சனி, 2 மார்ச், 2024

Karnataka வெடித்தது சிலிண்டர் இல்லை.. வீரியமிக்க வெடிகுண்டு- கர்நாடக முதல்வர் சித்தராமையா

மாலை மலர்  : கர்நாடகா மாநிலம், பெங்களூரு வைட் பீல்ட் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் இன்று வெடி விபத்து ஏற்பட்டது. வெடி விபத்தில், உணவகத்தில் இருந்த 3 ஊழியர்கள் மற்றும் ஒரு வாடிக்கையாளர் என 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மாநகர காவல் ஆணையர் விரைந்து ஆய்வு செய்தார். மேலும், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் ஆய்வு நடத்தியுள்ளனர்.
இதில், சிலிண்டர் வெடிக்கவில்லை என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 10 விநாடிகளில் இரண்டு முறை வெடி சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம், கை கழுவும் இடத்தில் நடந்துள்ளதாக தகவல் வெளியானது. வாடிக்கையாளர் விட்டுச் சென்ற பையில் வெடித்ததாக உணவகத்தின் உரிமையாளர் கூறியதாக எம்.பி தேஜஸ்வி சூர்யா எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காயம் அடைந்தவர்களிடமும் தேசிய புலனாய்வு முகமே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நடந்தது குண்டுவெடிப்புதான் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர்,"முதற்கட்ட விசாரணையில் மேலோட்டமாக பார்க்கும் போது IED குண்டு வெடிப்பு போல் தெரிகிறது. ஆனால், இது சிலிண்டர் இல்லை. காவல்துறை முறையான அறிக்கை வழங்கிய பிறகுதான் எந்த தகவலும் தெரிவிக்க முடியும்" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக