திங்கள், 8 ஜூலை, 2024

Jaffna மெடிக்கல் மாபியாவுக்கு எதிராக போராடும் டாக்டர் அர்சுனா ராமநாதன் பாராளுமன்ற விசாரணைக்கு கொழும்பு சென்றார்

 

Annesly Ratnasingam  :  தனி ஒருவனாக உண்மைக்கு குரல்கொடுக்கும் வைத்தியர் "அர்சுனா ராமநாதனுக்கு" எனது பூரண ஆதரவு.
சுய நலமில்லாது யாழ் வடமராச்சி மக்களுக்காகவே தனது சேவையை, உயிரை பணயம் வைத்து கொண்டு தனித்தே போராடும் அவருக்கு எனது ஆதரவு.
ஊழல் மிக்க இந்த நாட்டின் முழு செயற்பாடும் மாறுமட்டும் எதுவும் நடக்கப்போவதில்லை.
சில நேரங்களில் அவரின் இந்த போராட்டம் தோல்வியில் முடியலாம்.
 ஆனால் அவர் பற்றவைத்த இந்த நெருப்பு தொடர்ந்து எரியும்..
நாட்டில் தலையில் இருந்து கால் வரை எங்கும் எதிலும் ஊழல்.
இதை முற்று முழுதாக துடைத்து அகற்றும் வரை நாடும் நாமும் முன்னேற முடியாது.
அன்று குருநாகலில் வைத்தியர் ஷாகி.
இன்று சாவகச்சேரியில் வைத்தியர் அர்சுனா..
தனியே போராடிய, போராடும் இவருக்கு எந்த ஒரு வைத்தியரும் வெளி வெளியாக தமது ஆதரவை தெரிவித்ததில்லை..
காலம் பதில் செல்லும்.   வாய்மையே வெல்லும்.


வாழ்த்துக்கள் இளம் உறவே..
உங்களுடன் தோளுக்கு தோள் நின்று போராட இயலாமல் போனத்திற்கு எனது வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்.
ஆனாலும் உங்களது உண்மையான, நேர்மையான இந்த போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக