ஞாயிறு, 10 மார்ச், 2024

21 தொகுதியில் நேரடியாக களமிறங்கும் திமுக.. கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் லிஸ்ட் இதுதான்!

 tamil.oneindia.com - Vignesh Selvaraj : :சென்னை: திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 சீட் ஒதுக்கி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் திமுக கூட்டணியில் கட்சிகளுக்கு சீட் ஒதுக்கீட்டை நிறைவு செய்துள்ளது திமுக. கூட்டணி கட்சிகளுக்கு 19 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
கூட்டணி கட்சிகளுக்கு 19 இடங்களை திமுக ஒதுக்கியுள்ள நிலையில், மீதமுள்ள 21 இடங்களில் திமுக நேரடியாக களமிறங்க உள்ளது. கடந்த முறை 20 சீட்களில் நேரடியாக போட்டியிட்டது திமுக. இந்த முறை அதைவிட கூடுதலாக 1 இடத்தில் களமிறங்க உள்ளது.
DMK has completed allotment of seats to the parties in the alliance for lok sabha election
திமுக கூட்டணியில் கட்சி வாரியாக தொகுதிகள்:
காங்கிரஸ் - 10 சீட்
விசிக - 2
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 2
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 2
மதிமுக - 1
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி - 1
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 1
மக்கள் நீதி மய்யம் - 1 ராஜ்யசபா சீட்

இதில், காங்கிரஸ், விசிக, மதிமுக, முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தனிச் சின்னத்தில் போட்டியிட உள்ளன. ஈ.ஆர்.ஈஸ்வரன் தலைலையிலான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மட்டும் நாமக்கல் தொகுதியில் திமுக சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளது.

தமிழகத்தில் லோக்சபா தேர்தலை ஒட்டி கூட்டணி பேச்சுவார்த்தைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. தொகுதி பங்கீட்டை முதல் அணியாக முடித்துள்ளது திமுக கூட்டணி. நேற்று வரை இந்திய யூனியன் முஸ்லீக் லீக் 1, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 1, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2, இந்திய கம்யூனிஸ்ட் 2, மதிமுக 1, விடுதலை சிறுத்தைகள் 2 என தொகுதி உடன்படிக்கை கையெழுத்தாகி இருந்தது.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை திமுக நடத்தி வந்த நிலையில், இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் உடன்பாடு கையெழுத்தானது. அதன்படி, மநீம கட்சிக்கு ஒரு ராஜ்யசபா இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த லோக்சபா தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு சீட் ஒதுக்கப்படவில்லை.

திமுக கூட்டணியை பொறுத்தவரை, இரண்டாவது பெரிய கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை சீட் என்பது தான் எதிர்பார்ப்பை எகிற வைத்து வந்தது. கடந்த மாதம் 28ஆம் தேதி முதல் கட்ட கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து, தொலைபேசி மூலமாக திமுக தரப்புடன் காங்கிரஸ் மேலிட தலைவர்களும் பேசி வந்தனர்.

ஓவர்.. ஓவர்! காங்கிரஸ் கட்சிக்கு 10 சீட்! திமுக காங்கிரஸ் இடையே இன்று தொகுதி பங்கீடு கையெழுத்தானது!ஓவர்.. ஓவர்! காங்கிரஸ் கட்சிக்கு 10 சீட்! திமுக காங்கிரஸ் இடையே இன்று தொகுதி பங்கீடு கையெழுத்தானது!

இந்நிலையில், திமுக - காங்கிரஸ் இடையே இன்று தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன்படி காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரியுடன் இணைந்து மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் கையெழுத்திட்டனர்.

தொகுதிப் பங்கீட்டுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், "மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் என மொத்தம் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். இந்த தொகுதிப் பங்கீட்டின் மூலம் திமுக மற்றும் காங்கிரஸை பிரிக்க முடியாது என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தொகுதிப் பங்கீடு எண்ணிக்கை பகிர்வு முடிவடைந்திருந்தாலும், எந்தெந்த தொகுதி என்பது இன்னும் உறுதியாகவில்லை. திமுக கூட்டணியில் இதுவரை 2 கட்சிகளுக்கு மட்டுமே தொகுதிகள் அடையாளம் கண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் கொமதேக, ராமநாதபுரம் தொகுதியில் இந்தியன் யூனியன் முஸ்லீம் கட்சி ஆகியவை போட்டியிட உள்ளன. மற்ற கட்சிகளுக்கான தொகுதிகள் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக