![]() |
ராதா மனோகர் : பார்ப்பனர்கள் எந்த தொழிலில் பணியாற்றினாலும் அவர்களின் உச்ச பட்ச ஆணவம் தென்படுவது சட்டத்துறையில்தான்!
அப்பேற்பட்ட சட்டவியல் சகுனி மாமாக்கள் இந்திய அரசியல் சட்டத்தை ஒரு ஒடுக்கப்பட்ட ஜாதியை சேர்ந்த அம்பேத்காரிடம் ஒப்படைத்திருப்பார்களா?
எனக்கென்னவோ குஜராத் கலவரத்தால் உலகம் முழுவதும் நெருக்கடிக்கு உள்ளான பாஜக அப்துல் கலாம் என்ற இஸ்லாமிய முகமூடியை அணிந்து கொண்ட தந்திரம் ஞாபகத்திற்கு வருகிறது!.
அப்துல் கலாம் சங்கிகளுக்கு ஏற்ற ஒரு ஆயத்த ஆடையாக எப்படி பணியாற்றினார் என்பது உலகம் அறிந்தது.
அம்பேத்கார் அப்துல் கலாமை விட எல்லா விதத்திலும் அறிவாளி என்பது உலகம் அறிந்ததுதான்
ஆனாலும் இந்திய ஒன்றிய அரசமைப்பு வரைவில் அவரின் பங்களிப்பு எந்த அளவு இருந்திருக்கும் என்பது மீளாய்வுக்கு உரியது என்று தோன்றுகிறது
ஒன்றிய அரசமைப்பு சட்டத்தில் பல குளறுபடிகள் உள்ளன.
ஆனாலும் வழமை போல அதையும் புனித படுத்துதல் என்ற தொடர் நாடகம் நடக்கிறது!
எதையும் புனிதப்படுத்துதல் என்பது எதையோ மறைத்தல் என்று கொள்ளவேண்டி இருக்கிறது!
அதுதான் மேலும் மேலும் சந்தேகத்தை எழுப்புகிறது!
ஒருவேளை அவர் நீண்ட காலம் வாழ்ந்திருந்தால் அந்த இரகசியங்களை வெளிப்படையாக அவர் கூறியிருக்க கூடும்!
அதனால்தானோ என்னவோ அவரின் மறைவு கூட சந்தேகத்திற்கு இடம் அளிக்கிறது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக