செவ்வாய், 7 மே, 2024

வைரமுத்து – இளையராஜா - குஷ்பு பளீர் பதில் : டீம் வொர்க்தான். இதற்கு மேல் பேச ஒன்றுமில்லை”

 minnambalam.com  - christopher  :  படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களின் இசை காப்புரிமை தனக்கே சொந்தம் என இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார்.
நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் இவ்வழக்கு சம்பந்தமாக சினிமா தயாரிப்பாளர்கள், அவர்கள் அங்கம் வகிக்கும் தயாரிப்பாளர்கள் சங்கங்கள் எந்தவொரு ஆர்வமும் காட்டவில்லை.
காப்புரிமை சம்பந்தமான விவாதத்தை கவிஞர் வைரமுத்து தான் கலந்து கொண்ட திரைப்பட விழா ஒன்றில் மொழி பெரிதா, இசை பெரிதா என பேசி பொது வெளியில் பரபரப்பு உண்டாக்கினார். பாடல் காப்புரிமை சம்பந்தமாக இளையராஜா, வைரமுத்து ஆதரவாளர்கள் அவர்களுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.
இதற்கிடையில் நடிகர் ரஜினிகாந்தின் ‘கூலி’ பட டைட்டில் டீசரில் தனது பாடல் இசையை அனுமதி வாங்காமல் பயன்படுத்தியதற்காகவும் அவர் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பினார்.



அதனையடுத்து இசை காப்புரிமை குறித்து திரைத்துறையில் பல விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், நடிகை குஷ்புவும் இதுகுறித்து கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

‘அரண்மனை4’ படத்தை திரையரங்குகளில் ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்த குஷ்பு பின்பு செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். ‘அரண்மனை4’ படத்தை குஷ்பு தயாரித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வைரமுத்து- இளையராஜா விவகாரத்தைக் குறிப்பிட்டு குஷ்புவிடம் “இசை பெரிதா? மொழி பெரிதா?” என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு குஷ்பு, “திரைத்துறையில் எல்லா விஷயங்களுமே டீம் வொர்க்தான். இந்த விஷயத்தை இயக்குநரும் இசையமைப்பாளரும்தான் பேச வேண்டும். நடிகை, தயாரிப்பாளராக நான் இதை பேசக்கூடாது. வைரமுத்துவுக்கும் இளையராஜாவுக்கும் இடையில் போர் போய்க் கொண்டிருக்கிறது என்றால் அவர்கள்தான் இதுகுறித்துப் பேச வேண்டும். மற்றபடி எனக்கும் இசைக்கும் சம்பந்தம் கிடையாது” என்றார்.

மேலும், தயாரிப்பாளர்கள் இசை தங்களுக்குதான் சொந்தம் என்று சொல்வது குறித்து கேட்ட போது,

“மீண்டும் சொல்கிறேன். ஒரு படம் உருவாவது டீம் வொர்க்தான். இதற்கு மேல் பேச ஒன்றுமில்லை” என்றார். இதன் மூலம் இசை காப்புரிமை என்பது இசையமைப்பாளர்களுக்கு மட்டும் சொந்தமானது இல்லை என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இராமானுஜம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக