வெள்ளி, 24 மே, 2024

பாஜக தோற்றாலும் சுலபமாக வெளியேறாது! நிர்மலா சீதாராமனின் கணவர் கடும் எச்சரிக்கை ஜூன் 4க்கு பின்பு ..(அரக்கலயா?)

 tamil.oneindia.com - Shyamsundar I சென்னை: பாஜக தோற்றாலும் சுலபமாக வெளியேறாது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும் பொருளாதார நிபுணருமான பரகலா பிரபாகர் தெரிவித்துள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும் பொருளாதார நிபுணருமான பரகலா பிரபாகர் தொடர்ந்து பாஜகவிற்கு எதிராக கருத்துக்களை கூறி வருகிறார்.
மனைவி பாஜக ஆட்சியில் மத்திய அமைச்சர் என்றாலும் கணவர் பாஜக ஆட்சியை மிக கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
Nirmala Sitharaman s husband already warned that PM Modi and BJP won t leave the ruling seat easily
சமீபத்தில் தி வயர் ஊடகத்தில் அவர் அளித்த பேட்டியில், பாஜகவிற்கு மெஜாரிட்டி கிடைக்காது. மெஜாரிட்டி எண் 272. அதை பாஜக பெற வாய்ப்பே இல்லை. அந்த கட்சிக்கு 200- 220 இடங்கள் கிடைக்கும். ஆனால் அதில் கூட 220 என்பது அதிகபட்ச நம்பர்.



அவ்வளவு நம்பர் கிடைக்க வாய்ப்பே இல்லை. அதேபோல் பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது. என்டிஏ கூட்டணி 272 கிடைக்க வாய்ப்பு இல்லை. அவர்கள் கூடுதலாக 30- 35 இடங்களை பெறலாம். சேர்த்து பார்த்தால் 250- 265 இடங்களை என்டிஏ மொத்தமாக பெறலாம். அதுதான் நிலை. இதுவும் கூட அவர்களுக்கு தாராளமாக இடத்தை கொடுத்தால் மட்டுமே சாத்தியம் என்று நிர்மலா சீதாராமன் கணவர் பரகலா பிரபாகர் தெரிவித்துள்ளார்.

புதிய எச்சரிக்கை: இந்த நிலையில்தான புதிதாக, பாஜக தோற்றால் அந்த கட்சி எளிதாக தோல்வியை ஏற்றுக்கொண்டு போகாது. ஆர்எஸ்எஸ்ஸின் நூற்றாண்டு வருடத்தில் இந்து ராஷ்டிரம் என்கிற திட்டம் நிறைவேறாமல் போகும். காந்தியைக் கொன்ற பிறகு நேர்ந்த கதிதான் நேரும். எனவே வீழ்ச்சியைத் தடுக்க அவர்கள் எதையும் செய்வார்கள்.

பாஜக வீழ்ந்தால் ரஃபேல், PM Cares உள்ளிட்ட பல மோசடிகள் வெளிவரும். இது, பாஜகவுக்கும் இந்திய மக்களுக்கும் இடையில் நடக்கும் சண்டை. இச்சண்டை, வாக்களிப்பதுடன் முடிவதுமல்ல; ஜூன் 4ம் தேதி முடிவு வெளியானதும் முடிந்துவிடக் கூடியதுமல்ல, என்று நிர்மலா சீதாராமனின் கணவரும் பொருளாதார நிபுணருமான பரகலா பிரபாகர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே எச்சரிக்கை: ஏற்கனவே 2024 லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தால், 'இந்தியாவின் வரைபடம் மாறும்' என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் தெரிவித்துள்ளார். 2024 லோக்சபா தேர்தலில் பிரதமரும் பாஜக தலைவருமான நரேந்திர மோடி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், நாடு முழுவதும் லடாக்-மணிப்பூர் போன்ற சூழ்நிலை உருவாகும் என்றும் அவர் எச்சரித்தார்.

ஊடகங்களில் அவர் பேசுகையில், 2024ல் பிரதமர் மோடி மீண்டும் பிரதமரானால், இந்தியா மீண்டும் ஒரு தேர்தலை சந்திக்காது. உங்களால் இந்தியாவை அடையாளம் கூட காண முடியாது. அந்த அளவிற்கு நாடு மோசம் ஆகும். மோடியே செங்கோட்டையில் இருந்து வெறுப்புப் பேச்சு கொடுப்பார். மோடியே வெறுப்பு பேச்சுக்களை இனி நேரடியாக பேசுவார்.

இதுவரை கட்சியினர் மட்டுமே இஸ்லாமியர்களை நேரடியாக விமர்சித்த நிலையில் மோடியே அதை பற்றி பேசுவார். மோடி இனி அமைதியாகவோ, நுட்பமாகவோ பேச மாட்டார். வெளிப்படையாக நிலைப்பாட்டை பேசுவார். வெறுப்புப் பேச்சுகளை அவர்கள் எதோ பொருளாதார புரட்சி போல பேசுவார்கள், என்று எச்சரித்து இருந்தார்.

எச்சரிக்கை - மோடி பேச்சு: அதாவது மோடியே இனி வெளிப்படையாக சில கடுமையான கருத்துக்களை பேசுவார் என்று அவர் கூறி இருந்தார் . இப்படிப்பட்ட நிலையில்தான் இஸ்லாமியர்களை வந்தேறிகள் என்று மோடி வெளிப்படையாக கூறி உள்ளார்.

மோடி ஆட்சி மீண்டும் அமைந்தால்.. நிர்மலா சீதாராமன் நிதியமைச்சர் இல்லை? பதவி யாருக்காம் தெரியுமா?மோடி ஆட்சி மீண்டும் அமைந்தால்.. நிர்மலா சீதாராமன் நிதியமைச்சர் இல்லை? பதவி யாருக்காம் தெரியுமா?

பாஜக பிளான்: பாரதிய ஜனதா கட்சி (BJP) 2024 லோக்சபா தேர்தலில் 370 இடங்களை வெல்வதை லட்சிய இலக்காக நிர்ணயித்துள்ளது. 2019 ஐ விட 67 இடங்கள் அதிகம் வெல்வோம் என்று பாஜக தலைவர்கள் மேடைக்கு மேடை அறிவித்து வருகின்றனர். ஆனால் பாஜகவால் இந்த இலக்கை அடைய முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பாஜக தனியாக 370 இடங்களை வெல்வதன் மூலம் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA) 400 ரன்களை கடக்க வாய்ப்பாக அமையும் என்பதால் பாஜக இந்த மாபெரும் இலக்கை நிர்ணயம் செய்துள்ளது. . மக்களவையில் 543 இடங்கள் உள்ளன, பாஜக 2014 மற்றும் 2019 இல் முறையே 282 மற்றும் 303 இடங்களை வென்றது.

370 என்ற இலக்கை.. ஜம்மு காஷ்மீரின் 370 நீக்கத்துடன் பிரதமர் நரேந்திர மோடி, பாஜகவினர் இணைத்து பேசி வருகின்றனர்.ஆனால் கடந்த முறை வென்றதில் இருந்து கூடுதலாக 67 இடங்களை சேர்ப்பது என்பது பாஜகவிற்கு மிகவும் கடினமான பணியாக இருக்கலாம். இந்த நிலையில்தான் தேசிய அளவில் பாஜகவிற்கு தனிப்பட்ட மெஜாரிட்டி கிடைக்காது, என்டிஏவும் மெஜாரிட்டி கிடைக்காமல் சுருங்கும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கணவர் பரகலா பிரபாகர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக