திங்கள், 8 ஜூலை, 2024

யாழ்ப்பாண சிவபூமி இல்லத்தில் மலையக மாணவிகளுக்கு மூடிய குளியலறையில் குளிக்க அனுமதி கிடையாது

உலக அதிசயமாக கிழக்கிலங்கையில் சிவபூமி திருமந்திர அரண்மனை - கலாநிதி  ஆறுதிருமுருகன்

Arun Ambalavanar :   Breaking News
துர்க்காபுரம் மகளிர் இல்ல/சிவபூமி விவகாரம் பின்வரும் முகநூல் முதல் பட பதிவிலிருந்தே ஆரம்பிக்கிறது. இவ்வாண்டு மேமாதத்தில் மலையகத்தில் க/பொ/த சாதாரண தரத்தில் சிறப்பாகத் தேறிய 29 மலையக மாணவிகளை யாழ்ப்பாணத்தில் A/L படிக்க ஏற்பாடு செய்து தருவதாகக் கூறி சிவபூமி அறக்கட்டளை அவர்களை யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவருகிறது. அவர்களை துர்க்காபுரம் மகளிர் இல்லத்தில் தங்கவைக்கிறது.
சேர் பொன் ராமனாதன் காலத்து மலையகம் இப்ப இல்லை என்பது சிவபூமி அறக்கட்டளைக்கு தெரியாது. அவளவை தோற்றத்தில் மட்டும் அழகிகள் இல்லை.
இந்த 29 மகளிர்தாம் மூடிய குளியலறையில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டவர்கள். முதல் நாளே ஸ்மாட்டான 5 பெண்கள் தாங்கள் குளிக்க அனுமதிக்கப்பட்ட திறந்த வெளியை ஒரு கமெரா கண்காணிப்பதை கண்டு கிளர்ச்சி செய்து வெளியேறினார்கள். அவர்கள் கேட்டது உள்ளேயுள்ள மூடிய குளியல் அறைகளில் தங்களை குளிக்க அனுமதிக்கவே. அது மறுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்கள்.


யாழ்ப்பாணத்திலிருந்து பதுளைக்கு இரண்டு பஸ்களே உண்டு. காலை ஆறு மணிக்கும் இரவு எட்டு மணிக்கும். முதல் பஸ்ஸை  தவறவிட்ட பெண்கள் மீது அனுதாபங்கொண்ட யாழ்ப்பாண பொதுசனம் அவர்களை விசாரித்தது. அப்போதுதான் பொதுவெளியில் குளிக்க விடப்பட்டது, கமெரா இருப்பது யாழ் பொதுசனத்திற்கு தெரியவந்தது. யாழ்ப்பாண பொதுசனமும் இப்போ சேர் ராமநாதன் காலத்தில் இல்லை. நிலமை மோசமாவதாக யாரோ சிவபூமிக்கு எச்சரித்தார்கள். சிவபூமி ஒரு றைவரை அனுப்பிவைத்தது. அக்குழந்தைகள் தமக்கு அநீதி இழைக்கப்பட்ட மகளிர் இல்லத்திற்கு திரும்பிச் செல்ல மறுத்தார்கள். 

அந்த றைவரிடம்  "அவர்களைக் கட்டாயப் படுத்தாமல் அவர்களின் விருப்பப்படியே விடுமாறும் சொன்ன  ஒரு யாழ் பொது  சனத்தை றைவர் தாக்கினார். இப்படித்தான் அது ஒரு விவகாரமானது. இருந்தும் ஒரு மாதமானது அது செய்தியாக.
பொதுசனங்கள் ஜூன் மாதம் 2ம் திகதி  கொடுத்த முறைப்பாட்டை அடுத்து தெல்லிப்பளை பிரதேச சபை அதிகாரிகள் துர்காபுரம் மகளிர் இல்லத்திற்குச் சென்று விசாரணை செய்தார்கள். நடந்த அநீதிகளைக் கண்டுகொண்டார்கள். இவ்விடயத்தை பொலீசாரிடம் முறையிடுவது ஆறுதிருமுருகனின் செல்வாக்கால் தடுக்கப்பட்டது.
 

இரண்டாம் முறையாக பொதுசனங்கள் முறையிட்டபோது அது ஆளுநரின் கவனத்திற்கு வந்தது. துர்காபுரம் மகளிர் இல்லம் சிறுவர் இல்லமாகப்பதிவு செய்யப்படவில்லை.  அங்கு சிறுமிகளைத் தங்கவைத்தது சட்டவிரோதமானது. ஆளுநரின் விசாரணைகளில் கமெரா விவகாரமும் பதிவு செய்யப்படாத வேறு சில சிறுவர் இல்லங்களும் யாழில் இருப்பது தெரியவந்தது. 

ஆளுநர் பதிவு செய்யப்படாத சிறுவர் இல்லங்களை மூடவும் கமெராவை அகற்றவும் துர்க்காபுரம் மகளிர் இல்லத்தில் அவமதிக்கப்பட்டு அநீதி இழைக்கப்பட்ட மலையக பெண்குழந்தைகளை அவர்களின் ஊர்களுக்கு திரும்பிச் செல்லவும் மிகச்சரியாக உத்தரவிட்டார்.
தெல்லிப்பளை பிரதேச செயலாளர் அப்போதும் அதிகாரிகள் கமெரா விவகாரத்தை பொலீசில் முறையிடுவதை தடுத்துக்கொண்டிருந்தார். அதிகாரிகளோ விடாது போராடி ஜூலை 4ம் திகதியை இவ்விவகாரத்தை பொலிசில் முறைப்பாடு செய்தார்கள்.
இப்போது உதயன் செய்தித்தாளை குற்றவாளியாக்கிறார்கள். 

உதயன் ஊத்தை மீடியாத்தான். ஆனால் உதயன் போட்ட செய்தி முற்றிலும் Fake இல்லை. உதயனுக்கும் சிவபூமிக்கும் இடையில் இருக்கிற காணிப்பிரச்சனை வேறு. மலையக பெண்குழந்தைகள் மீது துர்க்காபுரம் மகளிர் இல்லத்தால் இழைக்கப்பட்ட அநீதிகள் வேறு. இரண்டுக்கும் முடிச்சுப்போட்டு பிரச்சனையை திசைதிருப்புவதும் ஆறுதிருமுருகனை காப்பாற்றுவதும் மகா  தவறு.
 

யாழ்ப்பாணம் ஈரானிய இறையாட்சி போன்ற சிவபூமி கிடையாது. யாழ்ப்பாணம் ஸ்ரீலங்கா சோசலிசக் குடியரசின் ஒரு நகரம். சிவபூமியின் தலைவர் ஆறுதிருமுருகன் ஈரானிய பெரும்மதத்தலைவர் ஆயத்துல்லா கொமேனி போன்ற சட்டத்திற்கு அப்பாற்பட்ட புனிதர் கிடையாது. 

அவரது தொண்டூழிய நிறுவனங்கள் ஸ்ரீலங்கா சட்டதிட்டங்களுக்கு அமைவாகவே இருக்கவேண்டும்.
பிரச்சனையின் உக்கிரத்தை விளங்கிக்கொள்ளாது தெல்லியூர் சி. ஹரிகரன் ஆளுநர் சாள்சையும் உதயன் பத்திரிகையையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுகிறார். இங்கு குற்றவாளிக் கூண்டில் ஏறவேண்டியவர் ஆறு திருமுருகனே.
 

 அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கலாநிதி விக்கி விக்னேஸ்வரன் என்ற தமிழ் அகதிகளுக்கான அமைப்பை நடாத்தும் ஒருவர் "அவரை நான் நம்புகிறேன்" என்று ஆறுதிருமுருகனுக்கு நற்சான்றிதழ் வழங்குவதோடு "மஹாஜனாக் கல்லூரியின் முன்னாள் அதிபரான திருமதி சிவமலர் அனந்தசயனனின் மேற்பார்வையில் இயங்கும் துர்க்காபுரம் மகளிர் இல்லத்தில் தவறுகள் நடக்க வாய்ப்பில்லை"  என்று முகநூலில் எழுதுகிறார். 

விக்கி விக்னேஸ்வரன் அறிய வேண்டியது என்னவென்றால் இந்த திருமதி சிவமலர் அனந்தசயனன் தான் மலையகச் சிறுமிகளுக்கு மூடிய குளியலறையில் குளிக்க அனுமதி மறுத்து அவர்களை கமெராவின் வீச்சுக்குள் உட்பட்ட திறந்த வெளியில் குளிக்க கட்டாயப்படுத்தியவர். 

அவர்கள் தம் மலையகப் பெற்றோரோடு செல்போனில் பேச அனுமதி மறுத்தவர். இச்சிறுமிகள் சுன்னாகம் திருமகள் அச்சகத்தில் கட்டணம் இல்லாத வேலை செய்யப்பணிக்கப்பட்ட குற்றச்சாட்டும் உண்டு. இவை அனைத்துக்கும் பொறுப்பு கூறவேண்டியவர்.
இன்றைய யாழ்ப்பாணத்தில் மிக அதிகளவிலான அதிகாரங்கள் குவிக்கப்பட்ட ஒரு இந்து மதத் தலைவராக ஆறுதிருமுருகன் இருக்கிறார்.
 

1. மிகப்பிரபல்யமான துர்க்கை அம்மன் கோயிலின் அறங்காவலர். தலைவர். இக்கோயிலின் மேற்பார்வையின் கீழேயே துர்க்காபுரம் மகளிர் இல்லம் வருகிறது.
2. யாழ்ப்பாணத்தின் மிகப்பெரிய இந்து அறக்கட்டளையான சிவபூமியின் தலைவர். இவ்வறக்கட்டளையின் உறுப்பினர்களும் பணியாளர்களும் ஆறுதிருமுருகனின் உறவினர்கள் மற்றும் நண்பர்களே
3. எந்த அரசாங்கம் இலங்கையில் ஆட்சியிலிருந்தாலும் ஒரு சைவமதப்பிரதிநிதி யாழ் பல்கலைக்கழக செனற் சபையிலிருக்கவேண்டுமென்பதற்காக எப்போதும் செனற் உறுப்பினராக நியமிக்கப்படுபவர்.
4. இதைவிட பல சைவமத சங்கங்களின் செல்வாக்கான உறுப்பினர்.
ஆறுதிருமுருகனின் குற்றங்கள்/தவறுகள் என்ன?
1. சிறுமிகளான மலையக  மாணவிகளை சட்டவிரோதமாக துர்க்காபுரம் மகளிர் இல்லத்தில் தங்கவைத்தது. அது மகளிர் இல்லமாகவே பதிவு செய்யப்பட்டது. மகளிர் இல்லமாகப் பதிவு செய்யப்பட்டதாயின் 16, 17 வயதான அச்சிறுமிகள் செல்போன் வைத்திருந்து தம் பெற்றோரோடு பேச அனுமதியுண்டு. அதனை தடுத்தது.
2. உள்ளே முடிய குளியல் அறைகள் இருந்தும் CCTV வீச்சுக்கு உட்பட்ட திறந்த வெளியில் குளிக்க கட்டாயப் படுத்தப்பட்ட அச்சிறுமிகளின் முறைப்பாட்டை கவனத்தில் எடுக்காதது.
3. தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவு அதிகாரிகள் "கிரிமினல்" குற்றமான கமெரா விவகாரத்தை பொலீசில் முறையிடுவதை தன்
 "அதிகாரத்தால்" தடுத்தது. இது Perverting the course  of Justice" என்கிற குற்றமாகும்.
 

4. ஒரு மாதத்தின் பின் ஆறுதிருமுருகனின் "அதிகாரத்தையும்" மீறி யாழ் பொதுசனங்களால் இவ்விடயம் வடமாகாண ஆளுநரின் கவனத்திற்கு சென்றபின்னரும் குற்றங்களின் உக்கிரத்தை அறியாது நடந்த தவறுகளுக்கு துர்க்காபுரம் மகளிர்  இல்லத்தின் அல்டிமேற் தலைவரான ஆறுதிருமுருகன் மன்னிப்பு கேட்காது பிரச்சனையை மூடிமறைக்கவும் திசை திருப்பவும் தன் ஆதரவாளர்களையும் பூத கணங்களான தன் சமூக வலைத்தள  Fake Account களையும் ஏவிவிட்டது. 

கடந்த வியாழக்கிழமை நான் போட்ட  முகநூல் பதிவை திசைதிருப்ப ஆறுதிருமுருகனின் பூதகணங்களான 40  முகநூல் Fake கணக்குகளும் Locked in போலி முகநூல் கணக்குகளும் முயற்சி செய்தன. கடந்த 72 மணித்தியாலங்களாக நான் முறையாகத் தூங்காமல் விழித்திருந்ததால் இந்த அநியாயத்தை தடுக்கமுடிந்தது.
5. ஆறுதிருமுருகனுக்கு தன் அதிகாரத்தின் எல்லைகள் தெரியாது. அவரது "அதிகாரத்தை" மீறி இரண்டாம் தடவை யாழ் பொதுசனங்களால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளின் விளைவுகளின் போது ஒரு மகத்தான மதத்தலைவராக அவர் மன்னிப்பு கேட்டிருந்தால் ஊத்தை மீடியா உதயனுக்கு மெல்ல அவல் கிடைத்திருக்காது. 

அந்த பெருந்தன்மை ஆறுதிருமுருகனிடம் கிடையாது. இது ஆறுதிருமுருகனின் பெருந்தவறு.
6. உதயன் செய்தியை பொய்யென்று சொல்கிற ஆறுதிருமுருகன் இப்போது செய்வதென்ன? இன்னொரு ஊத்தை மீடியாவான வலம்புரியில் தன்னைப் பாதுகாக்க தன்னைப்பற்றி மகத்துவப்படுத்திய Fake செய்திகளை வெளியிடுகிறார்.
7. வரலாற்றில் யாழ்ப்பாணத்தார் மலையக மக்களுக்கு செய்த அநியாயங்கள் பல. இப்போது நிலமை மிக்க சீர் பெற்றிருப்பினும் மலையக மக்கள் இதனை ஒருபோதும் மறக்கமாட்டார்கள். 

 

இது மிக சென்சிற்றான விடயம். இதுபற்றிய புரிதல் ஆறுதிருமுருகனுக்கு கிடையாது. அவர்தான் ஒரு யாழ்மையவாத சைவ வேளாரர் ஆச்சே. மிக நீண்டகாலம் யாழ் பல்கலைக்கழக செனற் உறுப்பினராக இருக்கும் அவர் யாழ் பல்கலைக்கழக செனற் கலந்துரையாடல்களில் அநியாயங்களுக்கெதிராக வாய்திறந்து பேசுவதே இல்லை. 40 தடவைகள் தன் வீட்டு Servant ஆன மலையகச் சிறுமியை வன்புணர்ந்த கே.ரி. கணேசலிங்கம் இன்று பேராசிரியராக யாழ் பல்கலைக் கழகத்திலிருக்கிறான். 

இது பற்றி ஆறுதிருமுருகன் செனற் சந்திப்புக்களில் எந்த கேள்வியும் எழுப்பியதில்லை.  பல பாலியல் குற்றங்களைச் செய்த முன்னாள் யாழ் பல்கலைக்கழக துணை வேந்தரான சடையன் சண்முகலிங்கன் ஆறுதிருமுருகனின் நெருங்கிய நண்பர்.  பிலிப்பைன்சில் ஆங்கிலத்தில் Ph.D  பட்டம்படிக்கமுடியாமல் ஊருக்கு திரும்பிய சடையன் துர்க்கை அம்மன் கோயிலை வைத்து தமிழிலேயே யாழ் பல்கலைக்கழகத்தில் தன் மொக்கை Ph.D  ஆய்வை செய்து கலாநிதியானான். 

இதற்கு நன்றிக் கடனாக வெறும் வாத்தியாக இருந்த ஆறுதிருமுருகனுக்கு யாழ் பல்கலைக்கழகம் கௌரவ கலாநிதிப் பட்டம் கொடுத்தது. இந்த ஆறுதிருமுருகனிடமிருந்து மலையக மக்கள் எப்படி நியாயம் எதிர்பார்க்க முடியும்?
 

யாழ் லாயர் குருபரன் குமாரவடிவேல் மூலமாக உதயனுக்கு ஒரு மிரட்டல் கடிதத்தை அனுப்பியதன் மூலம் தன் மகா தவறுகள் குற்றங்களிலிருந்து மீளலாம் என்பது ஆறுதிருமுருகனின் கடைசி ஆயுதம். உதயன் இதுபோன்ற எத்தனையோ மானநஷ்ட மிரட்டல் கடிதங்களைக் கண்டது. பனங்காட்டு நரி உதயன் சலசலப்புக்கு அஞ்சுமா? இனிமேல் தான் இதுகாலம் வரையும் ஊத்தை பத்திரிகையாக இருந்த உதயனிடமிருந்து உன்னத ஊடகக் கட்டுரைகளை எதிர்பார்க்கலாம். 

ஆம் ஆறுதிருமுருகனின் உண்மை வரலாற்றை உதயன் இனி அலசி ஆராய்ந்து போட்டுடைக்கப் போகிறது. ஒரு சக பத்திரிகையாளராக இது சம்பந்தமாக உதயன் பத்திரிகைக்கு வேண்டிய தகவல் மற்றும் பிற உதவிகளுக்கு  நான் உதவத்தயாராக இருக்கிறேன்.
 

அது சரி யார் இந்த லாயர் குருபரன் குமாரவடிவேல்? ஒரு காலத்தில் மனித உரிமைகளுக்காகப் போராடுகிற ஒரு யாழ் பல்கலைக்கழக சட்ட விரிவுரையாளராக இருந்தார். இப்போது பணத்துக்காக கணவனுக்கு விசுவாசமாக இல்லாது பஸ் றைவர்களோடும் தனது தொண்டு நிறுவன வாகன றைவர்களோடும் உடலுறவு கொண்ட பெண்களின் கேஸ்களில் ஆஜராகுபவர். அது அவர் தொழில் தர்மம்.
- நட்சத்திரன் செவ்விந்தியன்
         On behalf of
    Jaffnafashion.com
#மேலதிக_விபரம்_முதல்கொமன்ரில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக