திங்கள், 27 மே, 2024

கம்யூனிஸ்டுகளின் பின்னால் சென்று குடியுரிமையை பறிகொடுத்த மலையக மக்கள்

ராதா மனோகர் :  இலங்கையில் இடதுசாரிகளை தாங்கி பிடித்ததே பெரும்பாலும் மலையக மக்கள்தான்
இலங்கையை ஒரு கம்யூனிஸ்டு நாடாக்குவதற்கு உரிய வாக்கு வங்கியை வழங்கியதே மலையக வாக்காளர்கள்தான்
அதன் காரணமாகத்தான் அவர்களின் வாக்குரிமை இந்திய இலங்கை பிரித்தானிய அரசுகளால் பறிக்கப்பட்டது
1948 இல்  சுதந்திர இலங்கையின் முதல் தேர்தலில் ஆட்சியை பிடிக்க கூடிய அளவு வெற்றி பெற்றிருந்தனர் இடதுசாரிகள்
அவர்களின் ஒற்றுமை இன்மையால் மட்டுமே அந்த வாய்ப்பு கைநழுவி போனது
இந்த தேர்தல் வெற்றி மேற்கு நாடுகளையும் இந்தியவையும் பயமுறுத்தியது
ஏற்கனவே இந்திய வம்சாவளி மக்களின் வாக்குரிமையை நீக்கவேண்டும் . அவர்களை நாடு கடத்த வேண்டும் என்றெல்லாம் கூச்சல் போட்டு கொண்டிருந்த சிங்கள இனவாதிகளுக்கு இந்த இடதுசாரி வாக்குவங்கி என்பது பெரும் வாய்ப்பாக அமைந்து விட்டது
இந்த வாய்ப்பை அவர்களுக்கு கொடுத்தவர்கள் சிங்கள இடது சாரிகள் மட்டுமல்ல அவர்களோடு சேர்ந்து கொண்டு ஆட்சியை கைப்பற்ற முடியும் என்று கருதி இருந்த மலையக தலைவர்களுக்கும்தான்


பெரும்பான்மை சிங்கள மக்கள் பௌத்த சாசனத்தையே தங்களின்  அரசியல் சமூக கோட்பாடாக கொண்டிருந்தவர்கள்!
அப்போது இலங்கை மக்களின் தேசிய இயக்கமாக ஐக்கிய தேசிய கட்சியே இருந்தது
அதில் சிங்கள மக்கள் மட்டுமல்ல தமிழர்களும் பெரும் பங்காளிகளாக இருந்தனர்
இன்னும் சரியாக சொல்லப்போனால் ஐக்கிய தேசிய கட்சியை நிறுவியவர்களில் தஞ்சாவூரை பூர்வீகமாக கொண்ட நடேச பிள்ளை போன்ற பல தமிழ் தலைவர்களும் இருந்தனர்
அந்த மண்ணின் மக்களுக்கு எதிராக  ஒரு கம்யூனிச ஆட்சியை அமைக்கவேண்டும் என்று சிங்கள மேட்டுக்குடி இடது சாரிகள் தங்களை இண்டெர்லேக்சுவல்ஸ் என்று கூறிக்கொண்டிருந்த காலம் அது.
அவர்களின் பின்னால் சென்றது யார் குற்றம்?
பிரித்தானிய ஏகாதிபத்தியாத்ரிக் எதிரான  சோவியத்தின் போரில்  இலங்கையை சிக்க வைக்க எலைட் இடதுசாரிகள் கடுமையாக முயற்சித்தனர்
அவர்களின் பிரசாரத்தில்  மலையக மக்களை கவரப்பட்டிருந்ததுதான் வரலாற்று சோகம்
1942 இல் ஆங்கிலேயர்களின் கோகோ தீவில் நிகழ்ந்த ராணுவ கலவரத்தில் இலங்கை இடது சாரிகளின் கரங்கள் இருந்தன  . The Cocos Islands mutiny was a failed mutiny by Sri Lankan soldiers against British officers, on the Cocos (Keeling) Islands on 8 May 1942, during the Second World War.
இடது சாரிகள் திருவிளையாடல் பற்றி இன்னும் பல செய்திகள் உள்ளன 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக