திங்கள், 12 பிப்ரவரி, 2024

கட்டார் சிறையில் இருந்து 8 இந்திய முன்னாள் கடற்படை வீரர்களும் விடுதலை

மாலை மலர் : இந்தியாவைச் சேர்ந்த முன்னாள கடற்படை வீரர்கள் 8 பேர் உளவு பார்த்ததாக கத்தார் அரசு குற்றஞ்சாட்டி கைது செய்து சிறையில் அடைத்தது. அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் நீதிமன்றம் அவர்களுக்கு தூக்குத்தண்டனை வழங்கியது.
இதனைத் தொடர்ந்து அவர்களின் தண்டனையை குறைக்க இந்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இதனால் அவர்களின் தூக்குத்தண்டனை ரத்து செய்யப்பட்டு ஜெயில் தண்டனையாக மாற்றப்பட்டது.
இந்த நிலையில் தற்போது அந்த 8 முன்னாள் அதிகாரிகளையும் கத்தார் அரசு விடுதலை செய்துள்ளது. அவர்களில் ஏழு பேர் இந்தியா வந்தடைந்துள்ளனர் என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக