செவ்வாய், 10 செப்டம்பர், 2024

வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் உடல்நிலை கவலைக்கிடம்! -

வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் உடல்நிலை கவலைக்கிடம்! - மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை

tamil.news18.com  - Malaiarasu M  : தமிழ் செய்திகள் / தமிழ்நாடு / வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் உடல்நிலை கவலைக்கிடம்! - மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவராக இருப்பவர் வெள்ளையன். இவருக்கு திடீரென்று நுரையீரல் தொற்று ஏற்பட்டதால் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நுரையீரல் தொற்று நோய் காரணமாக, வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

Also Read | தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் காலமானார்.. திரையுலகினர் அதிர்ச்சி

அவருக்கு தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெள்ளையனின் உடல்நிலையை மருத்துவ நிபுணர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

தற்போது, அவருக்கு ஆண்டிபயோடிக் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாகவே உள்ளது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக