 45 தொகுதிகளில் இருந்துதான் கணக்கை தொடங்கனும்னும்னு ஐவர் குழு முடிவு செய்தது”ன்னு சீனியர் காங்கிரஸ் ‘தலை’கள் நம்மிடம் ஷேர் செஞ்சாங்க..

ஓஹோ..

அதோட மட்டுமல்லாம, “சிஎம் ஸ்டாலினை பார்க்கனும்னு இந்த ஐவர் குழு முடிவு செஞ்சது.. அப்ப செல்வப்பெருந்தகை உடனே டைம் வாங்கி பார்த்துடலாம்னு சொல்ல.. போனா 5 பேரும் சேர்ந்து போய்தான் பார்க்கனும்னு கிடுக்குப் பிடியும்” போட்டிருக்காங்களாம்..

சரி திமுகவோட ரியாக்‌ஷன் என்னவாம்?

,முதல்வர் ஸ்டாலினைப் பொறுத்தவரைக்கும் “காங்கிரஸ் ஐவர் குழுவை அமைச்சதும் நல்லதுதான்.. நாமும் ஒரு குழுவை அமைச்சு தேர்தல் வேலைகளை சீக்கிரமாக தொடங்கிடுவோம்..

காங்கிரஸ் ஜெயிச்ச 18 இடங்களில்ல பாதிக்கு மேல இப்ப ஜெயிக்காது.. அதனால வேற தொகுதிகளைத்தான் மாத்தி கொடுக்கனும்.. இதெல்லாம் இப்பவே பேசி சரி செஞ்சுவிட்டா.. நல்லதுதான்.. காங்கிரஸ் மாதிரி ஒவ்வொரு கூட்டணிக்கும் தொகுதிகளை கிளியர் செஞ்சுட்டா நல்லதுதானே” என சொல்லி இருக்கிறார் என்றபடியே டைப் செய்துவிட்டு செண்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக