வியாழன், 9 ஜனவரி, 2025

திருப்பதி கோயில் கூட்ட நெரிசலில் 6 பேர் உயிரிழப்பு

மாலைமலர் : திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி பண்டிகைக்காக சொர்க்கவாசல் திறக்கப்படுவது வழக்கம். சொர்க்கவாசல் திறப்பை ஒட்டி திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் விநியோகம் இன்று செய்யப்பட்டது
இந்த இலவச தரிசன டோக்கனை வாங்குவதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி சேலத்தை சேர்ந்த மல்லிகா என்ற பெண் உயிரிழந்தார்  என முதல் கட்ட தகவல் வெளியானது. மேலும் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர்  எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளை தொடர்பு கொண்டு விசாரித்தார். பாதிப்பு அடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளையும், உயர்தர சிகிச்சைகளையும் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு நாளை திருப்பதி வருகிறார் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக