சனி, 17 ஆகஸ்ட், 2024

டாக்டர் வன்புணர்வு குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை வழங்கக்கோரி மம்தா பானர்ஜி பேரணி

 மாலை மலர்  :  மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை பயிற்சி டாக்டர் கொடூரமான வகையில் பாலியல் வன்புணர்வு செய்து  கொலை செய்யப்பட்டார். நீதி வேண்டி மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாணவி  பாலிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து அறிந்ததும், குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதற்கிடையே இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது.
சிபிஐ வருகிற ஞாயிற்றுக்கிழமைக்குள் (18-ந்தேதி) முழுமையாக விசாரணை நடத்தி, குற்றவாளிக்கு தூக்குத் தண்டனையை உறுதி செய்ய வேண்டும் என இறுதிக்கெடு விதித்திருந்தார்.



இந்த நிலையில் இன்று பேரணியில் ஈடுபட்டார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெண் எம்.பி.க்களுடன் மம்தா பானர்ஜி பேரணி மேற்கொண்டார். அப்போது பேரணியில் கலந்து கொண்டவர்கள் "நாங்கள் குற்றவாளிக்கு தூக்குத் தண்டனையை விரும்புகிறோம்" என கோஷம் எழுப்பினர்.

"பொதுமக்களின் போராட்டத்திற்கு தலைவணங்குகிறோம். அவர்கள் சரியான விசயத்தை செய்தார்கள்" என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக