சனி, 30 நவம்பர், 2024

பெரும்பான்மை மக்களின் இடஒதுக்கீடு போராட்டம் 1854 ல் ஆரம்பித்து இன்றுவரை 166 ஆண்டுகள் தொடர்கிறது சுருக்கமான வரலாறு

 Devi Somasundaram    : 1991 ல 10% EBC ( economically backward class )...
பிற்படுத்தபட்டவர் இல்லை. உயர்சாதியில் பொருளாதார ரீதியா பின் தங்கியவர்களுக்கு ஒதுக்கீடு. (EWS பிறப்பு இது தான் ) .
1992 -இந்திரா சானே தீர்ப்பு ( மண்டல் வழக்கு ) 10% ஒதுக்கீட்டை ரத்து செய்கிறது.
2019, -ஜனவரி 7 ந்தேதி பார்லிமெண்ட் கூட்டுகுழு 10% ரிசர்வேஷனை முடிவு செய்கிறது.
ஜனவரி 8 லோக்சபாவில் டேபிள் செய்யப்பட்டு அன்றே பாஸ் ஆகிறது,
9 ந்தேதி ராஜ்ய சபாவில் பில் பாஸ் ஆகிறது .
12 ந்தேதி பிரெஸிடெண்ட் கையெழுத்து போடுகிறார் .
யூத் போரம் என்ற அமைப்பு தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு ஜனவரி 25 உச்சநீதிமன்ற அப்ஜக்‌ஷன் இல்லை என்று கூற சட்டம் அமலுக்கு வருகிறது .
எந்தக் கட்சியும், அமைப்பும், தனி நபரும் எதிர்க்காமல் ஒரே நாளில் சட்டமாகிறது.

Obc,sc,st, reservation: வரலாறு.
1854- இங்கிலாந்து பாராளுமன்றம் ஒரு standing order போடுகிறது . No-128. இந்தியாவில் அனைத்துத் தரப்பு மக்களும் அதிகாரமயமாக்கப் படவில்லை. அதற்கு ஸ்பெஷல் ஒதுக்கீடு தரனும் என்பது தான் அந்த ஸ்டேண்டிங் ஆர்டர் .



1871-ல் அந்த ஸ்டேண்டிங் ஆர்டர் அடிப்படையில் முதல் மாதிரி சென்சஸ் எடுக்கப்படுகிறது.
லார்ட் மோயா காலத்தில் எடுக்கபட்ட அந்த சென்சஸ் குழுவின் ஒரு தலைவர் கார்னிஷ் அவர்கள் அனைத்து பிரச்சனைகளையும் பிராமணக் கண்ணாடி கொண்டு பார்க்கக் கூடாது.
சமூகத் தீர்வுகள் பிராமணர்களுக்கு மட்டுமே பிரச்சனை என்பது போன்ற அவர்கள் குரலில் இருந்து கவனிக்கக் கூடாது என்று நோட் எழுதுகிறார். ( பிராமணரல்லாதவர் விதை போடப்பட்ட இடம் ) .
1882- சாதிவாரி இடஒதுக்கீடு தரப்படனும் என்று ஹண்டர் ( கல்விக் குழுத் தலைவர் ) மற்றும் ஜோதிபா பூலே இருவரும் குரல் தருகின்றனர் .

1891-ல் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த ஜேம்ஸ் டிரெம்ன்ஸ்கீர், சில வகுப்பினருக்கு நில உரிமை இல்லை! அவர்களுக்கு நில உரிமை தரனும் என்று பிரிட்டன் அரசுக்கு கடிதம் எழுதுகிறார்.
1892 -ல் டிரம்னஸ்கீர் கடித அடிப்படையில் பஞ்சமி நிலச்சட்டம் கொண்டு வருகிறது பிரிட்டன் அரசு.
1893-ல் ஆதி திராவிடர் மகாஜன சபை சார்பாக அயோத்திதாஸர், பிராமணரல்லாதோரும் இந்தியப் பணிகளும் என்று பிரிட்டன் அரசுக்கு அறிக்கை ஒன்று அனுப்புகிறார்.

1909 -ல் மிண்டோமார்லி சட்டம் ( govt of India act ) இஸ்லாமியர்க்கு 27 ல் 8 சீட் என்ற அடிப்படையில் முஸ்லீம் ரிசர்வ் தொகுதி அறிவிக்கப்படுகிறது. முதல் வகுப்புவாரி இடஒதுக்கீடு. இதை காங்கிரஸ் பிரிட்டன் அரசின் பிரித்தாளும் கொள்கை என்று கடுமையாக எதிர்த்தது.

1902 -ஜோதிபா பூலேவைப் பின் பற்றி சாகு மகராஜா பிராமணரல்லாதார்க்குப் பள்ளி நடத்துகிறார்.
1912 -சென்னை மாகாணத்தைச் சேர்ந்த ரெவின்யு டிவிஷனல் ஆபிஸர் பாலாஜிராவ் நாயுடு பிரிட்டன் அரசின் ராயல் குழுவுக்கு வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் தரப்படனும் என்று கோரிக்கை அனுப்புகிறார்.

1912 -Madras united league நீதிக்கட்சிக்குத் தாய் கழகம் ( பிராமணரல்லாதோர் விடுதி, பள்ளி நடத்தியது)
south Indian liberal federation என்ற இட ஒதுக்கீட்டை வலியுறுத்திக் கட்சியைத் தொடங்கியது ( அந்த அமைப்பு நடத்திய பத்திரிக்கையின் பேர் ஜஸ்டிஸ் , அதன் பேராலே ஜஸ்டிஸ் பார்ட்டி என்று அழைகப்பட்டது ). இட ஒதுக்கீட்டுகான முதல் அமைப்பு சார் கட்சி அது தான்.
1916- பிராமணரல்லாதோர் அறிக்கையை நீதிக்கட்சியின் முக்கிய 3 தலைவர்களில் ஒருவரான பி டி தியாகராக செட்டியார் வெளியிடுகிறார். பிராமணரல்லாதோர் இட ஒதுக்கீடு கேட்டு லண்டன் பார்லிமெண்ட்க்கு தந்திகளை அனுப்புகிறார். செட்டி கேபில்ஸ் என்று அப்பொழுது புகழப்பட்ட அவைதான் முதன் முதலில் 3% அளவே மக்கள் தொகை கொண்ட ஒரு சாதி 90% அதிகாரத்தை வைத்துள்ளது என்பதை அறிவிக்கின்றது.
1917-ல் மாகாண சட்டம் மாண்டேகு பிரபு தலைமையில் அறிவிக்கப் படுகிறது ( இந்திய மாநிலங்கள் உருவாக்கச் சட்டம் ). அன்னிபெசண்ட் அம்மையாரின் ஆகஸ்ட் அறிக்கை வெளியிடப்படுகிறது.
மாகாணங்கள் உருவாகும் போதே பிரதிநிதித்துவம் வேண்டும்,
நீதிக்கட்சியின் இன்னொரு முக்கியத் தலைவரான நடேசமுதலியார் no representation no tax, பிரதிநிதித்துவம் இல்லை என்றால் வரி இல்லை என்று பிரிட்டிஷ் அரசுக்கு நோட் அனுப்புகிறார்.
இன்னொரு முக்கிய தலைவர் T.N. நாயர் லண்டனுக்கே சென்று மாகாணத்தில் இட ஒதுக்கீடு வேண்டும் என்று லண்டன் எம் பி களிடம் பிரச்சாரம் செய்கிறார்.
அன்னி பெசண்ட் அம்மையார் தன்னாட்சி இயக்கம் ( ஹோம்ரூல் மூவ்மெண்ட் ) இதைக் கடுமையாக எதிர்க்கின்றது. இட ஒதுக்கீடு பிரிவினைவாதம் என்று எதிர்க்கிறார்.
1917 -கேசவபிள்ளை தலைமையில் சென்னை மாகாண சபை இட ஒதுக்கீட்டை ஆதரித்து ஆரம்பமாகிறது. பெரியார் ஆலோசனையில் வரதராஜ நாயுடு மூலம் இந்த சபை ஆரம்பமாகிறது.
மாண்டேகு கருத்துக் கேட்டு வந்த குழுவில் நீதிக் கட்சியோடு இணைந்து இவர்களும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்
1918 -லண்டன் பாராளுமன்றம் இட ஒதுக்கீட்டை ஏற்று சட்டம் இயற்றுகிறது.
1919-20 -மெஸ்டர்ன் தீர்ப்பு அடுத்து சென்னை மாகாண சங்கம் அமைகிறது. தேர்தலில் பிராமணரல்லாத 63 எம்எல்ஏக்கள் சீட் ஒதுக்கப்பட்டு நீதிக்கட்சி ஆட்சி அமைகிறது.
1920-ல் முதல் முதலமைச்சர் சுப்பராயலு ரெட்டியார் நீதிக்கட்சி தலைமையில்...
1921-22-ல் அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு என்ற முதல் கம்யூனல் G.oவைப் போடுகிறது நீதிக்கட்சி.
1925- காங்கிரஸ் இட ஒதுக்கீட்டுத் தீர்மானத்தை ஆதரிக்கவில்லை என்பதால் பெரியார் காங்கிரஸில் இருந்து விலகுகிறார்.
1926 -சுப்பராயன் சட்டசபையில் அமைச்சராக இருந்த முத்தையா முதலியார் கோட்டா முறை வகுப்பு வாரி இட ஒதுக்கீட்டை அறிமுகப் படுத்துகிறார். ( அதுவரை பிராமணரல்லாதவர் என்று இருந்தது. தனித்தனியா சாதிவாரியா தந்தாதான் அனைவருக்கும் பிரதிநிதிகள் கிடைப்பார்கள் என்பதால் கோட்டா முறை கொண்டு வந்தார்). இட ஒதுக்கீட்டின் தந்தை என்று கூறலாம்...
பெரியார் முத்தையா முதலியாரின் முறையை பெரிதும் வரவேற்றார்.
1927-ல் சைமைன் கமிஷன்.
1929-ல் கருத்து கேட்க சென்னை வருகிறது .
1930-ல் முதல் வட்ட மேஜை மாநாடு.
1931-ல் இரண்டாம் வட்டமேஜை மாநாடு .
1932ல் மூன்றாம் வட்ட மேஜை மாநாடு
( ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தனி ரிசர்வ் தொகுதி வேண்டும் என்று அம்பேத்கர், ரெட்டை மலை சீனிவாசன், எம்ஸி ராஜா ஆகியோர் கோரிக்கை வைக்கின்றனர். காந்தி இட ஒதுக்கீடு பற்றிப் பேசுவதை விரும்பாமல் தனித்து சட்ட மறுப்பு இயக்கம் நடத்துகிறார்.)
1932 -வகுப்புவாரிக் கொடைச் சட்டம் பிரிட்டன் பிரதமர் மெக்டொனால்டு அமைச்சரவை சட்டமன்றத்தில் sc/st ஒதுக்கீட்டை சட்டமாக்குகிறது. ( பஞ்சாபில் பஞ்சாபியர், மகராஷ்டிராவில் மராத்தியர்க்கு என்று தருவது போல் இந்தியா முழுவதும் sc/ st க்கு இட ஒதுக்கீடு தரப்பட சட்டம்.)
இந்தச் சட்டத்தை எதிர்த்து காந்தி எரவாடா சிறையில் உண்ணாவிரதம் ஆரம்பிக்கின்றார் ..
1932 -காந்தி இறந்தால் பரவாயில்லை. மக்கள்தான் முக்கியம், இந்த உடன்பாட்டுக்கு ஒப்புக் கொள்ளாதீர் என்று அம்பேத்கருக்கு பெரியார் தந்தி அனுப்புகிறார்.. ஆனால் காந்தியின் பிடிவாதத்தால் பிரிட்டன் அரசு வழங்கிய 74 ரிசர்வ் தொகுதி வேண்டாம் என்று அம்பேத்கர் திருப்பித் தருகிறார்.
148 தொகுதியில் காங்கிரஸ் ஒடுக்கப்பட்ட மக்களைப் ( தனித் தொகுதி இல்லை. மற்ற கட்சிகள் யாரை வேண்டுமானாலும் நிறுத்தும் ) போட்டியிட வைக்கும் என்று காந்தி அம்பேத்கர் இடையே பூனா ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. .
கான்ஸ்டியுஷன் ஆர்டிகிள் 15(4),15(5). இரண்டு இட ஒதுக்கீட்டை உறுதி செய்கிறது.
1948-ல் குமார ராஜா சாமி முதல்வராக மெட்ராஸ் பிரெஸிடெண்ஸி BC-25, ScSt-16 என 41 % இட ஒதுக்கீட்டை அமல் படுத்தியது.
1949 -அம்பேத்கர் தலைமையில் கான்ஸ்டியுஷன் இட ஒதுக்கீட்டை அடிப்படை உரிமை ஆக்கியது! அதோடு இட ஒதுக்கீடு வறுமை ஒழிப்பு திட்டம் அல்ல என்பதையும், அது Justice for injustice ( நீதி மறுக்கப்பட்டவர்களுக்கான நீதி ) என்பதையும் கூறியது.
1951- ல் Hindu code of act பாலின சமத்துவத்தை எதிர்ப்பதாக கூறி அம்பேத்கர் ரிஸைன் செய்தார்!
1950 -செண்பகம் துரைராஜ் வழக்கு. BC ரிசர்வேஷனுக்கு எதிராகப் போடப்பட்ட முதல் வழக்கு! மருத்துவக் கல்லூரியில் BC ரிசர்வேஷன் தருவதால் தன் வாய்ப்பு பறிக்கப்படுவதால் அதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி வழக்குத் தொடரப்பட்டு உச்சநீதிமன்றம் ரிசர்வேஷனை ரத்து செய்தது.
தமிழகத்தில் பெரியார் தலைமையில் பெரும் போராட்டம், சட்ட எரிப்பு நடந்தது! பெரியார் காமராசரிடம் பேசி, காமராசர் நேருவிடம் பேசிப் புரியவைத்து கொண்டு வந்த முதல் சட்டத் திருத்தம் 1951ல் BC ரிசர்வேஷனுக்கான 15(4) 9வது அட்டவணையில் சேர்க்கப்பட்டது.
1953 -காகா கலேகர் தலைமையில் முதலாவது backward commission அமைக்கப்பட்டது! அந்தக் கமிஷன் 1955ல் தன் அறிக்கை தந்தது! அதில் தனக்கு தனிபட்ட முறையில் இட ஒதுக்கீட்டுக்கு விருப்பம் இல்லை என்ற நோட் எழுதித் தர அந்த அறிக்கை கிடப்பில் போடப்பட்டது.
1969 -தமிழ்நாட்டில் கலைஞர் ஆட்சியில் முதல் backward commission சட்டநாதன் தலைமையில் அமைக்கப்பட்டது. 1971ல் ரிப்போர்ட் தரப்பட்டது .
1971 -கலைஞர் அரசு BC-31, scst-18. இட ஒதுக்கீட்டை 49% ஆக்கியது.
(ஆந்திராவில் 60% தந்து உச்சநீதிமன்றம் 50% தாண்டக் கூடாது என்று 60% ஒதுக்கீட்டைத் தள்ளுபடி செய்ததால் 49% ஆக்கினார் ) .
1980-ல் எம்ஜீஆர் இட ஒதுக்கீட்டில் கிரிமி லேயர் பரிந்துரையை அமல்படுத்த முயன்றார். பலத்த எதிர்ப்பால் கைவிட்டார்.
1982-ல் இரண்டவது பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் அம்பா சங்கர் தலைமையில் அமைக்கப்பட்டது. இட ஒதுக்கீட்டை BC-50%, scst-18% உயர்த்தினார் .
1988-89-ல் வன்னியர் போராட்டம் 20% இட ஒதுக்கீடு கேட்டு நடந்தது
கலைஞர் bc-30% ,MBC-20%, sc-18%, st-1% என69%ஆக்கினார்.
அந்தந்த வகுப்பில் 65% மக்கள் வளர்ச்சியடைந்து இருந்தால் அவர்கள் BC, அதற்கு குறைவாக வளர்ச்சி அடைந்து இருந்தால் MBC என வரையறுக்கப்பட்டது.
1979-ல் மொரார்ஜி மண்டல் தலைமையில் இரண்டாவது பிற்படுத்தபட்டோர் குழு அமைக்கின்றார்.
1980 -இந்திரா 27% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த உடன்படுகிறார்.
1990-ல் விபிசிங் ஓபிசி இட ஒதுக்கீட்டை சட்டப் பூர்வமாக்கி சமூகநீதி காத்தார்.
1991- ebc - economically backwardக்கு 10% ஒதுக்கீடு சட்டமாகிறது.
( பிற்படுத்த்ப்பட்டோருக்கு இல்லை....உயர்சாதியில் பொருளாதார ரீதியா பின் தங்கியோர் ).. வருமான வரம்பு 1 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது .
1992 -மண்டல் வழக்கு , இந்திரா சானே தீர்ப்பு, 27% ஒதுக்கீட்டை உறுதி செய்து 10% ஒதுக்கீட்டை ரத்து செய்தது.
பதவி உயர்வில் இட ஒதுக்கீடு தரக்கூடாது.
Carry forward vacancy ( அதாவது அந்த வகுப்பில் அந்த ஆண்டு அந்த சீட்டுக்கு தகுதியான ஆட்கள் நிரப்பப்படவில்லை என்றால் அந்த சீட்களை அடுத்த ஆண்டு கோட்டாவில் சேர்த்துக் கொள்ளலாம் ).
50% தாண்டக் கூடாது.
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ராம் நந்தன் குழுவை கிரிமி லேயரைக் கண்டறிய அமைக்கின்றது.
1994-95 -பதவி உயர்வில் ரிசர்வேஷனுகான 77 வது சட்ட திருத்தத்தை கொண்டு வருகிறது.
தொடர் உயர்பதவிகான 85 வது சட்டதிருத்தம்.
Carry forward vacancy 50% தாண்டலாம் என்ற 81 வது சட்ட திருத்தம் கொண்டு வரப்படுகிறது.
1993 ல் விதி 43 ல் தேசிய பிற்படுத்தபட்டோர் ஆணையப் பரிந்துரையில் சேர்க்கப் படுகிறது
1994-ல் நெல்லை மார்த்தாண்டம் பிள்ளை மற்றும் வாய்ஸ் அமைப்பின் விஜயன் இட ஒதுக்கீடு 50% தாண்டக் கூடாது என்று வழக்கு தொடர்கின்றனர்.
1994 -ஜெயலலிதா அரசு வழக்கு தொடர்ந்து 76 வது சட்ட திருத்தமாய் 69% இடஒதுக்கீட்டை உறுதி செய்கிறது.
2005- IIM,IIT போன்ற உயர்கல்வி நிலையத்தில் ஓபிசி ரிசர்வேஷனை உறுதிப்படுத்தி 93வது சட்டத் திருத்தம் கொண்டு வரப்படுகிறது.
2006 -நாகராஜ்வழக்கு தீர்ப்பு.
socially backwardக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லாத போது, நிர்வாக பாதிக்கப்படாதவாறு இட ஒதுக்கீடு தரலாம் என்று தீர்ப்பு தருகிறது.
2018 -ஜர்ணயில் சிங் - லட்சுமி நாராயணகுப்தா அட்டவணை வகுப்புக்கும் கிரிமி லேயர் சேர்க்க வலியுறுத்திப் போட்ட வழக்கை கோர்ட் தள்ளுபடி செய்து, not applicable என்று தீர்ப்பு தந்தது..
2020 - மருத்துவ கல்வியில் ஓபிசிக்கான 50 % இட ஒதுக்கீட்டுக்கான வழக்கு நிலுவையில் உள்ளது.
மக்கள் தொகையில் மிகக் குறைந்த சதவீதம் உள்ள பிராமண, உயர் வகுப்புக்கான ஒதுக்கீடு பத்தே நாட்களில் இறுதி செய்யப்பட்டு சட்டமாகின்றது ...
பெரும்பான்மை மக்களின் உரிமைக்காக 1854 ல் ஆரம்பித்து 166 ஆண்டுகள் நீண்ட போராட்டம் நடந்து இன்று வரை தொடர்கிறது.
யார் அதிகார ரீதியாக வலுவாக உள்ளனர் ?? .
தேவி.-  மீள்பதிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக