வியாழன், 10 அக்டோபர், 2024

டாடா குழுமத்தின் அதிகாரம் யாருக்கு..? டாடா குடும்பத்தின் அடுத்த தலைமுறை..!

டாடா குழுமத்தின் அதிகாரம் யாருக்கு..? டாடா குடும்பத்தின் அடுத்த தலைமுறை..!

 tamil.goodreturns.in -Prasanna Venkatesh : டாடா சன்ஸின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா அக்டோபர் 9ஆம் தேதி இரவு மும்பை மருத்துவமனையில் உடல் நல குறைவால் மறைந்தார். இந்த வாரம் திங்கட்கிழமை மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்க அவர், இன்று மாலை மீண்டும் மோசமான உடல் நிலை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார்.
இவருடைய மறைவு இந்திய மக்கள் மனதில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது,
பொதுவாக ஒரு தொழிலதிபரின் மறைவு இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தாது.
ஆனால் டாடா குடும்பமும், டாடா குழுமம் இந்திய மக்களுக்கு கல்வி முதல் சுகாதாரம் வரையில், நாட்டின் வளர்ச்சியிலும், மக்களின் வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றியிருக்கும் காரணத்தால் ரத்தன் டாடா மீதும், டாடா குடும்பத்தின் மீதும் தீரா அன்பு இப்போதும் இருந்த நிலையில் இவரின் மறைவு கண்ணீராக மாற்றியுள்ளது.



இந்த நிலையில் டாடா சன்ஸ் நிர்வாகத்தை என் சந்திரசேகரன் தலைமையில் கம்பீரமாக தொடர்ந்தாலும், டாடா குழுமத்தில் பெரும் ஆதிக்கம் செலுத்தும் டாடா டிரஸ்ட்-ன் அதிகாரம் யாருக்கு செல்லப்போகிறது என்பது தான் தற்போது முக்கியமான கேள்வியாக உள்ளது.

டாடா குழுமத்தின் எதிர்கால தலைவர்களாக அமைதியாக தங்களை நிலைநிறுத்திக் கொண்டிருக்கும் டாடா குடும்பத்தின் அடுத்த தலைமுறை மீது தற்போது கவனம் திரும்பியுள்ளது.

இந்த வளரும் நட்சத்திரங்களில் லியா, மாயா மற்றும் நெவில் ஆகியோர் உள்ளனர் - இவர்கள் ரத்தன் டாடாவின் சகோதரர் நோயல் நவல் டாடாவின் குழந்தைகள் ஆவார். இந்தியாவில் உள்ள பிற குறிப்பிடத்தக்க தொழில் குடும்பங்களைப் போலல்லாமல், இந்த இளம் டாடாக்கள் நிர்வாகத்தில் உடனடியாக தலைமைப் பதவிகளில் நியமிக்கப்படவில்லை.

அதற்கு பதிலாக, அவர்கள் தங்கள் சொந்த கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு மூலம் தங்கள் திறமையை நிரூபித்து, நிறுவனத்தின் நிர்வாக பதவியின் ஏணியில் நிலையாக ஏறி வருகின்றனர். மேலும் நோயல் நவல் டாடா கட்டுப்பாட்டிற்கு டாடா டிரஸ்ட் நிர்வாகம் வரும்.

மூவரில் மிகப்பெரியவர் லியா டாடா, இவர் ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட்டில் உள்ள IE பிசினஸ் ஸ்கூலில் மார்க்கெட்டிங் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். அவர் 2006 ஆம் ஆண்டில் தாஜ் ஹோட்டல்கள் ரிசார்ட்ஸ் & பேலசில் உதவி விற்பனை மேலாளராக டாடா குழுமத்தில் சேர்ந்தார், மேலும் பல்வேறு பதவிகளில் முன்னேறி, தற்போது தி இந்தியன் ஹோட்டல்கள் கம்பெனி லிமிடெட் (IHCL) இல் துணைத்தலைவராக பணியாடுகிறார்.

இளைய மகள் மாயா டாடா தனது தொழிலை டாடா கேபிடலில் தொடங்கினார், டாடா குழுவின் முன்னணி நிதி சேவை நிறுவனத்தில் அனலிஸ்ட் ஆக பணியாற்றினார்.

அவரது சகோதரர் நெவில் டாடா தனது தொழில் பயணத்தை தனது தந்தை உருவாக்கிய சில்லறை சங்கிலியான டிரெண்டில் தொடங்கினார்.

இந்த வாரத்தின் முற்பகுதியில், 86 வயதான ரதன் டாடா தனது சமூக ஊடகத்தில் தனது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை வயது மற்றும் சுகாதார நிலைமைகளுடன் தொடர்புடைய உடல் உபாதையின் வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டேன் என அறிவுறுத்தினார்.

ரத்தன் டாடா 1991 இல் டாடா குழுமத்தின் தலைவராக பொறுப்பேற்றார். அவரது தலைமையின் கீழ், டாடா டெலெசர்வீஸை 1996 இல் தொடங்கியது மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீஸை 2004 இல் வெற்றிகரமாக ஐபிஓ வெளியிட்டது போன்ற குறிப்பிடத்தக்க மைல்கற்களை டாடா குழுமம் அடைய வழிக்காட்டினார்.

2012 இல் தலைவராக பதவி விலகிய போதிலும், ரத்தன் டாடா, டாடா சன்ஸ், டாடா இண்டஸ்ட்ரீஸ், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல் மற்றும் டாடா கெமிக்கல்ஸ் ஆகியவற்றின் கௌரவ தலைவர் பட்டத்தை தக்க வைத்து முக்கியமான நிர்வாக முடிவுகளில் முக்கிய தூணாக செயல்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக