திங்கள், 29 ஏப்ரல், 2024

சிட்னியில் அல்லாவின் படைவீரர்கள் கொலை செய்யவும் உயிரிழக்கவும் தயாராகயிருந்தனர் – அவுஸ்திரேலிய காவல்துறை

வீரகேசரி : சிட்னியில் கைதுசெய்யப்பட்ட அல்லாவின் படைவீரர்கள் பதின்மவயதினர் கொலை செய்யவும் உயிரிழக்கவும் தயாராகயிருந்தனர் – அவுஸ்திரேலிய காவல்துறை
சிட்னியில் சமீபத்தில் கைதுசெய்யப்பட்ட பதின்மவயதினர் சிட்னி தேவாலய தாக்குதலின் பின்னர் பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்டு பலரை கொலை செய்துவிட்டு உயிரிழக்க தயாராகயிருந்தனர் என அவுஸ்திரேலிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது ஏழு பதின்மவயதினர் கைதுசெய்யப்பட்டனர்.
இவர்களில் ஆறுபேர் சிட்னி தேவலாயத்தில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்ட இளைஞனின் சகாக்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவர்களிற்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை காவல்துறையினர் பயங்கரவாத தாக்குதலிற்கு திட்டமிட்டமை உட்பட பல குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட பதின்மவயதினரில் நால்வர் தேவாலய கத்திக்குத்து இடம்பெற்ற சில நாட்களின்பின்னர் மறைகுறியாக்கப்பட்ட செய்தியிடல் செய்தியான சிக்னல் மூலம் உரையாடியுள்ளனர்.
நான் உயிரிழக்க விரும்புகின்றேன் நான் கொலை செய்ய விரும்புகின்றேன் நான் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளேன் என அவர்கள் தங்களுக்குள் தெரிவித்துள்ளனர்.

எப்படியும் நாங்கள் கொல்லப்போகின்றோம் பொறுமையாகயிருக்கவேண்டும் என 16 வயது இளைஞன் தெரிவித்துள்ளான்.
அவன் திட்டம் உயிருடன் பிடிபடுவதா இறப்பதா என மற்றுமொரு இளைஞன் கேள்வி எழுப்பியுள்ளான்.
நாங்கள் திட்டமிடப்போகின்றோம் தப்பிப்பதுதான் எங்கள் திட்டம் ஆனால் என்ன நடந்தாலும் அது அல்லாவின் வலிமை என அவன் தெரிவித்துள்ளான்.

அல்லாவின் படைவீரர்கள் என்ற பெயரை இவர்கள் பயன்படுத்தியுள்ளனர் த டெய்லி டெலிகிராவ் தெரிவித்துள்ளது.

இரண்டு இளைஞர்கள் துப்பாக்கிகளை கொள்வனவு செய்யதிட்டமிட்டனர் என காவல்துறையினர் குற்றம்சாட்டவுள்ளனர்.
இந்த இளைஞர்கள் தாங்கள் யாரை இலக்குவைக்கவேண்டும் என்பது குறித்தும் சிக்னலில் உரையாடியுள்ளனர்.
நான் யூதர்களை இலக்குவைக்க விரும்புகின்றேன் என 15 வயது இளைஞன் தெரிவித்துள்ளான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக