வெள்ளி, 3 ஜனவரி, 2025

Gisele Pelicot . உலகெங்கிலும் பாலியல் வன்முறைக்கு உள்ளான பெண்களுக்கு ஒரு அறைகூவல்!

May be an image of 1 person

சுமதி விஜயகுமார் ;  Gisele Pelicot . உலகெங்கிலும் பாலியல் வன்முறைக்கு உள்ளான பெண்களுக்கு ஒரு அறைகூவல் விடுத்திருக்கிறார்.
 'பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான அனைத்து பெண்களும் இனிமேல் சொல்ல வேண்டும்.
Gisele Pelicot டால் முடிந்தது. என்னாலும் முடியும் என்று. வெட்கப்பட வேண்டியது நாங்கள் இல்லை.
அவர்கள் தான்.'
Dominique Pelicot அவரது கணவர்.
ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமானால் இருவரும் happily married .
அவர்களின் காதலுக்கு சாட்சியாய் ஒரு மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர்.
Gisele ஒரு நிறுவனத்தில் பணிபுரிய, Dominique பல தொழில் துவங்கி எதுவும் சரிவர அமையாமல் இருந்தார். அந்த சமயத்தில் Gisele க்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு ஏற்பட , இருவரும் பிரிகிறார்கள்.
காதல் மீண்டும் அவர்களை இணைக்கிறது.



பண நெருக்கடி காரணமாக இருவரும் விவாகரத்து பெற, மீண்டும் 6 ஆண்டுகள் கழித்து மீண்டும் திருமணம் செய்து கொள்கிறார்கள். எவ்வளவு வலுவான காதல்!
Giselle க்கு கொஞ்சம் உடல்நிலை சரியில்லாமல் போகிறது. தூக்கமின்மை, anxiety கு மருந்துகள் உட்கொள்கிறார். அப்படி உடல்நிலை சரியில்லாத வேளையில் Dominique அவரின் மேல் அதீத அக்கறை எடுத்துக் கொள்கிறார். அவருக்கு பிடித்த உணவை சமைத்து தருவதும், இரவு உறங்கும் முன் icecream தெரிவதும் என அவரை தாங்குகிறார்.

சில நாட்களில் அவருக்கு அடிக்கடி நினைவு தப்பி போகிறது. ஒருவேலை alzheimer ஆகவோ மூலையில் கட்டியாகவோ இருக்கலாம் என மருத்துவரை மீண்டும் அணுகுகிறார். ஆனால் அப்படி எதுவும் இல்லை என்று மருத்துவ சோதனையில் தெரிய வருகிறது.
2 நவம்பர் 2020 ல் காவல் நிலையத்தில் இருந்து Giselle க்கு அழைப்பு வருகிறது. இரண்டு மாதங்களுக்கு முன்னர் Dominique ஒரு பொது இடத்தில் ஒரு பெண்ணின் skirt ஐ தூக்கிப்பார்த்ததாக வழக்கு தொடுக்கப்பட, அதனை தொடர்ந்து  Dominique ன் கணினியை காவல்துறை கைப்பற்றி சென்றது. காவல் நிலையத்திற்கு அன்று சென்ற Giselle ன் வாழ்க்கை அதன் பிறகு நிலைகுலைய துவங்கியது.

அந்த மடிக்கணினியில் பல காணொளிகள் இருக்கிறது. அதில் பல பல ஆண்களும் மயங்கிய நிலையில் இருக்கும் Giselle ஐ பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துகிறார்கள். அதிர்ந்து போகிறார் Giselle .
2010 முதல் 2020 வரை 83கும் மேற்பட்ட ஆண்களால் Giselle வல்லுறவிற்கு ஆட்படுத்தப்பட்டுள்ளார். ஒரு app வழியாக Dominique ஆண்களை வரவழைத்து அதை வீடியோ எடுத்து சேமித்து வைத்து வந்துள்ளார். அவரின் மேல் வழக்கு தொடரப்பட்ட செப்டம்பர் மாதம் துவங்கி நவம்பர் மாதம் வரை கூட இது தொடர்ந்துள்ளது .
உடல்நலனுக்காக மருந்து உட்கொண்ட Giselle க்கு பின்புதான் தெரிய வருகிறது ஒவ்வொரு இரவும் Dominique கொடுத்த icecream ல் தூக்க மாத்திரை கலக்கப்பட்டிருக்கிறது.
Giselle இன்று உலகம் போற்றும் ஒரு பெண்ணியவாதியாக கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறார். இந்த கொடுமையை கடந்து வந்ததினால் அல்ல.

வழக்கு நடைபெறும் பொழுது , தன் பெயர் வெளிய தெரியாமல் இருக்கும் உரிமை இருந்தும் அதை மறுத்து, அந்த வழக்கை உலகம் பார்க்க வேண்டும் என்று அதை வெளிப்படையாக நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார். வழக்கு தொடங்கிய நாள் முதல் எல்லா நாட்களும் நீதிமன்றம் சென்றார்.
இனி அனைத்தும் Giselle ன் வார்த்தைகளில்:
"குற்றம் சாட்டபட்ட ஆண்களின் மனைவிகள், அம்மாக்கள், சகோதரிகள் அந்த ஆண் மிகவும் நல்லவன் என்று சாட்சியம் சொன்னார்கள். நான் என் கணவரை நம்பியது போல. Rapist கள் யாரும் இல்லாத பார்க்கில் இரவு நேரத்தில் மட்டும் தான் வருவார்கள் என்று நினைக்காதீர்கள். அவன் உங்கள் வீட்டில் ஒருவனாய், உங்கள் நண்பனில் ஒருவனாய் கூட இருக்கக்கூடும்."

"Dominique உடன் நான் 50 வருடங்கள் வாழ்ந்துள்ளேன். சந்தோஷமாக நிறைவாகவே உணர்ந்திருக்கிறேன். "
"சில காலை வேளைகளில் எனக்கு உடல் உபாதைகள் தோன்றின. என் பனிக்குடம் உடைந்ததை போன்ற உணர்வு. அதை எப்படி எடுத்துக் கொள்வது என்று எனக்கு அப்போது தெரியவில்லை."
"நான் துணிச்சலான பெண் என்று சொல்கிறார்கள். இதற்கு பெயர் துணிச்சல் இல்லை. இந்த சமூகத்தை மாற்ற வேண்டும் என்கின்ற விருப்பமும் உறுதியும்."

"நான் தினமும் நீதிமன்றத்திற்கு வருகிறேன். கேட்ககூடாதவற்றை எல்லாம் கேட்கிறேன். எனக்கு தெரியும் என் பின்னால் பல கோடி ஆண்களும் பெண்களும் இருக்கிறார்கள். "
"இந்த வழக்கை திறந்தவெளியில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். ஏனென்றால் எனக்கு நிகழ்ந்தது வேறு யார்க்கும் நிகழ கூடாது. "
"இவளும் இந்த விளையாட்டில் பங்கெடுத்து கொண்டாள். அந்த ஆண்கள் இருக்கும் பொழுது தூங்குவது போல நடித்திருக்கிறாள் என்று என்னை அவதூறு பேசிய பொழுதெல்லாம் கூனி குறுகி போனேன்"
"பெயர்கள் வெளியே வராமல் போன என்னை போல பாதிக்க பட்ட பெண்களுக்கு சொல்கிறேன், இந்த போரை நாம் சேர்ந்தே நடத்தினோம்."
Giselle க்கு வயது வெறும் 71 தான்.
பாலியல் வல்லுறவிற்கு உள்ளாவதற்கும் அதனை எதிர்த்து போராடுவதற்கு வயது ஒரு தடை இல்லை என்று நிரூபித்திருக்கிறார் Giselle .
பாலியல் வல்லுறவிற்கு ஆளாகும் பெண்களுக்கு இரண்டே வழிகள் தான் இருக்கின்றன. யாருக்கும் தெரியாமல் தன்  'மானத்தை' காப்பாற்றிக் கொள்வது.  இல்லையென்றால், மானமும் அவமானமும் இந்த சமூகம் கற்பித்தது. எனக்கு இழைக்கப்பட அநீதி இன்னொரு பெண்ணிற்கு நிகழ்ந்து விட கூடாது என்று போராடுவது.
இனி பெண்களுக்கான போராளிகள் என்றால் அதில் நிச்சயமாக Giselle ன் பெயரை வரலாறு உச்சரிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக