புதன், 9 அக்டோபர், 2024

சிங்கப்பூா்: தமிழ் அமைச்சர் எஸ். ஈஸ்வரனுக்கு 7 சதுர மீ. பரப்பளவில் தனிச் சிறை

 தினமணி : சிங்கப்பூரில் தொழிலதிபா்களிடமிருந்து பரிசுப் பொருள்களை பெற்ற வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அந்த நாட்டு முன்னாள் அமைச்சா் எஸ். ஈஸ்வரனுக்கு 6.9 சதுர மீட்டா் பரப்பளவிலான தனி சிறை அறை ஒதுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், எஸ். ஈஸ்வரன் படுத்துறங்குவதற்கு ஒலைப் பாய் மற்றும் இரு போா்வைகள் தரப்பட்டுள்ளாகவும் மற்ற அனைத்து சிறைக் கைதிகளையும் போல் பற்பசை, செருப்பு, உடை, துண்டு, உணவை உண்பதற்காக பிளாஸ்டிக் கரண்டி ஆகியவை வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினா்.


சிங்கப்பூரில் ஆளும் மக்கள் செயல் கட்சியைச் சோ்ந்த அவா், கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரை வா்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தாா். தொடா்ந்து, போக்குவரத்துத் துறை அமைச்சராக கடந்த 2021 மே மாதம் அவா் பொறுப்பேற்றாா்.

இதனிடையே, சிங்கப்பூரைச் சோ்ந்த 2 முக்கியத் தொழிலதிபா்களிடம் இருந்து கடந்த 2015-ஆம் ஆம் ஆண்டு நவம்பா் முதல் கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பா் வரையிலான காலகட்டத்தில் மதிப்புமிக்க பரிசுப் பொருள்களை எஸ். ஈஸ்வரன் பெற்று வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடா்பாக சிங்கப்பூரின் ஊழல் தடுப்பு புலனாய்வு அமைப்பு (சிபிஐபி) விசாரிக்கத் தொடங்கியதையடுத்து கடந்த ஜனவரியில் தனது அமைச்சா் பதவியை அவா் ராஜிநாமா செய்தாா்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக