திங்கள், 24 ஜூன், 2024

சென்னையில் தாய், தம்பியைக் கொலை செய்த 20 வயது இளைஞர்

இந்து  : சென்னையின் திருவொற்றியூரில், தனது தாயையும் சகோதரனையும் கொலை செய்ததற்காக 20 வயது இளைஞர் ஒருவரை சனிக்கிழமையன்று (ஜூன் 22) காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த வாரம் புதன்கிழமையன்று நடந்த இந்த சம்பவம் இரண்டு நாட்கள் கழித்து தான் வெளிச்சத்திற்கு வந்ததாகவும், கைது செய்யப்பட்ட இளைஞரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் காவல்துறை அறிக்கை கூறுகிறது.
‘தி இந்து’ நாளிதழின் செய்தியின் படி, கல்லூரி மாணவரான அந்த இளைஞர் சரிவர படிக்காததால் பல பாடங்களில் தோல்வியடைந்திருந்தார்.

இது குறித்து இளைஞருக்கும், தாய்க்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் குடும்ப பொருளாதாரம் தொடர்பான அழுத்தம் மற்றும் வேறு சில குடும்ப பிரச்னைகள் காரணமாக அவர் இந்தக் கொலைகளில் ஈடுபட்டுள்ளார் என காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.



இந்த வழக்கின் முழு விவரம் என்ன? கல்லூரியில் படிக்கும் இளைஞர், தனது தாய் மற்றும் இளைய சகோதரரையே கொலை செய்யும் அளவுக்கு சென்றதன் பின்னால் உள்ள காரணம் என்ன?

கொல்லப்பட்ட பத்மா, சஞ்சை. கைது செய்யப்பட்ட நித்திஷ்

வழக்கின் முழு விவரம்

காவல்துறையின் அறிக்கையின்படி, சென்னை திருவொற்றியூர் திருநகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவர் ஓமன் நாட்டில் வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி பத்மா (48). இந்தத் தம்பதியினருக்கு நித்தேஷ் (20), ரமேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (15) என இரண்டு மகன்கள்.

மூத்த மகன் நித்தேஷ் தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். நித்தேஷ் கடந்த 21-ஆம் தேதி இரவு, தன்னுடைய செல்போனிலிருந்து உறவினர் ஒருவருக்கு, “நான் எனது அம்மாவையும் தம்பியையும் கொலை செய்து விட்டேன்,” என்ற ‘வாய்ஸ் நோட்’ அனுப்பியுள்ளார்.

உடனே அவர் பத்மாவின் வீட்டருகே வசிக்கும் மற்றொரு பெண்ணுக்கு தகவல் சொல்ல, அவர் வீட்டுக்குச் சென்று பார்த்துள்ளார்.

அப்போது வீட்டுக்குள் பத்மாவும் அவரின் இளைய மகனும் ரத்தக்காயங்களுடன் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், இரு உடல்களையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக திருவொற்றியூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நித்தேஷ் கைது செய்யப்பட்டார்.

முதல் கட்ட விசாரணையில், கடந்த கடந்த ஜூன் 20-ஆம் தேதி, அதிகாலையில் தனது தாய் மற்றும் தம்பியைக் கொலை செய்துவிட்டு, வீட்டைப் பூட்டிவிட்டு தலைமறைவானது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட நித்தேஷிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது எனவும் காவல்துறை அறிக்கை கூறுகிறது.

‘தி இந்து’ நாளிதழின் செய்தியின்படி, காவல்துறை விசாரணையில், நித்தேஷுக்கு 14 அரியர்கள் இருந்ததாகவும், இதற்காக அவரது தாய் அவரை பலமுறை கண்டித்ததாகவும் தெரிய வந்துள்ளது.

தனது தந்தையின் சம்பாத்தியம் குடும்பத்தை நடத்த போதுமானதாக இல்லை என்று தாய் தன்னிடம் அடிக்கடி கூறி வந்ததால் ஏற்பட்ட மனஅழுத்தத்தில் தன்னால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை என்றும், குடும்பத்தில் வேறு சிக்கல்களும் இருந்ததாகவும் அவர் காவல்துறை விசாரணையில் கூறியுள்ளார்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்த அவர், பின்னர் பயந்து மனம் மாறியதாகவும் விசாரணையில் கூறியுள்ளா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக