சனி, 23 நவம்பர், 2024

வயநாடு உள்பட 2 லோக்சபா, 48 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தல்.. இன்று வாக்கு எண்ணிக்கை

 tamil.oneindia.com - Mani Singh S :   டெல்லி: மகாராஷ்டிராவில் உள்ள நாந்தெட் மற்றும் கேரளாவின் வயநாடு ஆகிய 2 லோக்சபா தொகுதிகளுக்கும்,
13 மாநிலங்களில் உள்ள 48 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தது.
இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.
மகராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.
காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு துவங்க உள்ளது.


அதேபோல, 13 மாநிலங்களில் உள்ள 48 சட்டமன்ற தொகுதிகளுகும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.
election results 2024 palakkad by election results palakkad by poll results

உத்தரபிரதேசம் (9 தொகுதிகள்), ராஜஸ்தான் (7), மேற்கு வங்கம் (6), அசாம் (5), பஞ்சாப் (4), பீகார் (4), கர்நாடகா (3), கேரளா (2), மத்திய பிரதேசம் (2), சத்தீஸ்கார், குஜராத், உத்தரகாண்ட், மேகாலயாவில் தலா 1 என இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இடைத்தேர்தல் நடைபெற்ற தொகுதிகளில் பெரும்பலானவை எம்.எல்.ஏக்களாக இருந்தவர்கள், எம்பி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் காலியானவை ஆகும்.

அண்மையில் முடிந்த ஹரியானா தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட தடுமாறின. இதனால், பாஜக வெற்றிக்கனியை பறித்தது. உத்தர பிரதேச சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் இந்தியா கூட்டணி கட்சிகளுக்கும் பெரிதாக உடன்பாடு எட்டப்படவில்லை. சமாஜ்வாடி கட்சி 9 இடங்களிலும் தனித்து போட்டியிடுகிறது.

உத்தர பிரதேசத்தில் கதேரி, கர்ஹால், மீராப்பூர் குண்டர்கி, புல்பூர், சிசாமு, காசியாபாத், மஜ்ஹவான் மற்றும் காஹிர் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் 8 தொகுதிகளில் எம்.எல்.ஏக்களாக இருந்தவர்கள் எம்பி தேர்தலில் வெற்றி பெற்றதால் நடைபெறுகிறது.

கர்நாடகாவை பொறுத்தவரை சென்னபட்டனா தொகுதியில் நிகில் குமாராசாமி களமிறங்கியுள்ள்ளார். எச்.டி தேவகவுடா, லோக்சபா தேர்தலில் வென்றதால் இந்த தொகுதி காலியானது. அதேபோல, ஷிக்கோன் மற்றும் சந்தூர் ஆகிய சட்டசபை தேர்தல்களிலும் இடைத்தேர்தல் நடைபெற்றது. கேரளாவின் வயநாடு லோக்சபா தொகுதிகளிலும் பாலக்காடு, செலக்காரா ஆகிய சட்டமன்ற தொகுதிகளிலும் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

மகாராஷ்டிராவில் நாந்தெட் லோக்சபா தொகுதியில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.. நா ந்தெட் தொகுதி எம்பி வசந்த்ராவ் சவான் (70) உயிரிழந்ததால் இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. வயநாடு மற்றும் நாந்தெட் தொகுதிகள் காங்கிரஸ் வசமே இருந்தது.

இந்த இடைத்தேர்தலில் வயநாடு லோக்சபா தொகுதி மற்றும் கர்நாடகாவில் உள்ள சென்னபட்னா சட்டமன்ற தொகுதி உள்ளிட்டவை மிகவும் கவனம் பெற்றுள்ளது. வயநாட்டில் பிரியங்கா காந்தியும், சென்னபட்னாவில் குமாரசாமியும் போட்டியிடுகின்றனர். காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும் நிலையில் பிற்பகலுக்குள் முன்னிலை நிலரவம் தெரிய வாய்ப்புள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக