திங்கள், 22 ஏப்ரல், 2024

அழகர் ஆற்றிலிறங்கும் திருவிழா. - அசல் குஜராத் வைஷ்ணவ சமாஜ் ஆட்களாய்டுவா...!?

 Seetha Ravi Suresh : வைஷ்ணவ அழகரு
பதினோராம் நூற்றாண்டில் மதுரை பாண்டியர்களுக்கும், நெல்லை பாண்டியர்களுக்கும் நடந்த அரசுரிமைப்போரில், நெல்லை பாண்டியர்கள் முதன்முதலாக கள்ளர்களை அரசுப்படைகளில் சேர்த்துக்கொண்டனர்.
வேள்விக்குடி செப்பேட்டில் கூறுகிறபடி இலங்கை படைகள் பாண்டிய சோழ பகுதிகளை தீக்கிரையாக்கியபோது, நெல்லைப்பாண்டியர்கள் சோழர்களுடன் இணைந்து இலங்கை படைகளை தோற்கடித்தனர்.  இதன் விளைவாக கள்ளர்களுக்கு அரசாங்க அங்கீகாரம் சிறிது கிடைத்தது.
அந்த அங்கீகாரத்தால்தான், மீனாட்சி திருக்கல்யாண கொண்டாட்டங்களில் கள்ளர்களின் சீர்கொண்டுவரும் நிகழ்ச்சிக்கு பகிரங்கமாக கள்ளர்கள் பெருங்கூட்டமாய் கலந்துகொள்ளும் வாய்ப்பும் அளிக்கப்பட்டது. 

நெல்லை சீமையின் உக்கிரபாண்டியனும், விக்கிரம பாண்டியனும் செல்வாக்குபெற்ற காலத்தில்
உதவிசெய்த கள்ளர்களும் அழகர்சாமியை பெரிதுபடுத்தி, மீனாட்சிக்கும் சுந்தரேஸ்வரனுக்கும் மேலானதாக காட்டிக்கொண்டனர். ஒரு திருவிழாவின் மூலமாக சைவத்தை கீழேதள்ளி, வைணவத்தை மேலேற்றிய நிகழ்வே அழகர் ஆற்றிலிறங்கும் திருவிழா.
இக்காலத்தில் மீனாட்சி திருக்கல்யாணம் மறக்கடிக்கப்பட்டுவிட்டது. மாறாக, அழகர் ஆற்றிலிறங்கும் திருவிழாவாக மடைமாற்றப்பட்டுவிட்டது. இதில் ஒரு சாதியின் பங்கும், ஓட்டரசியல் கட்சிகளின் ஒத்தூதலும், சைவத்தைவிட வைஷ்ணவத்தை பெரியதென நிறுவிய பிராமணர்களின் பங்கும் குறிப்பிடத்தக்கது.
அழகர்சாமிக்கு அழகர்சாதின்னு ஒன்று தொடர்ந்துகொண்டேயுள்ளது. அவுகள நாமம்போட வச்சிட்டா, அசல் குஜராத் வைஷ்ணவ சமாஜ் ஆட்களாய்டுவா...!?
மற்றுமொரு நாமசூத்திர சாதியாக கணக்குல சேத்திரலாம் 😀😀😀
புகச்சோவ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக