திங்கள், 24 ஜூன், 2024

கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணத்திற்கு பின்னால் RSS சதி?

 Neyveli Ashok :  கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணத்திற்கு பின்னால் RSS சதி இருக்குமா ?
RSS ரகசிய அறிக்கை 411/RO 30311/RSS CO3 (விடுதலை 26-3-95,  இந்துஸ்தான் டைம்ஸ் தொகுப்பு 1 - 1998 ஆகியவற்றில் இதனை காணலாம்)  இன் படி தான் இன்று நடக்கும் சம்பவங்கள் எல்லாம் இருக்கிறது போல தெரிகிறது. எப்படி ? முழுமையாக படியுங்கள்.....
பல ஆண்டுகளாக இருக்கும் குடிநீர் தொட்டியில் மலம் கலப்பது,
கள்ளக்குறிச்சி மாணவி மரணம்,
 - அதை தொடர்ந்து நடந்த கலவரம்,
அதுபோலவே ஓசூர் பகுதியில் நடந்த கலவரம், இப்போது கூட சேலம் பகுதியில் கோவில் உள்ளே விட மாட்டோம் என்ற பிரச்சனை, சென்ற ஆண்டும் இந்தாண்டு போலவே விஷ சாராயம் மரணம் என்று சம்பவங்கள் நடக்கிறது....
மேற்சொன்ன அந்த அறிக்கையில், 34 கட்டளைகள் RSS தனது கணவன்களுக்கு கொடுத்துள்ளது. அதில் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் என்றென்றும் ஒன்று சேரக்கூடாத வகையில் எவ்வாறெல்லாம் வேலை செய்யலாம் என்று திட்டங்கள் உள்ளது.


மேலும், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின சமூகத்தினர் பருகும் சாராயத்தில் விஷத்தை கலக்க வேண்டும் என்ற கட்டளையும் உள்ளது.
தற்போது நடந்துள்ள கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தை கணக்கில் கொண்டால், அந்த சாராயத்தை உற்பத்தி செய்வதில் காலம் காலமாக காய்த்து கொண்டிருந்தால், எந்த அளவு விவசாயத்தை கலக்க வேண்டும் என்பதை நன்றாக அறிந்திருப்பார்...

 மேலும் அதிக அளவு கலந்து விட்டால் அது உயிரிழப்பை தந்து தனது வாடிக்கையாளரை இழக்கக்கூடும் என்பதும் அவர்களுக்கு தெரியும்.
மேலும், அவர்கள் ஏன் அந்த ரசாயனத்தை சென்னையில் இருந்து வாங்க வேண்டும்?
அதை அவர்களுக்கு கொடுத்தது யார் ? ஒருவேளை அந்த காயித்தது நண்பர்களுக்கு தெரியாமலே அது கலக்கப்பட்டதா கோணத்தில், இந்த ஆர் எஸ் எஸ் அறிக்கையின் அடிப்படையிலும் கவனிக்க வேண்டும்.

இந்தியாவிலேயே ஒப்பற்ற ஆட்சியாக நடந்து கொண்டிருக்கும் திராவிட மாடல் ஆட்சிக்கும்,
திராவிட சித்தாந்தத்திற்கும் பார்ப்பன பணியா RSS சித்தாந்தத்திற்கும் எதிராக நடக்கும் இந்த போரில் பார்ப்பன பனியா கும்பல் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் செல்லும் என்பதை அரசு கையாள வேண்டும்.
கொஞ்சம் கவனம் சிதறினாலும்,
அவர்களுக்கான ஆய்வுக்கூடமாக தமிழ்நாட்டில் சில பகுதியை மாற்றி விடுவார்கள் என்கின்ற அச்சம் நம்மிடையே உள்ளது....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக