மாலை மலர் : டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் ஜெயலில் அடைக்கப்பட்டுள்ளார்.
அமலாக்கதுறை கைது செய்தது செல்லாது என உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான விசாரணையில் தேர்தலை கணக்கில் கொண்ட இடைக்கால ஜாமின் வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கக்கூடாது என அமலாக்கத்துறை நேற்று மனுதாக்கல் செய்திருந்தது.
இந்த நிலையில் இன்று கெஜ்ரிவால் தொடர்பான விசாரணையின்போது, உச்சநீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. ஜூன் 1-ந்தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக