வியாழன், 15 ஆகஸ்ட், 2024

2026 திமுக 200 தொகுதியில் போட்டி.? காங்கிரஸ்க்கு செக்? பல்டி அடிக்க காத்திருக்கும் கதர்

 tamil.asianetnews.com  -  Ajmal Khan  :  தமிழகத்தில் திமுகவும் காங்கிரசும் பல ஆண்டுகளாகக் கூட்டணியில் இருந்து தேர்தல்களைச் சந்தித்து வருகின்றன. 2026 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுக்குக் குறைந்த தொகுதிகளே ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேற திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் திமுக கூட்டணியோடு காங்கிரஸ் பல ஆண்டுகாலமாக பயணம் மேற்கொண்டு வருகிறது. பலவித ஏற்றம்  இறக்கங்கள் இருந்தாலும் இந்த கட்சிகள் தேர்தலை ஒற்றுமையாக சந்தித்து வருகிறது.
கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழகத்தில் திமுகவும், மத்தியில் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியில் இருந்தது. அப்போது 2 ஜி வழக்கில் திமுக நிர்வாகிகளுக்கு கடும் நெருக்கடியை அமலாக்கத்துறை கொடுத்தது. ஆ.ராசா மற்றும் கனிமொழி அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.

திமுக தலைமையின் வீடுகளில் தொடர் சோதனை நடைபெற்றது. இந்த சூழ்நிலையில் திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச காங்கிரஸ் நிர்வாகிகள் அண்ணா அறிவாலயம் கீழ் தளத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

 நெருக்கடி கொடுத்த காங்கிரஸ்

தேர்தல் முடிவுகள் திமுகவிற்கு அதிர்ச்சியை கொடுத்தது. போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியை பெற்றது. எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக தலைமையிலான கூட்டணி மூன்று இடங்களை கைப்பற்றி இருந்தது. இதன் காரணமாக மீண்டும் திமுக- காங்கிரஸ் கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை சந்தித்தது. 2019ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக தலைமை 41 இடங்களை மட்டுமே ஒதுக்கியது. இதில் 8 இடங்களில் மட்டுமை காங்கிரஸ் வெற்றி பெற முடிந்தது. எனவே காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் இடங்களை ஒதுக்கியது தான் திமுக தோல்விக்கு முக்கிய காரணமாக பேசப்பட்டது. திமுக கூட்டணி மொத்ததமாக 98 இடங்களை மட்டுமே பெற்றது.

திமுக கூட்டணி அடுத்தடுத்த வெற்றி
இருந்த போதும் இந்த கூட்டணியானது தொடர்ந்து நிலையில் 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 38 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது.  

அந்த வகையில் 10 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை இருந்த அதிமுக கூட்டணியை தூக்கி அடித்து மிகப்பெரிய வெற்றியை திமுக கூட்டணி பதிவு செய்தது. இரண்டு நாடாளுமன்றத் தேர்தல், ஒரு சட்டமன்ற தேர்தலில் இந்த கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலையும் எதிர்கொள்ள தயாராகி வருகிறது.

காங்கிரஸ் - திமுக அதிருப்தி
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு ஒவ்வொரு முறையும் 40க்கும் மேற்பட்ட இடங்களை கொடுத்து காங்கிரஸ் கட்சியினர் உழைக்காமல் வெற்றி பெறுவதாகவும் திமுகவினரின் உழைப்பு மட்டுமே அதிகமாக இருப்பதாகவும் உடன்பிறப்புகள் திமுக தலைமையிடம் கூறி வருகின்றனர். எனவே வருகின்ற 2026ஆம் ஆண்டு  சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்ட இடங்களில் திமுகவினரை போட்டிட விரும்புவதாக கூறப்படுகிறது. இதனையடுத்துதான் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 200  தொகுதிகளை இலக்காக வைத்து திமுக தற்போது களம் இறங்கியுள்ளது.

கூட்டணி தாவ திட்டமிடும் காங்கிரஸ்
200 தொகுதிகளை திமுக போட்டியிட தீர்மானித்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதி ஒதுக்கப்படும் என்று கேள்வியானது எழுந்துள்ளது. எனவே திமுக கூட்டணியில் தொடர்ந்தால் காங்கிரஸ் கட்சிக்கு 10 முதல் 15 தொகுதியே ஒதுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே திமுக கூட்டணியில் இருந்து வெளியேற காங்கிரஸ் கட்சிக்கு திமுக தலைமை அழுத்தம் கொடுப்பதாக கூறப்படுகிறது. இந்த வாய்ப்பை வழிமேல் விழி வைத்து காத்திருக்கும் அதிமுக காங்கிரஸ் கட்சியை தங்கள் அணியில் இணைக்க காத்துக்கொண்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக