சனி, 28 டிசம்பர், 2024

ராமதாஸ் - அன்புமணி இடையே வார்த்தை மோதல்! விருப்பமில்லையென்றால் வெளியேறு” : மேடையில்,,,

 minnambalam.com - Kavi : இது நான் ஆரம்பித்த கட்சி… விருப்பமில்லை என்றால் யாராக இருந்தாலும் வெளியேறலாம் என்று கூறியதால் ராமதாஸ் – அன்புமணிக்கு இடையே மேடையிலேயே மோதல் போக்கு உண்டானது.
புதுச்சேரியில் இன்று (டிசம்பர் 28) பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ், கவுரவத் தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் மேடையில் அமர்ந்திருந்தனர்.
அப்போது, “பாமக மாநில இளைஞர் சங்க தலைவராக முகுந்தன் நியமிக்கப்படுகிறார்.
இன்று முதல் அவர் அந்த பொறுப்பை ஏற்று அன்புமணிக்கு உதவியாக…. என்று ராமதாஸ் பேசிக்கொண்டிருக்கும்போதே,



அன்புமணி, “எனக்கா… அவன் 4 மாசத்துக்கு முன்னதான் கட்சிக்கு வந்தான். அவனுக்கு இளைஞர் சங்க பதவின்னா… என்ன அனுபவம் அவனுக்கு இருக்கு… வேற யாரையாவது பண்ணுங்க… நல்ல அனுபவசாலியா திறமைசாலியா இருக்குறவங்கல பண்ணுங்க… நல்ல ஆளுங்க வேணும்… வந்தவுடனையே இளைஞர் சங்கமா…” என்று கேட்டுக்கொண்டிருந்த போதே அரங்கில் இருந்த பாமகவினர் கோஷம் எழுப்பத் தொடங்கினர்.

உடனே ராமதாஸ், “யாராக இருந்தாலும் நான் சொல்றததான் கேட்கணும், நான் சொல்றதை கேட்கலனா யாரும் இந்த கட்சியில இருக்க முடியாது… இது நான் உண்டாக்குன கட்சி… அவர்கள் இந்த கட்சியில் இருக்க முடியாது” என்று கோபமாக பேசிக்கொண்டிருந்த போது,

அன்புமணி இடையில்… அது சரி… அது சரி என்று சொல்ல, ராமதாஸ் என்ன சரி.. என்ன சரி.. போ… அப்போ… மீண்டும் சொல்கிறேன், முகுந்தன் மாநில இளைஞர் சங்க தலைவராக நியமிக்கப்படுகிறார் என்று அறிவித்தார்.

இருவருக்கும் இடையே வார்த்தை போர் முற்ற அன்புமணி, குடும்பத்தில் இன்னொன்னு போடு’ என்று சொல்லி கையில் வைத்திருந்த மைக்கை மேடை மேலே போட்டுவிட்டார்.

அதை எடுத்து ஜி.கே.மணி பேசியபோது, மீண்டும் மைக்கை கையில் வாங்கிய அன்புமணி, ”பனையூரில் எனக்கு அலுவலகம் வைத்திருக்கிறேன். மூன்றாவது தெருவில் திறந்திருக்கிறேன். என்னை பார்க்கிறவர்கள் அங்கு வைத்து எப்போது வேண்டுமானாலும் பாக்கலாம்.” என்று அறிவித்தார்.

அப்போது ராமதாஸ், இன்னொரு அலுவலகம் தானே… நடத்துங்க…அப்படிதான் நானும் சொல்றேன். அவரும் (முகுந்தன்) உங்களுக்கு உதவியாக இருக்கப்போகிறார். அதனால் இதை யாரும் மாற்ற முடியாது… உனக்கு விருப்பம் இல்லையென்றால்… அவ்வளவுதான், வேறு என்ன சொல்லமுடியும்… முகுந்தன் தலைவர்… நான் ஆரம்பித்த கட்சி, நான் சொல்வதைதான் கேட்க வேண்டும். விருப்பமில்லாதவர்கள் என் பேச்சை கேட்காதவர்கள் விலகிக்கொள்ளுங்கள்” என்று அழுத்தமாக கூறினார்.
பிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக