சனி, 13 ஏப்ரல், 2024

ராகுல் காந்தியின் சுவீட் பாக்ஸ்! மோடியின் அத்தனை ரோடு ஷோக்களும் தூள்!

 ராதா மனோகர் : கோவை கூட்டத்திற்கு செல்லும் வழியில் ராகுல் காந்தி செய்த ஒரு சம்பவம் மோடியின் அத்தனை ரோட் ஷோக்களையும் தூக்கி சாப்பிட்டு விட்டது
ஒட்டு மொத்த இந்தியாவின் ஊடகங்களையும் ராகுல் காந்தி  பாய்ந்து சென்று தெருவின் குட்டிசுவரை கடக்கும்  காணொளிதான் ஆக்கிரமித்துள்ளது
முதல்வர் ஸ்டாலினை சந்திக்கும் போது கொடுப்பதற்காக தெருவில் எதிர்பக்கம் தெரிந்த ஒரு பேக்கரியில் இனிப்பு  பேட்டி வாங்கினார்
இது ஒரு சாதாரண சம்பவம் ..
தெருவின் குறுக்கே ஒரு இளைஞன் எப்படி தாண்டி செல்வானோ அப்படி சென்றார்
இதிலென்ன சம்பவம் இருக்கிறது?
ஏன் ஊடகங்கள் இதை தூக்கி பிடிக்கின்றன  என்று சிலர் கேட்கலாம்.
ராகுல் காந்தியின் பேச்சு நடை உடை பாவனை  பாடி லாங்குவேஜ் என்று எந்த திசையிலும் எந்த மைக்கிரோ ஸ்கோபில் உற்று நோக்கினாலும் ,
அங்கே பல பிரதமர்களை கொண்ட ஒரு குடும்ப வாரிசாக தெரிய மாட்டார்


மிக மிக சாதாரண இளைஞனாகதான் தெரிவார்
கடந்த பத்தாண்டுகளாக பொய்யே உருவான ஒரு போலியின் அலப்பறைகளால் வெறுத்தது போயிருக்கும் மக்களுக்கு ராகுலின் எளிமை பிரமாண்டமாக தெரிகிறது
ஒரு மனிதரிடம் இருக்கும்  உண்மைக்கு நிகராக எந்த வெளிச்சமும் உலகில் கிடையாது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக