வியாழன், 30 மே, 2024

கரூர் கல்லூரி மைதானங்களில் ஆர்எஸ்எஸ் RSS பயிற்சி! திராவிட மாடல் அரசு தடை செய்யுமா?

May be an image of frisbee, fog, tree and grass
May be a black-and-white image of lighting

தமிழ்க்கவி :    கல்லூரி விளையாட்டு மைதானங்களும்
வேட்டை நாய்களும்: நாசகார கும்பலின் தேச பக்த பயிற்சி
கரூர் மாவட்டத்திலும் வேறு சில சின்ன சிறு நகரங்களிலும் சின்னஞ்சிறு குழந்தைகள் விடலை வயதுள்ள மாணவர்கள் ஒரு சமூக விரோத கும்பலால் தவறான வழிகளில் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். எடுத்துக்காட்டாக வள்ளுவரின் பெயரில் இயங்கும் ஒரு கலை அறிவியல் கல்லூரி இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.
அதற்கு அந்தக் கல்லூரி  நிர்வாகமும்
ஒத்துழைக்கிறது.
வைகறை பொழுதிலும் அந்தி கருக்கலிலும் பெற்றோர்களுக்கு தெரியாமல் பொதுமக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிக் கொண்டு விவரம் தெரியாமல் அகப்பட்டுக் கொண்ட குழந்தைகளை மிக மோசமான நடவடிக்கைகளில் ஈடுபடுத்துகிறது அந்த கும்பல்.
மறைவான இடங்களை தேர்ந்தெடுத்தால் சந்தேகம் எனக்கூடும் என்பதனால் கல்லூரி விளையாட்டு மைதானங்களில் பகிரங்கமாக இந்த பாதக செயலை அரங்கேற்றம் பட்டுக்கொண்டிருக்கிறது கரூர் மாவட்டத்தில்.


கள்ளம் கபடம் அறியாத பிள்ளைகளை மிக சாதூர்யமாக வளைத்துப் போட்டு விளையாட்டு என்கிற பெயரில் தங்களது விபரீத ஆசைகளுக்கு பயன்படுத்துகிறது ஆர்எஸ்எஸ் இந்து முன்னணி பாரதியார் ஜனதா எனும் பல்வேறு பெயர்களில் அந்த பார்ப்பன வெறி கும்பல்.
சூத்திர அடிமைகளை தங்களுக்கு சாதகமாக அது பயன்படுத்திக் கொள்கிறது.
கல்லூரிக்கு சேர்க்கிறோம் என்று கூறி கூட்டிச்சென்ற தனது குழந்தை பற்றி ஒரு பெற்றோரிடம் பகிர்ந்து கொண்டார்.
தனது இரு குழந்தைகளுக்கும் விளையாட்டு ஆசை காட்டி மைதானத்துக்கு வரவழைத்து மெல்ல மெல்ல அவர்கள் நெற்றியில் ,மார்பில், கையில், மத சின்னங்களை ஏற்றி பிறகு மூளை சலவை செய்து இந்து மத வெறியை ஊட்டி விட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்தப் பெற்றோர் மிகுந்த வேதனை இடம் கவலையை என்னிடம் பகிர்ந்து கொண்டார்.
இதுபோல தனது குழந்தைகள் ஒரு வெறிக் கும்பலால் நஞ்சு ஊட்டப்படுவதை அறிந்து விளையாட வேண்டிய குழந்தைகளை வீட்டுக்குள்ளேயே பூட்டி வைத்திருக்கும் வேறு சில பெற்றோர்களையும் நான் பார்த்திருக்கிறேன்.
"துஷ்டனைக் கண்டால் தூர விலகு தீங்குனர் தம் கண்ணில் தெரியாத தூரத்தே நீங்குவது நல்ல நெறி"
 என்கிற பாமரத்தனமான சமாதானங்களுடன் ஒதுங்கியும் ஒடுக்கியம் கொள்வதை தவிர இவர்களுக்கு வேறு வழியே இல்லையா?
ஒரு ரவுடி கும்பல் தனது பூணூல் மீதும் கொண்டுள்ள நம்பிக்கையில் பொதுமக்களையும் அரசையும் ஏமாற்றிக்கொண்டு பிஞ்சு குழந்தைகளை பாழடிக்கும் போது இளிச்சவாய் தனமாய் "அதை வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது கேவலமானது அல்லவா?
விளையாட்டோடு விளையாட்டாக "தேசபக்தியை" ஊட்டுவதாக அந்த பாசிச கும்பல் பசப்பி திரிகிறது இந்துத்துவா தான் தேசபக்தியா? "இந்து என்று சொல்லடா" என்ற அந்த கும்பல் வெறியேற்றுகிறது அதற்கு பொருள் என்ன?
"இந்துவா இரு என்றால் எனக்குத் தாசனாய் சேவகம் செய் "என்று பார்ப்பனியம் மாயவளை வீசுகிறது என்று பொருள்.
தனது நெற்றிலும் முளையிலும் இந்து என்கிற அசிங்கத்தை ஆபாசத்தை ஏற்றுக் கொள்கிற குழந்தைகளின் இதயங்களில் இருந்து மனித உணர்வுகளை
வழித்தெறிந்து விட்டு அடிமையின் எஜமான விசுவாசத்தை அங்கே விதைத்து விடுகிறது
 ஆர் எஸ் எஸ் பாசிசம்.
இவ்வாறு பயிற்றுவிக்கப்பட்ட விடலைப் பையன்கள் பிள்ளையார் ஊர்வலம் போன்ற நாசக்கார அணிவகுப்பின் போது பிற மதத்தவரின் உயிர்- உடமைகளை கொளுத்தவும் ,தாக்கவும் ஆனால் அடிமை வேட்டை நாய்களாக ஏவி விடப்படுகிறார்கள்.
இந்த தேசபக்த குழந்தைகள் தான் காந்தியை கொன்றார்கள் பல பெண்களை கற்பழித்தார்கள் பாபர் மசூதியை தரைமட்டம் ஆக்கினார்கள்.
பல சமூக முற்போக்காளர்கள் இவர்களால் படுகொலை செய்யப்பட்டார்கள். கோத்ரா ரயில் எரிப்பு குஜராத் படுகொலை ரயில் குண்டு வெடிப்பு பட்டியல் போட்டால் நீண்டு கொண்டு செல்லும்
 "மானிடம் சூரையாடபடுவது இந்த தேசபக்த கும்பலால்" தான்.
ஏடறிந்த வரலாற்றின் எந்தப் பகுதியிலும் மதத்தின் பெயரால் தேசபக்தியை வளர்த்ததாக அச்சிப் பிழை கூட தென்படுவதில்லை.
மதம் என்பது அறிவுக்கு எதிரி
 மதம் என்பது மானுட அழகுக்கு எதிரி மதம் என்பது இனிய வாழ்க்கைக்கு எதிரி.
எந்த மதமும் ஆதிக்க சக்திகளின் வேட்டை நாய்கள் தான் இதில் இந்து என்று சொல்வதில் எவனுக்கு பெருமை.?
தனது அடிமை சங்கிலிக்கு ஆராதனை செய்யும் "ஈன பிறவியாய் நமது குழந்தைகளை மாற்றப்படுவதை அனுமதிக்க முடியாது.
மனிதக் குரங்கிலிருந்து மனிதனாய் மாறிய வரலாற்று நிகழ்வில் உழைப்பும் மொழியுமே படைப்பு சிற்பிகளாய் விளங்குகின்றன. கடைசிக்கு கடைசி வரிசையில் பரிசீனலையில் மொழியை இழந்தவன் அனைத்தையும் இழக்கிறான்.
 இந்த அறிவியல் அடிப்படையில் மொழி நலன் காக்க விளைவோர் மீது சட்டப்படியான தனது குற்றப் பார்வையை ஏவி கண்காணிக்கும் மத்திய அரசு இந்த இந்துத்துவா கும்பலின் சதி வேலைகளை அனுமதித்துக் கொண்டிருக்கின்றனவே அது எப்படி?
பார்ப்பனியமும் அரசும் கைகுலுக்கி கொள்கின்றன அல்லவா..
இது பார்ப்பனியத்திற்கான அரசு அல்லவா
விளையாட்டு மைதானங்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கட்டும் தனியார் கலைக்கல்லூரிகள் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் அரசின் கண்காணிப்பில் இருக்கட்டும்.
நாசக்கார கும்பலின் தேசபக்த பயிற்சிகள் தடை செய்யப்பட வேண்டும்.
இந்த இந்துத்துவா பயிற்சிகள் நாட்டுக்கு மாத்திரம் அல்ல
"திராவிட மாடல்" ஆட்சிக்கும் ஆபத்தானவை என்பதை அறிய வேண்டியவர்கள் அறியட்டும்.
...
தொகுப்பும் பகுப்பும்
 தமிழ்க்கவி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக