புதன், 24 ஜூலை, 2024

ஆம்ஸ்ட்ராங் கொலை - ஸ்கெட்ச் போட்டு கொடுத்தது நான் தான்.-வாக்குமூலம்!

article_image1
tamil.asianetnews.com - Ajmal Khan  :  ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்தடுத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த கொலைக்கு காரணம் என்ன.?
திட்டம் போட்டது யார் என்பது தொடர்பான தகவலை தமாகா நிர்வாகியான ஹரிஹரன் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது புதிய வீட்டு முன் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்ட நிலையில்,  ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக 11 பேர் காவல்நிலையத்தில் சரண் அடைந்தனர்.
அப்போது ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்கு பழி வாங்க ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக  தெரிவித்துள்ளனர்.  
article_image2

Armstrong

கொலைக்கு காரணம் என்ன.?

இதனையடுத்து திருவேங்கடம் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த கொலையாளிகள் ஆம்ஸ்ட்ராங்க கொலையில் பின்னனியில் யார் இருப்பது போன்ற தகவலை கூற தொடங்கினர். அடுத்தடுத்து அதிமுக, பாஜக, தமாக உள்ளிட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.
இதில் முக்கிய நபராக தமாகா கட்சியை சேர்ந்த ஹரிஹரன் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் கொலையாளிகள் பயன்படுத்திய செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. 
 

article_image3

சம்போ செந்தில் தொடர்பு ஏன்.?

இந்த நிலையில் தமாக நிர்வாகியும், வழக்கறிஞருமான ஹரிஹரன் அளித்துள்ள வாக்குமூலத்தில், பல்வேறு கொலை மற்றும் குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி சம்போ செந்திலுக்கும் எனக்கும் பல ஆண்டுகளாக நட்பு உள்ளது.  கட்டப்பஞ்சாயத்து, ஸ்கிராப் தொழில் உள்ளிட்ட பல பிரச்சனைகளில் பகுஜன் சமாஜ்  கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் இடையூறாக இருந்து வந்தார்.  மேலும் தொழிலை செய்யவிடாமல் குறுக்கிட்டார். இதன் காரணமாக அவர் மீது சம்போ செந்தில் கோவத்தில் இருந்தார். 

article_image4

ரவுடிகளை இணைத்துக்கொண்டோம்

இதனால் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய வேண்டும் என திட்டமிட்டோம். அப்போது   ஆம்ஸ்ட்ராங் மீது மேலும் சில ரவுடிகளும் கொலைவெறியுடன் இருந்தனர்.  எனவே அவர்களையும் எங்களுடன் இணைத்துக்கொண்டார். இந்தநிலையில் தான் அதிமுக நிர்வாகியான மலர்கொடியின் மகன் அழகர் ராஜா எனது நண்பர், நானும் அவரும் ஒன்றாகத்தான் படித்தோம். இந்த பழக்கத்தின் மூலம் அடிக்கடி மலர்கொடி வீட்டிற்கு செல்வன்.

article_image5

article_image6

கூலிப்படையோடு இணைந்து கொலை

சம்போ செந்தில் மீது பல வழக்குகள் இருப்பதால் பல மாநிலங்களில் தலைமறைவாக இருப்பார். அவ்வப்போது வாட்ஸ் அப் கால் வழியாக தொடர்பு கொண்டு பேசுவார்.  அப்போது ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்கான இறுதி திட்டத்தை கூறினார். இதனையடுத்து தான் பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள். ஆட்டோ ஆட்டுநர் வேடத்தில் திருமலை உள்ளிட்டவர்களுடன் கூலிப்படையினர் இணைந்து கொலை செய்வதற்கு திட்டம் போட்டு கொடுத்து ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக  ஹரிஹரன் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக