புதன், 10 ஜூலை, 2024

சுயஜாதி ஆதிக்க அரசியலும் ஆம்ஸ்ட்ராங் படுகொலை எதிர்வினைகளும்

May be an image of 5 people and text
May be an image of 3 people and text
May be an image of 1 person and text

LR Jagadheesan :  தமிழ்நாட்டு தலித்தியம்: ஆண்டைத்தனத்தின் மறுஅவதாரம்!
திரையில் தோன்றிய கதாநாயகர்கள் நடத்திய கற்பனைக் கட்டப்பஞாயத்துகளை எதிர்த்து அவை ஆண்டை ஜாதிகளின் ஆதிக்கக்குறியீடுகள் என்று மிகக்கடுமையாக கண்டித்துக்களமாடிய,
பக்கம்பக்கமாக ஆய்வுக்கட்டுரைகளை தீட்டிய, ஆவேசம் பொங்க அரசியல் மேடைகளில் சன்னதமாடிய உத்தமர்கள்;
அந்த திரைப்படங்களால் தான் தமிழ்நாட்டில் ஜாதிக்கலவரங்களே உருவானதாக ஓங்காரக்குரலில் கண்ணீர் கொப்பளிக்க உரத்துச்சொன்ன அம்பேட்காரிஸ்டுகளும், அயோத்திதாசரிஸ்டுகளும் நவயுக தலித் தலைவர்களும் அவர் தம் அறிவுசீவிகளும்,
கடந்த நான்குநாட்களாக தமிழ்நாட்டின் தலைநகரில் நிஜத்தில் இயங்கிய கட்டப்பஞ்சாயத்து கும்பலின் தலைவரை,
 போற்றிப்பாடடி பெண்ணே ஆம்ஸ்ட்ராங்க் காலடி மண்ணே என்று கொண்டாடும் அழகைக்காண கண்கோடி வேண்டும்.



அட அட என்னே ஒரு அந்தர்பல்டி. இல்லையில்லை இது அம்பேட்காரிய பல்டி.
இத்தனை நாட்களும் ஜாதி ஆதிக்கத்தின் வடிவமாக நீங்கள் கூறிய கட்டப்பஞ்சாயத்தையும், ரௌடித்தனத்தையும், கொலைகள் உள்ளிட்ட எல்லாவகையான சமூக வன்முறைகளையும் இப்போது நியாயப்படுத்தி ஆதரித்து களமாடும் விந்தையின் காரணம் என்னவோ?
இதையெல்லாம் எதிர்த்ததாக நீங்கள் இதுவரை போட்டது வெறும் பகல்வேஷமா?

அப்படியானால் இத்தனைநாட்களும் நீங்கள் பேசியதும் எழுதியதும் வலியுறுத்தியதும் முன்வைத்ததும் ஜாதி எதிர்ப்போ, ஜாதி மறுப்போ, ஜாதி ஒழிப்போ அல்ல;
மாறாக நீங்கள் குற்றம் சுமத்திய ஆண்டைஜாதிகளின் அத்தனை அயோக்கியத்தனங்களையும் அராஜகங்களையும் கொலைகள் உள்ளிட்ட எல்லாவகையான சமூக வன்முறைகளையும் செய்யும் உரிமை எங்களுக்கும் உண்டு என்பதைத்தான்
இத்தனை நாட்களும் நீங்கள் சொல்லிக்கொண்டிருந்தீர்கள் என்பதை மிகத்தெளிவாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறீர்கள்.

கடந்த நான்கு நாட்களில். அவற்றை பொன்னெழுத்துகளில் வரலாற்றில் பொதித்துவையுங்கள். எதிர்கால ஆய்வுக்குத்தேவைப்படும்.
எப்போதும் சொல்வது தான் இப்போதும். தமிழ்நாட்டின் தலித்தியம் என்பது ஜாதி எதிர்ப்பு/மறுப்பு/ஒழிப்பு அரசியல் அல்ல.
அது அப்பட்டமான அக்மார்க் ஒற்றைஜாதியாதிக்கத்தின் அரசியல் கருத்தியல்/முழக்கம்/செயற்பாடு. நாங்களும் ஆண்டபரம்பரைதான் பிராம்மணர்களைவிட நாங்கள் மேம்பட்ட பிராம்மணர்கள் என்கிற அயோத்திதாசரின் ஆண்டை ஜாதியாதிக்க கருத்தியல் தான்.

திராவிடத்தின் ஆகச்சீரழிந்த அரசியல் வடிவமான எடப்பாடியின் அதிமுகவில் கூட ஜாதி மறுப்பு/எதிர்ப்பு/ஒழிப்பு சாத்தியப்படும். தேர்தல் நிர்பந்தம் காரணமாக.
ஆனால் நீங்கள் எல்லோரும் பேசும் தலித்தியம்  அம்பேட்காரியம் என்பதெல்லாம் உங்களின் வழிகாட்டியான அயோத்திதாசர் முன்வைத்த அப்பட்டமான சுயஜாதி ஆதிக்க அரசியல் தான். ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கான உங்கள் எதிர்வினைகள் அதற்கான நிரந்தர

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக