வியாழன், 10 அக்டோபர், 2024

Ratan TATA தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்!

  நக்கீரன் : பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா வயது மூப்பு காரணமாக வழக்கமான பரிசோதனைக்காக மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நேற்று முன்தினம் செய்திகள் வெளியாகியிருந்தன.
இதனையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகச் செய்திகள் வெளியாகின. மேலும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ரத்தன் டாடா காலமானார்.


இவரது மறைவுக்குப் பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ரத்தன் டாடா  ஒரு தொலைநோக்கு வணிகத் தலைவர். இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க வணிக நிறுவனங்களில் ஒன்றிற்கு அவர் நிலையான தலைமையை வழங்கினார். அதே நேரத்தில், அவரது பங்களிப்பு மகத்தானது” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாகப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் தனது எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில், “ரத்தன் டாடாவின் மறைவு வருத்தமளிக்கிறது. நமது பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கு அவர் செய்த மகத்தான பங்களிப்புகளுக்காக அறியப்பட்ட இந்தியத் தொழில்துறையின் சக்தி வாய்ந்தவர் ஆவார். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக