புதன், 29 மே, 2024

கர்நாடகா -அம்மா என் கர்ப்பத்துக்கு காரணம் எங்க ஸ்கூல் ஹெட் மாஸ்டர் தான்! பள்ளியில் வைத்தே பலமுறை பலாத்காரம்...

tamil.asianetnews.com -  vinoth kumar  :  அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்த மாணவி கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு பள் ளி மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கர்நாடகா மாநிலம் சிக்கபள்ளாப்பூர் மாவட்டம், சிட்லகட்டா கிராமத்தில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், அப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்த மாணவி கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு  மருத்துவர் பரிசோதனை செய்த போது பள்ளி மாணவி 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததை அடுத்து பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக சிறுமியிடம், அவரது பெற்றோர் விசாரித்தனர். அப்போது அழுத படியே பள்ளியின் தலைமை ஆசிரியர் பள்ளி அலுவலக அறையில்  வைத்து அடிக்கடி பலாத்காரம் செய்து வந்ததாக கூறியுள்ளார். இதுதொடர்பாக வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளார்.

இதனையடுத்து பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து , தலைமை ஆசிரியர் வெங்கடேஷனை கைது செய்து சிறையில் அடைத்தனர். அரசு பள்ளிக்குள் மாணவியை தலைமை ஆசிரியர் பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக