வெள்ளி, 29 நவம்பர், 2024

வங்கக்கடலில் உருவானது பெங்கல் புயல்

தினமலர் : சென்னை: வங்கக்கடலில் புயல் உருவானதாக இந்திய வானிலை மையம் அறிவித்து உள்ளது. இந்த புயலுக்கு சவுதி அரேபியா பரிந்துரைத்த பெங்கல் என்ற பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே நிலை கொண்டு இருந்தது. முன்பு இது புயலாக மாறாது என வானிலை மையம் நேற்று கூறியிருந்தது. ஆனால், இன்று காலை, அடுத்த சில மணி நேரங்களில் புயலாக மாறும் என வானிலை மையம் அறிவித்தது.
இந்நிலையில், இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்தது என அறிவித்துள்ளது. இது நாளை (நவ.30) பிற்பகல் காரைக்கால் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும். அப்போது மணிக்கு 60 முதல் 70 கி.மீ., வரையிலும், அதிகபட்சமாக 90 கி.மீ.,வரையிலும் காற்று வீசக்கூடும். கடல் சீற்றமாக காணப்படும் எனவும் கூறியுள்ளது.

இந்த புயல் தற்போது புதுச்சேரிக்கு தென் கிழக்கே 270 கி.மீ., தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மணிக்கு 13 கி.மீ., வேகத்தில் நகர்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக