ஞாயிறு, 11 பிப்ரவரி, 2024

கலா மாஸ்டர் : யாழ்ப்பாண ஹரிஹரன் தமன்னா நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது . தடைப்படவே இல்லை .ஒரு இலட்சத்தி இருபதாயிரம் ரசிகர்கள்

யாழ்ப்பாண இசை நிகழ்ச்சி பெருவெற்றி - கலா மாஸ்டர்
சுமார் ஒரு இலட்சத்தி இருபதாயிரம் பேர் நிகழ்ச்சியை ரசித்தார்கள்
ஆர்வ கோளாறால் சிறிய குளறுபடி நடந்தது .
ஆனால் அதன் காரணமாக நிகழ்ச்சி பெரிய தடங்கல் ஏற்படவே இல்லை.
சில நிமிடங்களில் அது சரி செய்யப்பட்டது
சில ஊடகங்கள் தவறாக சித்தரித்தன. ஆனால் அது உண்மையல்ல
இந்த நிகழ்வின் மூலம் எதிர்காலத்தில் இன்னும் பல பல நிகழ்வுகள் நடக்க இருக்கிறது
யாழ்ப்பாண மக்களை நெகடிவாக சித்தரிக்க சிலர் முயல்கிறார்கள்
அதை செய்யவேண்டாம் என்று வேண்டி கொள்கிறோம்  .. கலா மாஸ்டர் .
யாழில் நிகழ்ச்சியை வெற்றிகரமாக முடித்து அனைத்து கலைஞர்களும் திருப்தியாக நாடு திரும்பியுள்ளதாக ஹரிஹரன் இசை நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டு குழுப் பணிப்பாளர் ஷியா உல் ஹசன் ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.
மேலும், “இந்தியாவில் கூட இவ்வளவு பெரிய ரசிகர்களை நாங்கள் பார்வையிடவில்லை. மக்கள் இவ்வளவு அன்பு கொடுத்ததை தாங்கள் பார்த்ததில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நிகழ்ச்சி இடைநடுவில் நிறுத்தப்படவில்லை. முழுமையாக நடாத்தப்பட்டது. இடையில் சிறிது நேரம் மாத்திரமே நிறுத்தப்பட்டது.
யாழ்ப்பாண மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரபல பாடகர் ஹரிஹரன்
மக்களின் உணர்வின் வெளிப்பாடு
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் குறை என இதனை கூற முடியாது. மக்களின் உணர்வின் வெளிப்பாடு என்றே கூற வேண்டும்.
அருமையான நிகழ்ச்சி. இப்படியான ஒரு நிகழ்ச்சி கொழும்பில் கூட நடாத்தப்படவில்லை. இவ்வளவு நட்சத்திரங்களையும் பார்த்ததன் பிறகு அவர்கள் தமது உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள்.
யாருக்கும் எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக அறிவிப்பொன்று மாத்திரம் விடுக்கப்பட்டது. ஆனால், நிகழ்ச்சியை முழுமையாக நடாத்தினோம்.  எதிர்பார்க்க முடியாத கூட்டம் வந்தது.
பெரிய பிரச்சினை இல்லை
இவ்வளவு பெரிய ரசிகர்கள் ஒன்று கூடினால், எந்தவொரு ஏற்பாட்டாளராலும் கட்டுப்படுத்த முடியாது.
ஏற்பாட்டாளர்களின் பிழை என்று சொல்வதற்கு எதுவும் நடக்கவில்லை. ரசிகர்கள் முன்னோக்கி நகர்ந்தார்கள். அவ்வளவு தான். அதுவொரு பெரிய பிரச்சினை கிடையாது. அது மக்களின் உணர்வு வெளிப்பாடு. வெளிப்படுத்தி விதம் வித்தியாசமாக இருந்தது.
இந்தியாவில் கூட இவ்வளவு பெரிய ரசிகர்களை நாங்கள் பார்வையிடவில்லை” என கலைஞர்கள் கூறியதாக நிகழ்ச்சியின் ஏற்பாட்டு குழு கூறியுள்ளது.
தொழிலதிபர் இந்திரன் பத்மநாதன்
வடக்கில் பெரும் முதலீட்டை ஏற்படுத்தும் நோக்கில் தொழிலதிபர் இந்திரன் பத்மநாதனால் யாழில் மாபெரும் இசை நிகழ்ச்சி நேற்றையதினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த நிகழ்ச்சியின் ஏற்பாடுகள் மூன்றாம் தரப்புக்கு வழங்கப்பட்டிருந்தது.
இவ்வாறு மூன்றாம் தரப்புக்கு வழங்கப்பட்டிருந்த நிகழ்ச்சி ஏற்பாடுகள் முறையானாவிதத்தில் கையாலாமையே அங்கு ஏற்பட்ட குழப்ப நிலைக்கு காரணம் என அரசியல் மற்றும் சமூக தரப்புகளில் இருந்து அறிக்கைகளும் வெளியாகியுள்ளன.
நன்றி  Lankasri

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக