வெள்ளி, 22 நவம்பர், 2024

அதானியை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதை தவிர - 1997 கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் சொல்வது என்ன?

 மின்னம்பலம் - Kumaresan M : ஓர் ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக அதிகாரிகளுக்கு 2029 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாகவும் அதை மறைக்கத் திட்டமிட்டதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதில், ஆந்திர அரசு உயர் அதிகாரிகளுக்கு மட்டும் 1750 கோடி லஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க போலீஸ் கூறியுள்ளது. இதற்காக, அமெரிக்காவில் 3 பில்லியன் டாலர்கள் வரை நிதி திரட்டி, அதில் இருந்து லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்க நீதித்துறை குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது.
அதானி இந்தியாவில் இருந்தாலும் நியூயார்க் நகர போலீஸ் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.



இதனால், இந்தியா அதானி உள்ளிட்ட 7 பேரை அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக இந்திய வம்சாவளி அமெரிக்க அட்டர்னி ரவி பத்ரா கூறியுள்ளார்.

கைதிகள் பரிமாற்ற ஒப்பந்த  அடிப்படையில் இந்த விதியை இந்தியா மதிக்க வேண்டியது இருக்கும் என்றும் 1997 ஆம் ஆண்டு இதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா மற்றும் அமெரிக்கா ஒப்பந்தமிட்டுள்ளதாகவும் ரவி பத்ரா தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நீதித்துறையின் , வெளிநாட்டு ஊழல் நடைமுறைகள் சட்டத்தின்படி, தங்கள் நாட்டில் பணம் திரட்டி வெளிநாட்டு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதையோ, தவறான வழிகளில் பணம் செலவழிக்கப்படுவதையோ முற்றிலும் தடுக்கிறது.

அமெரிக்க சட்டத்தின் கீழ், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தானாக முன்வந்து நீதிமன்றத்தில் ஆஜர் ஆவார் என்கிற எதிர்பார்ப்பு இல்லாவிட்டால் நீதிமன்றங்கள் கைது வாரண்ட்களை பிறப்பிக்கும்.

குற்றம் சாட்டப்பட்டவர் ஒத்துழைப்பு கொடுத்தால், நீதிமன்றத்தில் ஆஜராகக் கோரி சம்மன் அனுப்பலாம். நிலைமை தீவிரமாக இருப்பதாக  உணர்ந்தால் இண்டர்போல் உதவியை நாடி ரெட் நோட்டீஸ் அளிக்கப்பட்டு விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
.
–எம்.குமரேசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக