வெள்ளி, 27 செப்டம்பர், 2024

சங்கரன் கோவில் கொலை வழக்கு- 4 பேருக்கு மரண தண்டனை

 தினகரன்  : நெல்லை: திருவேங்கடத்தில் 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
வழக்கில் 11 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் தண்டனை விவரங்களை நீதிமன்றம் அறிவித்தது.
குற்றவாளிகள் பொன்னுமணி, குருசாமி, காளிராஜ், முத்துக்கிருஷ்ணன் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 5 பேருக்கு ஐந்து ஆயுள் தண்டனையும், 2 பேருக்கு 2 ஆயுள் தண்டனையும் விதித்து நெல்லை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக