சனி, 24 ஆகஸ்ட், 2024

இணையத்தை கலக்கும் ’அழகிய லைலா’ அன்ஷா ஷாகீர்.. இன்ஸ்டாவில் கிளம்பிய எதிர்ப்பும் ஆதரவும்!

 tamil.oneindia.com  - Rajkumar R  ;  சென்னை: கடந்த சில நாட்களாக இணையத்தை திறந்தாலே இன்ஸ்டாகிராம், ட்விட்டரில் எங்கு பார்த்தாலும், அன்ஷா ஷாகிர் தான் ட்ரெண்டிங்கில் உள்ளார்..
உள்ளத்தை அள்ளித் தா படத்தில் வரும் அழகியா லைலா பாடலை கவர் செய்து அவர் பாடிய பாடல், உலக லெவல் ஃபேமஸாக 'சிலர்' அவரை மிகக் கடுமையாக விமர்சித்தனர்.
இந்நிலையில் அவருக்கு ஆயிரக்கணக்கானோர் ஆதரவு தெரிவிக்க இப்போது இன்ஸ்டாகிராமில் அன்ஷா தான் ஹாட் டாபிக்.
தொழில்நுட்பம் அதிகமாக வளர்ந்துள்ள நிலையில் செல்போன் தான் எல்லாமே என்று ஆகிவிட்டது.

ஒற்றை செல்போனில் உலகமே கைக்குள்ளாக வந்துவிட்டதாக கருதும் நிலை தான் தற்போது உள்ளது.சில நேரங்களில் செல்போன்களில் மூழ்கும் பெண்கள், இளைஞர்கள் சமுக வலைதளங்களான ஃபேஸ்புக் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் உலாவி வருகின்றனர்.

பலர் ஏனோதானோவென்று இன்ஸ்டாகிராமில் அலைந்து திரிந்தாலும், சில தங்கள் நடன திறமை, பாடல் திறமைகளை ஆக்கப்பூர்வமான முறையில் வெளியிட்டு வருகின்றனர். இதனால் பலர் திரைத் துறை வளர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பத்தில் சில சிக்கல்களை சந்தித்தாலும் நிச்சயம் அவர்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. அப்படி இன்ஸ்டா, ஃபேஸ்புக்கில் மட்டும் பாடிக் கொண்டிருப்பவர்கள் உண்மையிலேயே திறமையானவர்களாக இருந்தால் அவர்கள் சினிமா சிகப்பு கம்பளம் விரித்து அழைக்கும் என்பது உண்மை தான்.. அப்படி பலரை டி.இமான் உள்ளிட்ட இசையமைப்பாளர்கள் அடையாளம் கண்டு தங்கள் படங்களில் வாய்ப்பு கொடுத்து திரைத்துறை பாடகர்களாக உயர்ந்துள்ளனர்.

அப்படி ஒருவர் தான் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் அன்ஷா ஷாகீர். மிகச்சிறந்த குரல் வளத்துடன் துள்ளல் இசையுடன் அவர் பாடிய உள்ளத்தை அள்ளித்தா படத்திலிருந்து அழகிய லைலா பாடல் தற்போது இன்ஸ்டாகிராமை கலக்கி வருகிறது. உண்மையிலேயே அந்தப் பாடல் வந்த கால கட்டங்களில் மிகவும் பிரபலமாக இருந்தது. கார்த்திக்கின் துள்ளல் நடனம், ரம்பாவின் நடன அசைவுகள் உள்ளிட்டவை காரணமாக அந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் எதிரொலித்தது.
சென்னையில் இருந்தபடியே.. அமெரிக்காவை இயக்கும்

இந்த நிலையில் அன்ஷா ஷாகீர் தன் குரலில் பாடி அதனை வெளியிட மீண்டும் அது இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வருகிறது. இதை அடுத்து ஆயிரக்கணக்கானோர் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இதனிடையே குறிப்பிட்ட சிலர் அந்தப் பெண்ணை மத ரீதியாக அவரது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட கணக்குகளில் கடுமையாக விமர்சித்து வந்தனர்.

குறிப்பிட்ட மதத்தில் "பாடுவது ஹாரம், உனக்கு நரகத்தில் தான் இடம் கிடைக்கும்" என்பது மட்டுமல்லாமல், அவரது குடும்பத்தினரையும் மிகக் கடுமையாக விமர்சித்து வந்தனர். இதை அடுத்து இன்ஸ்டாகிராம் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அன்ஷா ஷாகீர் பிரபலமான. இதை அடுத்து பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அது மட்டும் அல்லாமல் அவரது குரல் வளம் மிக அருமையாக இருப்பதாகவும், தொடர்ந்து அவர் பாட வேண்டும் என நம்பிக்கையூட்டி வருகின்றனர். அது மட்டும் அல்லாமல் ஏற்கனவே அவர் பாடிய பழைய இன்ஸ்டாகிராம் போஸ்ட்களில் சென்று அவருக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து தற்போது இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டிங்கில் இருக்கிறார் அன்ஷா ஷாகீர். அவருக்கு தமிழகம் மட்டுமல்லாது கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் ரசிகர்கள் பெருகி தங்களுக்கு பிடித்த பாடலை பாட வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் அவர் இந்திய அளவில் ட்ரெண்டாகியுள்ளார்.

திறமை யாரிடம் இருந்தாலும் நிச்சயம் அதனை பாராட்ட வேண்டும். சாதி ரீதியாகவோ மத ரீதியாகவோ ஒருவரது திறமையை விமர்சிப்பதும், வீணடிப்பதும் இந்த காலத்திலும் தொடர்கிறது என்பது வேதனையிலும் வேதனை என்கின்றனர் முற்போக்கு வாதிகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக