செவ்வாய், 8 அக்டோபர், 2024

இந்தியாவில் விற்பனையாகாமல் நிற்கும் 7.9 லட்சம் கார்கள்...தடுமாற்றத்தில் டீலர்கள்!

 minnambalam.com - Kumaresan M  :  நாடு முழுக்க ரூ.79 ஆயிரம் கோடி மதிப்புள்ள கார்கள் விற்பனையாகாமல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டில் புது புது கார்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. புதிய புதிய கார் ரகங்கள் சந்தையில் அறிமுகமாகிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் விற்பனையாகாமல் நிற்கும் 7.9 லட்சம் கார்கள்...தடுமாற்றத்தில் டீலர்கள்!புதிய கார் நிறுவனங்கள் சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் தொழிற்சாலைகளை தொடங்குகின்றன. ஆனால், கார்கள் விற்பனை மட்டும்  மந்தமாக இருக்கதாக தகவல் வெளியாகியுள்ளது.


தற்போது, விழாக்கால கொண்டாட்டங்கள் தொடங்கியிருக்கிறது. இருப்பினும் மந்த நிலையில் இருந்து சந்தை முன்னேற்றம் காணவில்லை. இதுவரை, நாட்டிலுள்ள கார் டீலர்களிடத்தில் 7.9 லட்சம் கார்கள் விற்காமல் முடங்கி கிடக்கின்றன.  இவ்வளவு எண்ணிக்கையிலான கார்கள் விற்காமல் முடங்கி கிடப்பது இதுவே முதன்முறை என்று Federation of Automobile Dealers என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால், டீலர்ஷிப் எடுத்தவர்களும் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் டீலர்களுக்கு வங்கிகள் கடன்களை கட்ட  நெருக்கடி கொடுக்காமல் இருக்க, ரிசர்வ் வங்கியை அணுக டீலர்கள் அமைப்பு முடிவெடுத்துள்ளது.

கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை பித்ரு பக் ஷா என்ற காலக்கட்டத்தில்  வட இந்தியாவில் கார் விற்பனை முற்றிலும் முடங்கியது. ஏனென்றால், இந்த காலக்கட்டத்தில் வட இந்தியர்கள் கார் , நிலம், தங்க நகைகள் உள்ளிட்ட எதையும் வாங்க மாட்டார்கள். இதனால், இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 3, 54, 267 கார்கள் விற்பனையான நிலையில், செப்டம்பர் மாதத்தில் 2, 75,681 கார்கள் மட்டுமே விற்கப்பட்டுள்ளன.

கேரளாவில் ஓணம் பண்டிகை தமிழகம் மற்றும் மகாராஸ்டிராவில் விநாயகர் சதூர்த்தி பண்டிகையின் போது கார் விற்பனை அதிகமாகும். ஆனால்,இந்த முறை அந்த விற்பனை வெகுவாக குறைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இனி நவராத்திரி , தீபாவளி பண்டிகையை நம்பியே டீலர்கள் இருக்கின்றனர். இதற்கு அடுத்து மழைக்காலம் நெருங்கி விட்டால் கார் விற்பனை வெகுவாக குறைந்து போய் விடுமென்றும் டீலர்கள் அஞ்சுகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

–எம்.குமரேசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக