சாந்தி நாராயணன் : இராமாயணத்தின் உருவகப்படி இராமன்
இராமனைச் சார்ந்தவர்கள் யாரும் நிம்மதியாக இருந்ததில்லை.
பெற்ற தசரதன், ராமனின் தாய், வளர்ப்புத் தாய் கூனி ,
கட்டிய மனைவி,
லட்சுமணன் முதல் கூடப் பிறந்த சகோதரர்கள் யாரும் மகிழ்வோடு இல்லை.
நடந்த தேசத்திலெல்லாம் உறவுகளை மோத விட்டான்.
ஆண்ட நாட்டு மக்களையெல்லாம் அழுகையிலும் அவநம்பிக்கையிலும் வைத்தான்.
கூட்டுச் சேர்ந்த சுக்ரீவன் விபீஷ்ணன்
அரசியல் செய்த அத்வானி
கால் வைத்த இலங்கை
பிறந்த உத்திரபிரதேசம் வரை
ராமனைச் சார்ந்த எவரும் நிம்மதியாய் இருந்ததில்லை.
வாழ்நாள் எல்லாம்
ராமனும் நிம்மதியாய் இருந்துவிடவில்லை.
பார்ப்பனியத்துக்கு பலியாளாக வாழ்நாள் எல்லாம்
துக்கமும் துயரமும் இரத்தமும் மனச் சஞ்சலமாகவுமே. வாழ்ந்து இறந்தான் ராமன்
கடைசி வரை கை பிடித்த சீதை நிம்மதியாய் வாழவிடவுமில்லை. துடிக்கத் துடிக்க தீக்கிறையானாள் .
தனக்காக எல்லாம் துறந்த தம்பி லட்சுமணனை
பார்ப்பனர்களை மதிக்காமல் போனான் என்று கொலை செய்யும் படியானது.
வளர்ந்து பெரியவானனது முதல் பெற்ற தசரதன் நிம்மதியை இழந்தான் . அப்படியே இறந்தான்.
லவனும் குசனும் தந்தை பெயர் அறியாமலே காடுகளில்
வாழவேண்டியதிருந்தது
காதலித்த சூர்ப்பனகை அங்கம் அறுபட்டு அலையவிடப்பட்டாள்
இராமன் பெயர் சொன்ன காந்தி ராமனின் பெயராலே இயக்கம் நடத்தியவர்களால் கொல்லப் பட்டார்
பார்ப்பனர்களைத்தவிர வேறெருவரின் நன்மைக்காக இராமன் உழைக்க அனுமதிக்கப் பட்டவனில்லை.
வேதம் படித்ததற்காக கொலை செய் என்ற போது ஓடோடி படுகொலை செய்த அடியாளாகவே இராமன் இருந்தான் .
ராமனைப் போன்ற ஒரு துஷ்ட பிம்பம் எந்தக் கதைகளிலும் சொல்லப் படவுமில்லை .
அதனால் தானோ என்னவோ தமிழர்கள் இராமனை விட்டு விலகியே இருந்தார்கள். இங்கே அனுமனுக்கு உள்ள மதிப்பு கூட ராமனுக்கு இல்லை.
இராமனின் துன்பியல் நிகழ்வுகளின் கடைசி உதாரணமாக ரஜினியாகவே இருக்கட்டும்.
முற்றிலும் வித்தியாசமானதொரு விமர்சனப் பதிவு.
பதிலளிநீக்குபாராட்டுகள்.