வியாழன், 14 மார்ச், 2024

தமிழ்நாட்டில் அடுத்து ஆட்சிக்கு வருபவருக்கு 3 வருடம்தான் பதவி! ஒரே நாடு ஒரே தேர்தல்.. ஷாக் பரிந்துரை

tamil.oneindia.com - Shyamsundar I  : சென்னை: ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக செய்யப்பட்டுள்ள பரிந்துரைகள் அரசியல் களத்தில் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு இன்று டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்ப்பித்தது.
One Nation One Election Tamil Nadu to lose 2 years of Term with the new rule if it is implemented
கடந்த சில மாதங்களுக்கு முன் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க மத்திய அரசு குழு ஒன்றை அமைத்தது. இந்தக் குழுவுக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமை தாங்குவார். இந்த குழு கடந்த சில மாதங்களாக பின் வரும் ஆய்வுகளை மேற்கொண்டது.பல மாநில தேர்தல்களோடு சேர்த்து ஒரே நேரத்தில் லோக்சபா தேர்தலை நடத்தலாம். இதற்காக லோக்சபா தேர்தலை முன்கூட்டியே நடத்தலாம். பின்வரும் மாநிலங்களில் சட்டசபை முடிவிற்கு வரும் தேதிகள் பின்வருமாறு: . ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம்: ஜூன் 2024 4. ஹரியானா, மகாராஷ்டிரா: நவம்பர் 2024 5. ஜார்கண்ட்: டிசம்பர் 2024 6. : பிப்ரவரி 2025 7. பீகார்: நவம்பர் 2025 8. அஸ்ஸாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம்: மே 2026 9. புதுச்சேரி: ஜூன் 2026 10.கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகண்ட்: மார்ச் 2027 11.உத்திரப் பிரதேசம்: மே 2027 12. குஜராத், இமாச்சல பிரதேசம்: டிசம்பர் 2027 13. மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா: மார்ச் 2028 14. கர்நாடகா: மே 2028

இதனால் இந்த தேர்தல்களை சேர்த்து நடத்தலாமா என்ற ஆய்வுகளை மேற்கொண்டது. இந்த குழு இன்று டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்ப்பித்தது.

அதில் 2029ல் லோக்சபா தேர்தலை மாநில தேர்தல்களோடு ஒரே நாடு ஒரே தேர்தல் என்று நடத்த பரிந்துரை செய்துள்ளனர். எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் 2029 முதல் மக்களவை மற்றும் சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்த வேண்டும் .

2026, 2027 மற்றும் 2028ல் சட்டசபை தேர்தல் நடைபெறும் மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களுக்கு, புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் மாநில அரசுகளின் பதவிக்காலம் 2029 வரை மட்டுமே இருக்கும். அதாவது 2026ல் தமிழ்நாட்டில் முதல்வராகும் நபருக்கு 3 ஆண்டுகள் மட்டுமே பதவிக்காலம்.

2029 முதல், லோக்சபா மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்கள் ஒன்றாக நடத்தபடும். இதனால் . 2026ல் தமிழ்நாட்டில் முதல்வராகும் நபரின் ஆட்சி 2029லேயே முடிவிற்கு வரும்.

விவாதம்; ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக செய்யப்பட்டுள்ள பரிந்துரைகள் அரசியல் களத்தில் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்தக் குழு 18,626 பக்கங்களைக் கொண்ட அறிக்கையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் ராஷ்டிரபதி பவனில் சமர்ப்பித்ததாக ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராஜ்யசபாவின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், 15வது நிதிக் கமிஷன் தலைவர் என்.கே. சிங், லோக்சபா முன்னாள் பொதுச் செயலர் சுபாஷ் சி. காஷ்யப் உள்ளிட்ட குழு உறுப்பினர்களும் ராஷ்டிரபதி பவனில் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக