சனி, 8 ஜூன், 2024

130 தொகுதிகளில் மறு வாக்கு எண்ணிக்கை! நீதிமன்றத்தை நாட இந்தியா கூட்டணி முடிவு!

 தமிழ்க்கவி  :  INDIA கூட்டணியின் அரசியல் ஆட்டம் ஆரம்பம்;
பாஜக (BJP)500 லிருந்து1000 வாக்குகளுக்கும் கீழே குறைவாகப் பெற்று ,
வெற்றி பெற்ற 130 தொகுதிகளிலும் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த நீதிமன்றத்தை நாட இந்தியா கூட்டணி முடிவு!
நண்பர்களே தெரிந்து கொள்ளுங்கள்,
பிஜேபி-500 வாக்குகளுக்கு  கீழ் வித்தியாசத்தில் வென்றது 30 தொகுதிகள்.
1000 வாக்குகளுக்கு கீழ் வென்றது 100 தொகுதிகள். மொத்தம் 130 தொகுதிகள்.
தற்போதுள்ள கணக்குப்படி பிஜேபி வென்றது -243 தொகுதிகள்.
243 தொகுதிகளில் 130 தொகுதிகளை கழித்தால் 113 தொகுதிகளில்தான் வென்று இருக்க வேண்டும்.
மோடி அவர்கள் வாரணாசி தொகுதியில் பின்னடைவை சந்திக்கிறார் என்று முடிவு வரவும்....
தேர்தல் ஆணையம் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில்
மந்த நிலையை ஏற்படுத்தி, எதிர் கட்சிகள் தேர்தல் ஆணையத்தை
கண்டிக்கும் அளவுக்கு  நிலைமை சென்றுவிட்டது.



04.06.24 மதியம் ஒரு மணி முதல் இரவு 12.00 மணி வரை பிஜேபி 290 தொகுதிகளில் முன்னிலையும்
காங்கிரஸ் கூட்டணி 234 தொகுதிகளில் முன்னிலை
யும் என்பதாக இருந்தது.
தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவித்த நாட்களில் இருந்து
நேர்மையாக, நடுநிலையாக நடந்து கொள்ளவே இல்லை என்பது  அனைத்துக் கட்சிகளின் ஒருமித்தக் கருத்து.
எனினும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்காணிப்பில்,
இந்த 130 தொகுதிகளிலும்  மறு வாக்கு எண்ணிக்கை நடத்த
INDIA கூட்டணி நீதிமன்றத்தை நாட உள்ளார்கள்.

இது நடந்து விட்டால், காங்கிரஸ் கட்சி மட்டும் 50 க்கும் மேற்பட்ட இடங்களை கூடுதலாகப் பெறும்.
ஏன்? எதற்கு? எப்படி? என்றால், அமித்ஷா எல்லா மாவட்ட தேர்தல் அதிகாரிகளையும்,
மாவட்ட ஆட்சித்தலைவர் களையும் தொடர்பு கொண்டு பேசியதுதான் சந்தேகத்துக்கு காரணம்.
மறு வாக்கு எண்ணிக்கையில் INDIA கூட்டணி நிச்சயம் பெரும்பான்மை பெறும்.
இந்தியாவில் ஜனநாயகம் காப்பாற்றபடுமா என்பதே நாட்டு மக்களின் கவலை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக