வியாழன், 14 மார்ச், 2024

இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி.. ரூ.13 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்.. காரணம் என்ன?

tamil.goodreturns.in  -  Goodreturns Staff :  மும்பை: இந்திய பங்குச்சந்தை புதன்கிழமை (மார்ச் 14,2024) கடுமையான வீழ்ச்சியை கண்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 950 புள்ளிகள் சரிந்து 73,000க்கு கீழ் சென்றது, அதே போல நிஃப்டி 22,000க்கும் கீழ் சென்றது. இதனால் முதலீட்டாளர்கள் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர்.
குறிப்பாக ஸ்மால் கேப் நிறுவன பங்குகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. ஒரே நாளில் ஸ்மால் கேப் இண்டெக்ஸ் 5% சரிந்துள்ளது. கடந்த டிசம்பர் 2022ஆம் ஆண்டுக்கு பின் முதன்முறையாக சிறு நிறுவன பங்குகள் மோசமான வீழ்ச்சியை கண்டுள்ளன, மிட் கேப் நிறுவன பங்குகள் 3% மைக்ரோ கேப் மற்றும் எஸ்எம்ஈ பங்குகள் 5% சரிந்துள்ளன.
இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி.. ரூ.13 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்.. காரணம் என்ன?
மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த பங்கு மதிப்பு 13 லட்சம் கோடி ரூபாய் சரிந்து 372 லட்சம் கோடி என குறைந்துவிட்டது. அதுமட்டுமின்றி மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள 200 பங்குகள் 52 வார கால வீழ்ச்சியை கண்டுள்ளன.

இந்திய பங்குச்சந்தைகளின் இன்றைய சரிவு உலகளாவிய பங்குச்சந்தைகளுக்கு எதிராக உள்ளது ஏனெனில் எஸ்&பி500 ஒரே இரவில் வரலாறு காணாத உயர்வை கண்டது. வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களும் இந்திய பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த மாதத்தில் மட்டும் இந்திய பங்குச்சந்தையில் 3 பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளனர். எனவே உள்நாட்டு காரணிகள் சந்தை வீழ்ச்சிக்கு அழைத்து சென்றுள்ளன.

செபியின் அறிவுறுத்தல்: சிறிய மற்றும் நடுத்தர முதலீட்டாளர்களின் நலன்களை பாதுகாக்க ஒரு முறையை அமைக்க வேண்டும் என பரஸ்பர நிதியங்களுக்கு கடந்த மாதம் செபி உத்தரவிட்டது. இதனை அடுத்து ஐசிஐசிஐ புருடென்சியல் பரஸ்பர நிதியம், ஸ்மால் கேப் மற்றும் மிட்கேப் நிதிகளில் ஒரே முறை பணம் செலுத்தி செய்யப்படும் முதலீடுகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. பரஸ்பர நிதியங்கள் மேற்கொண்டு வரும் இது போன்ற நடவடிக்கைகளால் பங்குகள் வீழ்வதாக சொல்லப்படுகிறது.

அதிகளவிலான மதிப்பீடுகள்: நவம்பர் மாதத்தில் இருந்து வலுவான எழுச்சிக்குப் பிறகு உள்நாட்டு பங்குச் சந்தையானது கணிசமான அளவு விற்பனையை சந்தித்து வருகிறது என்கின்றனர் நிபுணர்கள். அதிகளவிலான மதிப்பீடுகள் காரணமாக ஸ்மால் கேப் சந்தை பிரிவு பபுல் நிலையில் இருப்பதாகவும் , இதுவே ஸ்மால் கேப் பங்குகளின் வீழ்ச்சிக்கு காரணம் என்றும் பங்குச்சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.

சில்லறை பணவீக்கம்:கடந்த வாரம் சந்தை மதிப்பீடுகள் புதிய சாதனைகளை எட்டி இருந்தாலும் தற்போது வீழ்ச்சியை சந்திப்பது கவலையை தருவதாக முதலீட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். சந்தைக்கு புதிய நேர்மறை தூண்டுதல்கள் தேவைப்படும் என்றும் கூறுகின்றனர்.

அதுமட்டுமின்றி பிப்ரவரி மாதத்திற்கான இந்தியாவின் சில்லறை பணவீக்கம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காட்டவில்லை, ஜனவரி மாதத்திற்கான தொழிற்சாலை உற்பத்தி மதிப்பீடுகள் எதிர்பார்த்ததை விட பலவீனமாக இருக்கின்றன ஆகிய காரணங்களை சுட்டிக்காட்டுகின்றனர்.

நிதியாண்டின் இறுதி: நிதியாண்டின் முடிவு காலம் என்பதால் பெரும்பாலானவர்கள் பங்குகளை விற்பதும் ஒரு காரணம் என தெரிய வந்துள்ளது. கார்ப்பரேட் மற்றும் நிறுவன முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று பணமாக்கி, பேலன்ஸ் ஷீட்டுகளை அப்டேட் செய்வதாலும் , அட்வான்ஸ் டேக்ஸுக்காக சில நிறுவனங்கள் பங்குகளை விற்பதாலும் பங்குச்சந்தைகள் வீழ்ந்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

Story Written by: Devika

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

investor 13 lakh crore lost; key reasons behind Sensex crash today.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக