வியாழன், 28 மார்ச், 2024

சினிமாஸ் குணரத்தினம் ஏன் சுட்டு கொல்லப்பட்டார்? இனவாதிகளா? இடதுசாரிகளா? யார் குற்றவாளிகள்?

ராதா மனோகர் 
:  இலங்கை திரையுலகின் பிதா மகன் என்றழைக்கப்பட்ட திரு கனகசபை குணரத்தினம் 20 July 1917 – 27 August 1989) அவர்களின் வரலாறு இலங்கை  மக்களால் ஏன் போதியளவு நினைவு கூறப்படுவதில்லை?
இவர் கொழும்பில் வைத்து ஒரு ஆயுத குழுவால் (ஜேவிபி)   சுட்டு கொல்லப்பட்டதாக அந்த காலக்கட்டங்களில் எல்லா ஊடகங்களும் கூறின!
கே குணரத்தினம் இலங்கை திரைப்பட உலகின் ஆதார தூணாக விளங்கியவர் . இது வெறும் அலங்கார வார்த்தை அல்ல.!
32  சிங்கள திரைப்படங்களை தயாரித்து இயக்கி உள்ளார்
அதில்  25 படங்கள் வெற்றி படங்கள், ( Box office hit) . இலங்கையில் வேறு எந்த இயக்குனரும் தயாரிப்பாளரும்  இந்த சாதனைக்கு அருகில் கூட வரமுடியாது.
இலங்கை முழுவதும் பல திரையரங்குகளை சொந்தமாக வைத்திருந்தார்.



இலங்கை திரைப்படங்களை வியாபார ரீதியில் வெற்றிகரமாக்க இவரது திரையரங்குகள் பெரும் வாய்ப்பாக அமைந்தது
அது மட்டுமல்லாமல் ஹெந்தல வத்தலையில் இவர் அமைத்த விஜயா ஸ்டியோ நவீன வசதிகளுடன் கூடியது. அங்கு ஹாலிவூட் படங்களின் படப்பிடிப்புகளும் நடந்தன.


இவர்  கட்டி எழுப்பிய சிங்கள திரை உலகை தமிழர் சொத்தென்று கருதி அழித்தவர்கள் தற்போது அந்த வரலாற்று தவறை உணர்ந்துவிட்டார்கள்!
மறைந்த திரு காமினி பொன்சேகா அவர்கள் ஒரு முறை திரு மகிந்த ராஜபக்சவிடம்
இனி எந்த காலத்திலும் சிங்கள திரையுலகம் மீண்டு எழவே முடியாது ..
குணரெத்த்தினத்தின்  விஜயா ஸ்டூடியோ அழிவோடு எல்லாம் முடிந்துவிட்டது என்று கூறியிருந்தார்
அந்த நெருப்பில் சுமார் 1400 சிங்கள திரைப்படங்களும்   சுமார் முப்பது இலங்கை  தமிழ் திரைப்படங்களும்  எரிந்து சாம்பலாகி விட்டன.
அது ஒரு தமிழரின் ஸ்டுடியோ என்ற காரணத்தில் அவர்கள் அதை எரித்தார்கள் என்று கருதப்பட்ட போதும்
அதை இன்னொரு கோணத்திலும் ஆய்வு செய்தல் அவசியம்.
அக்காலக்கட்டங்களில்  இலங்கை முழுவதும் இந்திய எதிர்ப்பும்  அதைவிட ஒரு கடும் கம்யூனிச கலாச்சார புரட்சி  நடவடிக்கைகளையும் பல இடது சாரி தீவிரவாதிகள் முன்னெடுத்திருந்தார்கள்
அதாவது கம்போடியா செஞ்சினா போன்ற நாடுகளில் நடந்த கலாச்சார புரட்சி போன்ற ஒரு சிந்தனையும் இலங்கையில்  தூவப்பட்ட காலமது.
எனவே அந்த கோணத்தில் சினிமா என்பது கடும் கம்யூனிச பேசியவர்களால் ஒரு கலாச்சார சீரழிவு என்றும் பார்க்கப்பட்டது.
அந்த காரணத்திற்காக கூட குணரெத்தினத்தின் ஸ்டுடியோவும் ஆயிரக்கணக்கான சிங்கள திரைப்படங்களும் கொழுத்த பட்டிருக்கலாம்.
இன்றுவரை இது பற்றி எந்த சமூக ஆய்வாளர்களுக்கும் பெரிதாக பேசவில்லை
அண்மையில்தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா அவர்கள் திரு கனகசபை குணரெத்தினத்தின் வாழ்நாள் சேவையை கருத்தில் கொண்டு அவருக்கு யுகாபிமானி என்ற அதி உயர்ந்த பட்டத்தை வழங்கினார்
குணரெத்தினத்தின் மகள்களான திருமதி பிரியா திருமதி திருமதி விஜயா ஆகியோரிடம் வழங்கினார்!    
திரு குணரத்தினம் அவர்கள்   சினிமா துறையோடு மட்டும் நின்றுவிடாமல் இதர தொழில் துறையிலிலும் வெகு வேகமாக காலூன்றினார்.
சியால் , பைலட் போன்ற எழுதும் பேனாக்கள் இவரின் நிறுவன தயாரிப்புக்கள்தான்
டெக்ஸ்டைல்ஸ் துறையிலும் பெரிய அளவில் ஈடுபட்டார்
 Chairman of K.G. Group of Companies,
Fuji Graphics Ceylon Ltd. And Photo Kina Ltd.
Managing Director of Cine Sounds Sales and Services Ltd.,
Union Carbide Ceylon Ltd., Asbestos Cement Industries Ltd.,
Alhambra Hotels Ltd. And United Spinning and Weaving Mills.[3]
he manufactured ballpoint pens, corrugated cartons and plastic containers.
He also developed state-of-the-art yarn spinning and weaving mills at Ja-Ela with 24,000 Swiss Reiter spindles
which was being expanded into weaving with 200 Picanol water jet looms with 100 looms having been imported in June 1983. They were temporarily stored at the Hendala industrial complex
until the foreign engineers were to install them at the weaving mills in Ja-Ela in August 1983.
திரு கனகசபை குணரத்தினம் பற்றிய செய்திகளை தற்போது படிக்கும் போது ஒரு பக்கம் சொல்ல முடியாத கவலை உண்டாகிறது.
இலங்கையை ஒரு தோல்வி அடைந்த நாடாக்கியவர்கள் யார் என்ற கேள்விக்கு உரிய பதில் இன்னும் சரியாக கிடைக்கவில்லை என்றுதான் கூறவேண்டும்.
வெறுமையாக இனவாதிகளையும் ஊழல் வாதிகளையும் மட்டும் குற்றம் சாட்டமுன்பு திரு குணரத்தனம் என்ற ஒரு உண்மையான   தொழில் புரட்சியாளாரை கொன்றவர்கள் எவ்வளவு பெரிய பொருளாதார அழிவை இலங்கைக்கு ஏற்படுத்தி உள்ளனர் என்று நாம் சிந்திக்க வேண்டும்!
ஆம் சிங்கள சினிமாவை எரித்து சாம்பலாக்கியவர் யார்?
இனவாதிகள் மட்டும்தானா?
போலி இடதுசாரிகளின் பங்கு இதில் என்ன?
சுயசிந்தனை உள்ள மக்கள் தங்கள் தாய்மொழி திரைப்படங்களையே  அதுவும் 1400 திரைப்படங்களை எரிப்பார்களா?
அவை ஒரு தமிழரின் சினிமா என்ற பைத்தியக்கார சிந்தனையை அந்த மக்கள் மீது விதைத்தவர் யார்?
வெறும் இனவாதிகள் மட்டும்தானா?      
இன்றுவரை இந்த இழப்பில் இருந்து மக்கள் விடுபடவில்லையே?
சிங்கள சினிமா மட்டுமல்ல இலங்கை தமிழ் சினிமா கூட இன்னும் உருப்படவில்லையே?
அன்று திரு காமினி பொன்சேகா அவர்கள் திரு மகிந்தா ராஜபக்சவுக்கு கூறிய வரிகள் தீர்க்க தரிசனமாக இன்றுவரை தொடர்கிறதே?
கனகசபை குணரெத்தினத்தின் நிறுவனங்களை அழித்து அவரையும் பட்டப்பகலில் சுட்டு கொன்றதன் மூலம் இலங்கையை பல ஆண்டுகள் பின்னோக்கி தள்ளிவிட்டார்கள்!
அந்த குற்றவாளிகள் இன்றும் மக்களை பாதுகாக்க தங்களை விட்டால் யாருமில்லை என்பது போல முழக்கம் இடுகிறார்கள்.
திரு கனகசபை  குணரெத்தினத்தின் தொழில் சாம்ராஜ்யத்தை நீங்கள் அழித்ததன் மூலம் இலங்கையைதான் அழித்தீர்க்கள் என்பது ஞாபகம் இருக்கட்டும்!
இனியாவது உங்கள் கடந்த கால தவறுகளுக்கு பொதுமன்னிப்பு கோருங்கள்!

May be an image of 4 people and text
 

 Kantheepan Rasiah  : 70, 80 களில் கொடி கட்டி பறந்த சாம்ராஜ்யம் (K.G.Group of Companies)
சிங்கள திரைப்பட veteran producer + Indian films import & distribution
Pilot , Reynold பேனாக்கள்
பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி,
என்று இலங்கைக்கு அறிமும்.
எனது தந்தையார் சினிமாஸ் லிமிடெட்லிலும் (Capital Theatre, Armour Street Kotahena) பின்பு நான் 1978 -1984 லித்தொ பிரின்டிங் பிரிவிலும் (Fuji Graphics) பணியாற்றினோம்
இன்று KG என்ற பெயர் எல்லாமே காணாமல் போய்விட்டது 😴😴😔😔
Due to family mismanagement after KG demise
முதல் முதலாக கொழும்பு/ யாழ்ப்பாண பஸ் சேவை அறிமுகம்
KG Express ... ஞாபகம் இருக்கா??
யூலை 1983 கலவரம் ஆரம்பமே Narahenpita KGக்கு சொந்தமான Kirula Studio , KG busses ,Photokina Fuji film Laboratory & Storage facilities எரிப்பு
அடுத்த நாள் காலை Sangaraja Mawatha KG Head office , Printing & Pen manufacturing unit ...இரவு Hendala Vijaya Studio, Corrugated factory & plastic factory , most the company vehicles etc ..
நான்.. இவற்றை எல்லாம் நேரில் கண்ணால் பார்த்து அழுதேன்.

Alex EraviVarma : Kantheepan Rasiah
Seems all well planned...

Kantheepan Rasiah : Alex EraviVarma
Not planned ...total mismanagement & internal family issues lead the group collapse

Kantheepan Rasiah : Alex EraviVarma
After the 83 Riots he build back the all the factories & resume normal business.
After his sudden tragic demise all went wrong ..

Alex EraviVarma  : Kantheepan Rasiah
My friend's fly's very close friends are them.
Here I'm saying about whatever happened in 1983...

Alex EraviVarma  :  Kantheepan Rasiah
Yes...
You may know why...
Family issues...

Radha Manohar :  Kantheepan Rasiah thank you very much for sharing your personal experiences and valuable information . Actually we have to bring this knowledge to the people as a lesson . end of the day we srilankans destroy our own factories and our own cinema and our own economy . lesson for future ..

Kantheepan Rasiah  :  Radha Manohar Much worries still the same going on ...
Hoping Alpha generation might come over these issues 😕

Janan Jananayagan  :  Kantheepan Rasiah KG என்னும் பெயரில் மை விட்டு எழுதும் பேனா அந்தக் காலத்தில் இருந்தது.


Alex EraviVarma :  Annesley Ratnasingham
Whoever killed Gunarstnam will realize now... Or will accept their fault in open...?

Annesley Ratnasingham  : Alex EraviVarma .... yes and காரணத்தை வெளிப்படுத்த வேண்டும் ...Gunarstnam ஒரு அரசியல்வாதி அல்ல ...அப்போ எதற்காக JVP கொலை செய்தார்கள்....The reason should be revealed...Gunarstnam is not a politician...Then why did JVP kill him?...

Kantheepan Rasiah Alex EraviVarma
Killing reason was due his Kapuwatta Jaela Spinning & weaving mill expansion with India's Aravind mills + Employees trade union strike matter ..
Later his demise mismanagement of family members lead to collapse of entire group
It's a long story ..
Now days new generation no clue or idea about KG group

Sivananthan Muthulingam  :  மாதம்பையில் அவருக்கு பல தென்னம் தோட்டங்கள் இருந்தன. அங்கு ஒரு சினிமா ஷூட்டிங் நடந்த போது பார்த்திருக்கிறேன். அங்குள்ள சிங்கள மக்கள் அவரை எவ்வளவு மதிப்பாக நடத்தினார்கள் என்பதையும் அறிவேன். கொழும்பில் கலவரங்கள் உண்டாக்குவது யு என் பி + ஜே வி பி கும்பல்கள். பாதிரிகள் பக்கப்பாட்டு பாடுவார்கள். 1983 கலவரத்தின் போது தப்பி ஓடிய தமிழர்களுக்கு பாதிரிகள் அடைக்கலம் கொடுக்கவில்லை. பிரேமதாசவின் கும்பல்களே குணரத்தினம் அவர்களின் அழிவுக்குக் காரணமானவர்கள். அனுரா கும்பல் இன்று புலிகளின் எசமானர்களால் இயக்கப்படுகிறது. தேர்தலின் பின்னர் ஒரு இனக்கலவரத்தை எதிர்பார்க்கலாம்.

TamilAchievers :  August 20 ·
Remembering a man who did so much for Sinhala film '' Cinemas " K.Gunaratnam .
(Courtesy: Shankar Shan)
“Kanagasabai Gunaratnam, pioneer film producer and chairman of several companies, was born on 30th July 1917 in Athiyadi. His ancestors were from Nallur, Jaffna. Starting from humble beginnings in the cinema industry, he rapidly achieved a leading position. When the production of Sinhala films ceased in India, he boldly pioneered a film production studio in Ceylon and made a success of the venture. He is said to have produced over twenty five Sinhala films during the first few years of operation. What is more, Cinemas were organized all over the island for showing the films. With all these activities he became popularly known as ‘Cinemas Gunaratnam’.....

May be an image of 9 people, street, Tokyo Tower and text

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக