செவ்வாய், 8 அக்டோபர், 2024

ஹரியானாவில் பாஜகவுக்கு வெற்றி...? காஷ்மீரை கைப்பற்றும் காங்கிரஸ் கூட்டணி!

 zeenews.india.com - Sudharsan G :  Jammu and Kashmir Election Result 2024 LIVE Update: ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று (ஆக. 8) நடைபெறுகிறது. இதுகுறித்து உடனடி தகவல்களை இங்கு அறிந்துகொள்ளலாம்.
: ஜம்மு காஷ்மீர் (Jammu Kashmir) மற்றும் ஹரியானா மாநிலத்திற்கான சட்டப்பேரவை தேர்தல்கள் சமீபத்தில் நடந்து முடிந்தன. இந்நிலையில், தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (அக். 8) நடைபெறுகிறது. ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த அக். 5ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டு தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்ட பின்னர் நடைபெற்ற முதல் தேர்தல் ஆகும். இங்குள்ள 90 தொகுதிகளில் மூன்று கட்டமாக தேர்தல்கள் நடைபெற்றன.



அந்த வகையில், இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்பதால் ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா மீதுதான் நாட்டின் மொத்தம் கவனம் குவிந்திருக்கிறது. ஏனென்றால், பாஜக மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் நடைபெற்ற முதல் தேர்தல் என்பதால் ஹரியானாவையும், ஜம்மு காஷ்மீரையும் கைப்பற்றப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் ஹரியானாவிலும், ஜம்மு காஷ்மீரிலும் கடுமையாக போட்டியிட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக