வெள்ளி, 24 மே, 2024

பண்ணை வீட்டு பார்ட்டி .. பிரபலங்கள் பலர் மாட்டி பெங்களூருவில்

 மாலை மலர் :  பெங்களூருவில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் பார்ட்டி நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் அந்த இடத்திற்கு சென்று சோதனையிட்டனர். அப்போது இந்த பார்ட்டியில் ஏராளமான பிரபலங்கள் ஈடுபட்டதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
போதையில் இருந்து அனைவரும் போதைபொருட்கள் பயன்படுத்தினார்களா? என்பது அறிய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அப்போது தெலுங்கு நடிகை ஹேமா உள்ளிட 86 பேர் போதைப்பொருள் உட்கொண்டது தெரியவந்தது.


இந்த பார்ட்டியில் 73 ஆண்கள், 30 பெண்கள் கலந்து கொண்டதாக எஃப்.ஐ.ஆர். மூலம் தெரியவந்துள்ளது. ரத்தப் பரிசோதனையில் 59 ஆண்களுக்கும், 27 பெண்களுக்கும் பாசிட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது.

பாசிட்டிவ் ரிசல்ட் வந்தவர்களுக்கு மத்திய கிரைம் பிராஞ்ச் நோட்டீஸ் அனுப்ப உள்ளது. மேலும், சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிடவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போலீசார் பார்ட்டி நடந்த இடத்தில் இருந்து 14.40 கிராம் எம்.டி.எம்.ஏ. மாத்திரிகைள், 1.16 கிராம் எம்டிஎம்ஏ கிரிஸ்டல்ஸ், ஆறு கிராம் ஹைட்ரோ கஞ்சா, ஐந்து கிராம் கோகைன், கோகைன் பூசப்பட்ட 500 நோட்டுகள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

பிறந்தநாள் விழா பார்ட்டி என்ற போர்வையில் அதிகாலை 2 மணியையும் தாண்டி நடைபெற்றதால் போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

பெங்களூரு போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் தெலுங்கு நடிகை ஆஷி ராயும் ஒருவர். ஆனால் இந்த பார்ட்டியின் உண்மையான நோக்கத்தை தான் அறிந்திருக்கவில்லை. பார்ட்டில் கலந்து கொண்டேன். ஆனால் உள்ளே என்ன நடந்தது என்பது தெரியாது எனத் தெரிவித்துள்ளார்.

பண்ணை வீடு கோபால ரெட்டி என்பவருக்கு சொந்தமானது என்றும், ஐதராபாத்தைச் சேர்ந்த வாசு என்பர் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்ததாகவும் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக