ஞாயிறு, 30 ஜூன், 2024

கஸ்தூரி உனக்கு அசிங்க அசிங்கமா ... மீண்டும் களமிறங்கிய பாடகி சுசித்ரா!

tamil.filmibeat.com   -  Jaya Devi  :  சென்னை: பாடகி சுசித்ரா, தனது முன்னாள் கணவன் கார்த்திக் குமார் மற்றும் தனுஷ் என பல நடிகர்கள் குறித்து மோசமான கருத்தை தெரிவித்து இருந்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த நடிகை கஸ்தூரி, சுசித்ராவிற்கு தற்போது மருத்துவ உதவியோ அல்லது மனநல உதவியோ ஏதோ ஒன்று தேவை என்று பேசி இருந்தார்.
 இது குறித்து ஒரு மாதத்திற்கு பின் வாய் திறந்துள்ள சுசித்ரா, கஸ்தூரியை கடுமையான வார்த்தையால் திட்டிஉள்ளார்.


தமிழ் சினிமா20 ஆண்டுகளுக்கும் மேலாக தென்னிந்திய சினிமாவில் பாடகியாக பயணித்து வருகிறார் சுசித்ரா.
இவர் நடிகர் கார்த்திக் குமாரை 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு, 12 ஆண்டுகள் ஒன்றாக தான் வாழ்ந்த நிலையில், சுசி லீக்ஸ் பிரச்சனையால் இருவரும் பிரிந்தனர்.
சுசி லீக்ஸ் பிரச்சனைக்கு பிறகு தலைகாட்டாமல் இருந்த சுசித்ரா கடந்த மாதம் பேட்டி அளித்திருந்தார்.

பாடகி சுசித்ரா பேட்டி: அதில்,என்னுடைய முன்னாள் கணவர் கார்த்திக் குமார் ஓரினக்சேர்க்கையாளர் என்றும், அவரும் தனுஷும் சேர்ந்து குடித்து விட்டு ஒரு அறைக்குள் செல்வதை நான் பார்த்திருக்கிறேன். அந்த அறைக்குள் அவர்கள் சென்றால் என்ன செய்வார்கள்? திருமணமாகி இரண்டு வருடத்திலேயே என்னுடைய கணவர் ஓரினச்சேர்க்கையாளர் என்பது எனக்கு தெரிந்துவிட்டது என்றார். மேலும்,த்ரிஷா,கமல்ஹாசன், ஷாருக்கான் என கோலிவுட் முதல் பாலிவுட் பிரபலங்கள் என அனைவரையும் வச்சி செய்துவிட்டார். சுசித்ரா பேசியது காட்டுத் தீ போல பரவியது.

மருத்துவ உதவி தேவை: இதுகுறித்து பேட்டி அளித்துள்ள கஸ்தூரி, இந்த விஷயத்தை பற்றி பேசவே எனக்கு கஷ்டமாக இருக்கிறது. சிதைந்த ஒரு உள்ளம் உதவிக்காக கூக்குரல் இடுவதுதான் எனக்கு கேட்கிறது. சுசித்ராவிற்கு உடனடியாக ஒரு உதவி தேவைப்படுகிறது. மருத்துவ உதவியோ அல்லது மனநல உதவியோ ஏதோ ஒன்று அவருக்கு தேவை. அவருடைய குறையை சொல்லி பிரச்சனைகளை தீர்த்துக்கொண்டு சாதாரண வாழ்க்கை வாழ வழியை காட்டுவதற்கான ஒரு துணை அவருடன் இல்லை. இதனால் தான் அவர் மீடியாக்களில் இவ்வாறு பேசுகிறார்.

மேலும், சுசித்ரா கார்த்திக் குமாரை திருமணம் செய்து கொள்ளும் போது, சுசித்ராவிற்கு அம்மா, அப்பா இல்லை அவரின் பெற்றோர் இரண்டு பேருமே தற்கொலை செய்து கொண்டார்கள். அந்த பிரச்சனையை சரி செய்து வழி காட்ட சுசித்ராவிற்கு சரியான ஆளில்லை என்று கஸ்தூரி அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

அசிங்க அசிங்கமா சாவு: கஸ்தூரி இதை பேசி ஒரு மாதமான நிலையில், பாடகி சுசித்ரா இதற்கு தனது யூடியூப் தளத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அதில்,என் அப்பா அம்மா தற்கொலை செய்து கொண்டார்கள் என கஸ்தூரி கூறினார். அது நிச்சயமாக உண்மை இல்லை. எங்க அம்மா அப்பாவைப் பற்றி தப்பா பேசிய அந்த அம்மாவுக்கு அசிங்க அசிங்கமா சாவு வரப்போகுது. கஸ்தூரியை என்னென்ன கெட்டவார்த்தைகளால் திட்டலாம் என யோசித்துக் கொண்டு இருக்கிறேன்.

நீ செத்து போன காக்கா: ஆனா அந்த பொறுப்பை வேற யாருக்காவது கொடுத்து விடுகிறேன். உனக்கு அசிங்க அசிங்கமா கிடைக்கப் போகுது. உன்னை அப்படினு தான் சொல்லுவேன். வனிதா, பயில்வானை கூட உங்களை என சொல்வேன். ஆனா இந்தக் கஸ்துரியை உன்னனு தான் சொல்வேன். காக்காவ விட மோசமானவ நீ. நீ செத்து போன காக்கா போடி.. அப்படினு தான் சொல்ல தோணுது. எங்க அம்மா அப்பா ஒரு ஆக்சிடெண்டில் இறந்து போனாங்க. அவங்களை பத்தி இப்படி தப்பா பேசுறது சரியில்லை. கஸ்தூரி திரும்பவும் ஸ்கூலுக்கு போய் மாரல் சயின்ஸ் கிளாஸ் அட்டென்ட் பண்ணு என்று கஸ்தூரியை கடுமையான வார்த்தையால் திட்டி மீண்டும் தனது ஆட்டத்தை தொடங்கி உள்ளார் சுசித்ரா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக